"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார்,
"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.
அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று மேலும் சில ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.
நானு
ப்ரதீகதர்ஷனமிதம் விஶ்ணு ப்ரதிமான்யாயேன பவிஶ்யதி|
கேள்வி: (இவ்வாறு ஆத்மாவை
பரமாத்மாவாக நினைப்பது) விஶ்ணுவின் உருவத்தை விஶ்ணுவாக கருதி வழிபடுவதற்கு சமமாகும்.
ததயுக்தம்,
கௌநத்வபிரஸங்காத், வாக்யவைரூப்யாஸ்ச |
பதில்: இவ்வாறு கூறுவது
பரமாத்மா ஒரு உருவத்திற்கு கட்டுப்பட்டதாக கூறுவதாகும். இது சாஸ்திர
வாக்கியத்திற்கு விரோதமானதாகும்.
யத்ர
ஹி ப்ரதீகத்ரிஶ்டிர் அபிப்ரேயதே ஸக்ருதேவ தத்ர வசனம் பவதி | எங்கெல்லாம் உருவத்தைப்
பற்றி கூறப்பட்டுள்ளதோ அங்கே பரமாத்மாவுடன் ஒரு வழி உறவுதான் (அதாவது பரமாத்மா இதுவாக இருக்கிறார்
என்று) கூறப்பட்டுள்ளது.
யதா - உதாரணமாக,
‘மனோ
ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.18.1) மனம் ப்ரஹ்மம்
‘ஆதித்யோ
ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.19.1) சூரியன் ப்ரஹ்மம் இதி.
இஹ
புன: ஆனால் இங்கோ,
த்வமஹமஸ்மி
அஹம் வை த்வமஸி நீ நானாக இருக்கிறாய். நானே நீயாக இருக்கிறேன். இத்யாஹ | இவ்வாறு,
அத:
ப்ரதீகஸ்ருதிவைரூப்யாதபேதப்ரதிபத்தி: | ஜீவாத்மா, பரமாத்மாவுடன்,
இரு வழி (இரண்டுமே ஒன்றிலிருந்து ஒன்று வேறானது அல்ல) பரஸ்பர ஒற்றுமை தோன்றக்
கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வேதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் கூறுவதால், பரமாத்மாவும்,
ஜீவாத்மாவும் அபேதம் (அதாவது இரண்டும் ஒன்று) என்று கூறுவது விளங்கும். மேலும்,
பேததிருஷ்ட்யபவாதாச்ச
| (ஜீவாத்மாவும்,
பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை மறுப்பதன் மூலமும் இது (பரமாத்மாவும்,
ஜீவாத்மாவும் ஒன்று என்பது) தெளிவாகிறது. (இவ்வாறு பேதங்களை மறுக்கும் வேத வாக்கியங்கள்) எவை எனில்,
அத
யோSன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோSஸாவன்யோSஹமஸ்மீதி ந ஸவேதயதா பஶு: (ப்ருஹதாரண்யக உபநிஶத்
1.4.10)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் தான் வேறு, தான் வழிபடும் தெய்வம் வேறு என்ற எண்ணத்தோடு
கடவுளை வழிபடுகின்றானோ, அவன் மிருகத்திற்கு சமமானவன் (மிருகங்களைப் போல குறைந்த
அறிவுடையவன்).
‘ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக்
காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல்
மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).
யதோதகம் துர்கே வ்ருஶ்டம் பர்வதேஶு விதாவதி | ஏவம் தர்மான்ப்ருதக்பஶ்யம்ஸ்தானேவானுவிதாவதி (கடோ உபநிஶத் 2.1.14)
கடோபநிஷத்தில்
கூறப்பட்டுள்ளது: எவ்விதம் மலையில் பெய்த நீர் மலைப்பகுதிகளில் ஓடி மறைகிறதோ, அவ்விதம்
ஜீவர்களை வேறுபாட்டுடன் பார்ப்பவன் அவற்றை தொடர்ந்து சென்று மடிகிறான்.
த்விதீயாத்
வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம்
உருவாகிறது.
யதா ஹ்யேவைஶ ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே | அத தஸ்ய பயம் பவதி | தத்வேவ பயம் விதுஶோ மன்வானஸ்ய (தைத்ரீய உபநிஶத் 2.7)
தைத்ரீய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுது இந்த அஞ்ஞானி இந்த ப்ரஹ்மத்தில் சிறிய வேற்றுமையைப்
பார்க்கிறானோ, அப்பொழுது பயம் ஏற்படுகிறது. கற்றறிந்தும் ப்ரஹ்ம ஞானத்தை
அடையாதவனுக்கு அந்த ப்ரஹ்மமே பயத்திற்கு காரணமாகிறது.
ஸர்வம்
தம் பராதாத்யோSன்யத்ராத்மன: ஸர்வம் வேத (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் அனைத்தையும் (அனைவரையும்) ஆத்மாவிலிருந்து
வேறாகப் பார்க்கிறானோ, அவன் அனைவராலும் ஒதுக்கப்படுகிறான்.
இத்யேவமாத்யா பூயஸி ஸ்ருதிர்பேதத்ருஶ்டிமபவததி | இவ்வாறு (மேலே கொடுக்கப்பட்டுள்ள
மற்றும்) பல ஸ்ருதி வாக்கியங்கள் (ஜீவாத்மாவும்,
பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை நிந்திக்கின்றன (மறுக்கின்றன).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக