26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
238. ஓம் விஶ்வத்ருஶே
நம:
விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை
த்ருஶ்ணோதீதி காக்கிறார்
விஶ்வத்ருக் (எனவே) பகவான் 'விஶ்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஞித்ருஶா ப்ராகல்பே பலமானவர், துணிச்சல் மிக்கவர் என்ற பொருள்படும் 'ஞித்ருஶா' என்ற தாதுவிலிருந்து 'த்ருக்' என்ற விகுதி உருவாகியுள்ளது.
இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் 'விஶ்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
239. ஓம்
விஶ்வபுஜே நம:
விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை
புங்க்தே புனக்தி (ப்ரளய காலத்தில்) உண்கிறார்
பாலயதீதி வா (மற்றெல்லா நேரங்களிலும்) காத்தருள்கிறார்
விஶ்வபுக் எனவே, பகவான் 'விஶ்வபுக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய
காலத்தில் உண்கிறார். மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார். எனவே,
பகவான் 'விஶ்வபுக்' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புங்க்தே மற்றும் புனக்தி (வடமொழியில் நான்காவது 'ப') என்ற சொல்லிற்கு உண்பது, அனுபவிப்பது என்று பல பொருள்கள் உண்டு. பெரும்பாலும் இந்த சொல் உண்பதைக் குறிப்பதால் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன். இந்தப் ப்ரபஞ்சமே பரம்பொருளின் அனுபவத்திற்காகவே ஏற்பட்டதாகும். எனவே, ப்ரபஞ்சத்தை அனுபவிப்பவர் என்ற பொருள் கொண்டாலும் தகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக