திங்கள், மார்ச் 19, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 11


த்ருதீயம் பிரஶ்னம் பரிஹரதி உத்தரைஸ் த்ரிபி: பாதை:

அடுத்த மூன்று பாதங்களால் மூன்றாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.


அநாதிநிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |

லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||

அநாதியானவரும், எங்கும் வ்யாபித்திருப்பவரும், அனைத்து உலகங்களுக்கும் நியமன அதிகாரிகளுக்கும் ஸ்வாமியான, மஹேச்வரரான, இந்த உலகத்தை ஆள்பவரான அந்த பரம்பொருளை எப்பொழுதும் துதிக்கும் மனிதன் (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம்) ஆகிய மூவகை துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

அநாதிநிதனம் ஷட்பாவவிகாரவர்ஜிதம் உருவாதல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் ஆகிய ஆறு வகை விகாரங்களற்றபடியால் ‘அநாதியானவரும்’

விஶ்ணும் வ்யாபனஷீலம் எங்கும் வியாபித்திருப்பதால் ‘விஶ்ணு’ என்று அழைக்கப்படுபவரும்

ஸர்வம் லோக்யதே இதி லோகோ த்ருஷ்யவர்கோ லோகஸ்தஸ்ய நியந்த்ருணாம் ப்ரஹ்மாதீநாமபீஷ்வரத்வாத் ஸர்வலோக மஹேஶ்வர: தம் கண்ணுக்கு தெரியும் (மற்றும் தெரியாத) அனைத்து பதார்த்தங்களுக்கும், இந்த உலகிலுள்ள அனைத்து பதார்த்தங்களுக்கும் நியாமகராக விளங்கும் பிரம்மா முதலானோருக்கும் ஸ்வாமியான படியால் ‘அனைத்து உலகத்திற்கும் மஹேச்வரன்’ என்று அழைக்கபடுபவரும்

லோகம் த்ருஷ்யவர்கம் ஸ்வாபாவிகேன போதேன சக்ஷாத்பஷ்யதீதி லோகாத்யக்ஷ: தன் இயற்கையான ஞானத்தால் அனைத்தையும் அறிகின்றபடியால் அனைத்துலகங்களிலும் ஆளுமை செலுத்தவல்லவருமான அந்த பரம்பொருளை

தம் நித்யம் நிரந்தரம் எப்பொழுதும்

ஸ்துவன் ஸர்வது:காதிகோபவேத் இதி த்ர்யானாம் ஸ்தவனார்ச்சனஜபானாம் சாதாரணம் ஃபலவசனம் துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான். இவ்வாறு இங்கு துதித்தல், அர்ச்சனை செய்தல் மற்றும் ஜபம் செய்தல்ஆகிய மூன்றிற்கும் ஒரே பலன் உரைக்கப்பட்டுள்ளது.

ர்வான்யாத்யாத்மிகாதீனி து:கான்யதீத்ய கச்சதீதி ஸர்வது:காதிகோ பவேத் ஸ்யாத்.

(இவ்வாறு துதிப்பதால் ஒருவன்) ஆத்யாத்மிகம் (தன் கர்மவினைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிபௌதிகம் (புயல், மழை போன்ற இயற்கை உபாதைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிதைவிகம் (நம்மை சோதிக்கும் பொருட்டு தேவதைகள் ஏற்படுத்தும் துயரங்கள்) ஆகிய மூவகை துயரங்களையும் முழுமையாக தாண்டுகிறான் அல்லது மூவகை துயரங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுகின்றான்.

புனரபி தமேவ ஸ்துத்யம் விஶிநஶ்டி
இதுவரை கூறப்பட்ட துதி, ஜபம் மற்றும் பூஜைக்கு உரியவரான அந்த பரம்பொருளின் விஶேஶணங்கள் (சிறப்பான லட்சணங்கள், அடுத்த ஸ்லோகத்தில்) மீண்டும் உரைக்கப்படுகிறது.

ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஞ்யம் லோகானாம் கீர்த்திவர்த்தனம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூதபவோத்பவம்||

எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ, அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, அனைத்து ஜீவராசிகளின் புகழை  அதிகரிப்பவரோ, அனைத்துலகையும் ஆள்பவரோ, மிகவுயர்ந்த உண்மையானவரோ, அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

ப்ரஹ்மண்யம் ப்ரஹ்மணே ஸ்ரஶ்ட்ரே ப்ராஹ்மணாய தபஸே ஶ்ருதயே ஹிதம் எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ,

ர்வான் தர்மான் ஜானாதீதி ஸர்வதர்மஞ்ய அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, 

தம் லோகானாம் ப்ராணிநாம் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும்,

கீர்த்தய: யஶாம்ஸி ஸ்வக்த்யானுப்ரவேஶேன, வர்தயதீதி தம் தன்னுடைய சக்தியால் பிரவேசித்து (உள்நுழைந்து) அவற்றின் புகழை (கீர்த்தியை) அதிகரிப்பவரோ 

லோகைர்நாத்யதே லோகானுபதாபயதே ஶாஸ்தே லோகானாமீஶ்ட இதி வா லோகநாத: தம் அனைத்துலக ஜீவராசிகளாலும் ப்ரார்த்திக்கபடுபவரோ, அவற்றை ஆள்பவரோ

மஹத் ப்ரஹ்ம விஶ்வோத்கர்ஶேண வர்த்தமானத்வாத் மஹத்பூதம் பரமார்த்தஸத்யம் தன்னுடைய அபரிமிதமான சக்தியினால் முக்காலங்களிலும் (குறிப்பாக எதிர்காலத்திலும்) இருப்பதால் மிகவுயர்ந்த உண்மையானவரோ 

ஸர்வபூதானாம் பவ: ஸம்ஸாரோ யத்ஸகாஶாதுத்பவதீதி ஸர்வபூதபவோத்பவ: தம் எவருடைய இருப்பின்மூலமே அனைத்து ஜீவராசிகளின் உற்பத்தியும் ஸம்ஸாரத்தின் உற்பத்தியும் உண்டாவதால் அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக