ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 37

இதன் பின்னர் "ரிஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி:" என்று தொடங்கி "ச்சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி, ஆஸீனமம்புத்ஶ்யானம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம், சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம், ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீக்ருஷ்ணமாஶ்ரயே" வரை உள்ள ஸ்லோகங்களை நமது அன்றாடப் பாராயண க்ரமத்தில் கூறவேண்டும். இந்த ஸ்லோகங்களுக்கு ஆதிசங்கரர் (மற்றும் மற்ற ஆச்சார்யர்களும் கூட) உரை எழுதவில்லை. இந்த ஸ்லோகங்களுக்கு எனக்குத் தெரிந்த வரை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னித்து, சுட்டி காட்டவும்.

ரிஶிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஶ்டுப்  ததா தேவோ பகவான் தேவகி ஸுத: ||
இந்த ஸஹஸ்ரநாமத்தை நமக்கு அளித்தவர் மஹா முனிவரான (தபஸ்வியான) வேத வ்யாஸர். இதை (ஒரு ஸ்லோகத்திற்கு எட்டு பதங்களைக் கொண்ட) அனுஶ்டுப் சந்தத்தில் அமைத்துள்ளார். இந்த ஸ்தோத்ரத்திற்கு உரிய தெய்வம் தேவகி ஸுதனான பகவான் க்ருஶ்ண பரமாத்மா ஆவார்.
விஶ்ணு ஸஹஸ்ரநாமமாக இருப்பினும், இதை நேரடியாக கேட்டு, ஆமோதித்தவர் பகவான் ஸ்ரீக்ருஶ்ணன் ஆவார்.

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஶக்திர் தேவகி நந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஶாந்த்யர்த்தே வினியுஜ்யதே || 
இந்த ஸ்லோகம் ந்யாஸத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரநாமத்திலுள்ள சில திருநாமங்களை பீஜ ஆகியவற்றை குறிப்பதாக இந்த ஸ்லோகம் உரைக்கிறது. ந்யாஸம் மற்றும் இந்த ஸ்லோகங்களுக்கு பெரியவர்களிடம் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோமாக.

விஶ்ணும் ஜிஶ்ணும் மஹாவிஶ்ணும் ப்ரபவிஶ்ணும் மஹேஶ்வரம் |
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஶோத்தமம் ||
எங்கும் நிறைந்துள்ளவரும், அனைவரையும் வெல்பவரும், மஹேஸ்வரனும், பற்பல வடிவெடுத்து (அல்லது பற்பல வடிவம் கொண்ட) அஸுரர்களை அழிப்பவரும், புருஷோத்தமனுமான பகவான் மஹாவிஷ்ணுவை நான் வணங்குகிறேன்.

ந்யாஸம்:
அஸ்ய ஸ்ரீவிஶ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய... என்று தொடங்கும் இப்பகுதி ந்யாஸம் என்று அழைக்கப்படும். இதன் பொருளையும், எதற்காக ந்யாஸம் செய்யவேண்டும் என்பதையும் நாம் பெரியோரிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்வோமாக.

த்யானம் (https://divyakataksham.wordpress.com/2014/04/12/vishnu-sahasranamam-part-5/ என்ற வலைத்தளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளேன்):
க்ஷீரோர் தன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம் | 
மாலா க்லுப்தாஸனஸ்த ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: |
ஶுப்ரைரப்ரைரதப்ரைருபரிவிரசிதைர் முக்த பீயூஶ வர்ஶை: |
ஆனந்தீன: புநீயாதரிநளின கதா ஶங்க பாணிர் முகுந்த: ||    
வைரம் போன்று மின்னும் மணல் துகள்களைக் கொண்ட பாற்கடலின் கரைகளிலே, உயர்ந்த முத்து மலைகளால் அலங்கரிக்கப்பெற்றவரும், அவருக்கு மேலே சூழ்ந்துள்ள வெண்மேகங்கள் அமுத மழையைப் பொழியவும், ஆனந்தமே வடிவானவரும், தனது திருக்கரங்களில் கதை, சங்கு மற்றும் சக்கரங்களை ஏந்தியவரும், அனைவருக்கும் முக்தியை அளிப்பதால் முகுந்தன் என்று பெயருடையவருமான பகவான் (ஸ்ரீமந்நாராயணன்) நம்மை புனிதப்படுத்தட்டும்.

பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸு: (அ)நில சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே |
கர்ணாவாசாஸ் ஶிரோத்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்தி |
அந்தஸ்தம் யஸ்ய விஶ்வம் ஸுர நர கக கோ போகி கந்தர்வ தைத்யை: |
சித்ரம்ரம்ரம் யதேதம் த்ரிபுவன வபுஶம் விஶ்ணும் ஈஶம் நமாமி ||
அவரது பாதங்களே பூமி, நாபியில் (தொப்புள் பிரதேசத்தில்) ஆகாயம், அவரது மூச்சுக்காற்றே வாயு, கதிரவனும் வெண்மதியுமே அவரது இரு விழிகளாவர். அவரது காதுகளே திசைகள், தலை சூரியமண்டலம், முகம் (வாய்) அக்னி, அவரது வயிற்றில் அனைத்து பெருங்கடல்களும் உள்ளன. தேவர்கள், மனிதர்கள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அஸுரர்கள், போகிகள் உட்பட அனைத்துப் ப்ரபஞ்சங்களும் அவருள்ளேயே இருந்து, இன்பங்களை அனுபவிக்கின்றன. அத்தகைய ஈஸ்வரனான பகவான் விஷ்ணுவை நான் வணங்குகின்றேன்.
பூ: பாதௌ எனத்தொடங்கும் இந்த ஸ்லோகத்தின் கருத்தும், நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளின் கருத்தும் ஒத்திருக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் நற்றிணை நூலினைப் படித்து இன்புறுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக