கிமேகமிதி ஷட்ப்ரஷ்னா: கதிதா: | தேஷு பாஷ்சாத்யோSநந்தரோ ஜப்யவிஷய:
ஷஷ்ட: ப்ரஷ்னோSனேன ஸ்லோகேன பரிஹ்ரியதே |
இங்கு
(யுதிஷ்டிரர்) ‘ஒரே கடவுள் யார்?’ என்று தொடக்கமாக கேட்ட ஆறு கேள்விகளில், கடைசி ‘யாரை
ஜபம் செய்யவேண்டும்’ என்று கேட்கப்பட்ட ஆறாம் கேள்விக்கு முதலில் இந்த கீழ்க்கண்ட
ஸ்லோகத்தின் மூலம் (பீஷ்மர்) விடையளிக்கிறார்.
ஸ்ரீபீஷ்ம உவாச:
ஜகத்ப்ரபும் தேவதேவமனந்தம் புருஶோத்தமம் |
ஸ்துவன்னாமஸஹஸ்ரேன புருஶ: ஸததோத்தித: ||
(பீஷ்மர் கூறுகிறார்):
உலகின்
நாயகனாய், கடவுட்கெல்லாம் கடவுளாய், எல்லைகளற்று இருப்பவனான, பரம்பொருளை,
எவனொருவன் (அந்த பரம்பொருளின்) ஆயிரம் திவ்ய நாமங்களை சொல்லி அன்றாடம்
வழிபடுகின்றானோ அவன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.
ஸர்வேஷாம் பஹிரந்த: ஷத்ரூனாம் பயஹேதுர் பீஷ்ம: அனைத்து உள் மற்றும் புற எதிரிகளை பயமடைய
செய்வதால் பீஷ்மர் என்று பெயர் பெற்றவரான தேவவ்ரதர்
மோக்ஷதர்மாதீனாம் ப்ரவக்தா ஸர்வஞ்ய: அனைத்தும் அறிந்தவர் மற்றும் மோக்ஷ தர்மத்தை
போதிக்கவல்லவரும் ஆவார்
ஜகத் ஸ்தாவர ஜங்கமாத்மகம் தஸ்ய உலகிலுள்ள அனைத்து ஸ்தாவரம் (அசையாதன) மற்றும்
ஜங்கமம் (அசைவன) ஆகியவற்றின்
ப்ரபு ஸ்வாமினம் ஸ்வாமியானவரும்,
தேவதேவம் தேவானாம் ப்ரஹ்மாதீனாம் தேவம் ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனானவரும்,
அனந்த தேஷத: காலதோ
வஸ்துதஷ்சாபரிச்சின்னம் தேசம் (இடம்), காலம் மற்றும் வஸ்து (பொருள் அல்லது உருவம்) ஆகிய
எல்லைகள் அற்றவரும்,
புருஷோத்தமம்
க்ஷராக்ஷராப்யாம் கார்யகாரணாப்யாமுத்க்ருஷ்டம் கார்ய காரண ரூபமாய் அழியும் மற்றும் அழியாதன
அனைத்திற்கும் மேற்ப்பட்டவருமான புருஷோத்தமனின்
நாமஸஹஸ்ரேன நாம்னா ஸஹஸ்ரேன குணங்களை குறிக்கும் ஆயிரம் திருநாமங்களையும்,
ஸ்துவன் குணான்சங்கீர்த்தயன் சங்கீர்த்தனம்
ஸததோத்திதோ நிரந்தரமுத்யுக்த: தினமும் செய்யும் மனிதன் அனைத்து
துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.
புருஶ பூர்ணத்வாத் புரி ஶயனாத்வா புருஶ:
பூர்ணமானதாகவும்,
புரி என்று சொல்லப்படும் உடலுக்குள் சயனித்து (உறைந்து) இருப்பதாலும், ஜீவாத்மாவிற்கு
‘புருஶன்’ என்ற பெயர் உண்டு.
‘ஸர்வ து:காதிகோபவேத்’ இதி ஸர்வத்ர சம்பத்யதே ||
அடுத்து வரும் ஸ்லோகத்திலுள்ள ‘ஸர்வ து:காதிகோபவேத்’
– ‘அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்’ என்ற தொடரை பீஷ்மர் கூறும்
அனைத்து விடைகளிலும் (ஸ்லோகங்களிலும்) சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக