வியாழன், மார்ச் 08, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 5


2.  இரண்டாம் கேள்வி – கிம்வாப்யேகம் பராயணம்


கிம்வாப்யேகம் பராயணம்: அஸ்மின்லோகே ஏகம் பராயணம் ச கிம்? ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?

பரம் மிகச்சிறந்த அயனம் சென்று ப்ராப்தவ்யம் அடையக்கூடிய ஸ்தானம் இலக்கு யஸ்மின் நிரீக்ஷதே கருதப்படுவது (யாதெனின்)
“பித்யதே ஹ்ருதயக்ரந்திஷ்சிந்த்யதே ஸர்வஶம்ஶயா|
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே||  
(முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
“காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன”

இதி ஶ்ருதே: ஹ்ருதயக்ரந்திர்பித்யதே|
என்ற ஸ்ருதி வாக்கியத்தின் படி யாரை உணர்ந்தறிவதன் மூலம் நம் மனதிலுள்ள ஐயப்பாடுகள் அனைத்தும் விலகுகின்றன (ஐயப்பாடுகள் என்னும் முடிச்சுகள்  அவிழ்ந்து போகின்றன)?

யஸ்ய விஞ்ஞானமாத்ரேண னந்தலக்ஷணோ மோக்ஷ: ப்ராப்யதே யாரை அறிந்த உடனேயே ஆனந்தமயமான முக்தி (மோக்ஷம்) கிடைக்கிறதோ, 

யத்வித்வான்ன விபேதி குதஸ்ஶ யாரை அறிந்தவன் எந்த பயமும் கொள்வதில்லையோ 

யத்ப்ரவிஶ்டஸ்ய ந வித்யதே புணர்பவ: எவருக்குள் (முக்தி அடைந்து அத்விதீயமாய்) ஐக்கியமானவர் மீண்டும் பிறப்பதில்லையோ 

யஸ்ய ச வேதனாத்ததேவ பவதி,  ‘ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி (முண்டக உபநித் 3.2.9)’ இதி ஶ்ருதே:| ‘எவன் ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே மாறி விடுகிறான்’ என்ற வேத வாக்கியத்தின் படி யாரை அறிவதின் மூலம் மனிதன் அவராகவே (அறியப்படும் பொருளாகவே) மாறி விடுகிறானோ

யத்விஹாயாபர: பந்தா ந்ருணாம் நாஸ்தி, ‘நான்ய: பந்தா வித்யதேSயனாய (ஸ்வேதாஶ்வதர உபநித் 9.15)’ இதி ஶ்ருதே:| ‘மோக்ஷத்திற்கு வேறொரு வழி இல்லை’ என்ற ஸ்வேதாஶ்வதர உபநித் வாக்கியத்தின் படி எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ 

ததுக்தமேகம் பராயணம் லோகே யத்தத் கிமிதி த்விதீய: ப்ரஶ்ன: | இவ்வாறு உலகத்தின் ஒரே பரம இலக்காக (மார்கமாக) கூறப்படுபவர் யார்? இது இரண்டாவது கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக