புதன், மார்ச் 07, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 4

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 4

இன்றைய பகுதியை தொடங்குவதற்கு முன் ஒரு சிறு குறிப்பு (உபயம்: எனது கல்லூரி நண்பன் திரு.விஜயராகவன்): ஸ்ரீபீஷ்மாச்சார்யர் சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரனுக்கு நால்வகை வர்ணத்தவரின் தர்மம் மற்றும் நால்வகை ஆஸ்ரமிகளின் தர்மம் ஆகியவற்றை தெளிவுற உபதேசம் செய்கிறார். அவற்றையெல்லாம் கேட்ட பின்பும் (பின்வரும் காலங்களில், குறிப்பாக கலியுகத்தில் இவற்றை கடைபிடிக்க முடியுமா என்ற கவலை எழுந்ததாலோ என்னவோ) கேள்விகளை கேட்டான்.

2. யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்||

யுதிஷ்டிரர் கூறுகிறார்:
உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்? எவர் எவர் அடையத்தகுந்த இலக்காவார்? மக்கள் நன்மை அடைய யாரை துதிக்க வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?

இந்த முதல் ஸ்லோகத்தில் நான்கு கேள்விகளை யுதிஷ்டிரர் கேட்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முதல் கேள்வி – கிமேகம் தைவதம் லோகே

கிமேகம் தைவதம்: தேவ இத்யர்த்த: ஸ்வார்த்தே தத்தித ப்ரத்யய விதானாத்
இங்கு ‘தேவன்’ (கடவுள்) என்பதைக் குறிக்கவே ‘தைவதம்’ என்ற சொல் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.

லோகே லோகனஹேதுபூதே ஸமஸ்த வித்யாஸ்தானே உக்தம் ‘யதாஞ்யா ப்ரவர்தந்தே ஸர்வே’ இதி ப்ரதம: ப்ரஶ்ன:

அனைத்து வித்யைகளிலும் ஞான ஸ்வரூபமாய் விவரிக்கப்படும் ஒரே கடவுள் யார்? ‘யவருடைய ஆணையினால் அனைத்து ஜீவ ராசிகளும் படைக்கப்படுகின்றன’ என்று அவரைப்பற்றி குறிப்பிடுகின்றனர். இது முதல் கேள்வியாகும்.

இந்த நிறத்தில் உள்ளவை ஸ்ருதி (வேதம் மற்றும் உபநிஶத்) வாக்யங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக