"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார்,
"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"
என்று கூறுகிறார்.
இதில் முதல் பதத்திற்கு (பவித்ராணாம் பவித்ரம் ய:) உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டியதை நேற்று வரை பார்த்தோம். இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.
மங்களானாம் ச மங்களம் மங்களம் சுகம் சுகம் மங்களம் என்று
கூறப்படுகிறது தத் ஸாதனம் அதை அடையும் வழியாகவும் தஞ்ஞாபகம் ச அதை தருபவராகவும், தேஷாமபி பரமானந்தலக்ஷணம்
பரம் மங்களமிதி அவர் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பதால் மங்களானாம் ச மங்களம் (பகவான் ஸ்ரீ விஶ்ணு) மங்களமானவைகளை
காட்டிலும் மங்களமானவர் என்று அழைக்கப்படுகிறார்.
தைவதம் தேவதானாம் ச தேவானாம் தேவ: அனைத்து தேவர்களுக்கும்
தேவர், த்யௌதனாதிபி: ஸமுத்கர்ஷேண வர்த்தமானத்வாத் தனது ஒளி (ப்ரகாசம்) முதலியவற்றால் அனைவரை
காட்டிலும் மேலானவர்.
பூதானாம் ய: அவ்யய: வ்யயரஹித் அழிதலற்றவரும் பிதா ஜனகோ யோ தேவ: அனைத்து ஜீவராசிகளையும்
தோற்றுவித்தவருமான கடவுளே, ஸ ஏகம் தைவதம் லோக இதி வாக்யார்த்த: இவ்வுலகில் ஒரே முழுமுதற்
கடவுளாவார் என்பதே இந்த வாக்கியத்தின் பொருளாகும் (இதுவே யுதிஷ்டிரன் கேட்ட
‘கிமேகம் தைவதம் லோகே’ என்ற முதல் கேள்வியின் விடையாகும்).
ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபி ஸர்வபூதாந்தராத்மா |
கர்மாத்யக்ஷ: சர்வபூதாதிவாஸ: சாக்ஷி சேதா கேவலோ நிர்குணச்ச ||
(ஸ்வேதாஷ்வர உபநிஶத் 6.11)
ஸ்வேதாஷ்வர
உபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது: எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து இருக்கிறாரோ, எங்கும்
நிறைந்து இருக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கிறாரோ, (அந்த ஜீவராசிகளின்) கர்மங்களை (கர்மங்களின் பலன்களை
அளிப்பதன் மூலம்) நிர்வகிக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளையும் நிலைநிறுத்துகிறாரோ,
அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறாரோ, அனைவருக்கும் தன்னுனர்வைத் தருகிறாரோ, அந்த
நிர்குணமானவரே ஒரே தெய்வமாவார்.
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |
தம்ஹ தேவம் ஆத்மபுத்திப்ரகாஶம்
முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து
அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட
வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான்
சரணடைகிறேன்.
‘சேயம் தேவதைக்ஷத’ (சாந்தோக்ய உபநிஶத் 6.3.2)
‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)
சாந்தோக்ய
உபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது: ‘அந்த ஆதிமுழுமுதற்கடவுள் நினைத்தார்’; ‘அவர் இரண்டற்ற ஒருவராவார்
(அத்விதீய)’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக