26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
242. ஓம் ஸத்க்ருதாய
நம:
பூஜிதைரபி (அனைவராலும்) வணங்கத்தக்கவர்களாலும்
பூஜித: வணங்கப்படுகிறார்
ஸத்க்ருத: (எனவே) பகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
243. ஓம்
ஸாதவே நம:
ந்யாய ப்ரவ்ருத்ததயா அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால்
ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸாதயதீதி வா உருவாக்குகிறார்
ஸாத்யபேதான் (இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறாகக் காட்சியளிக்கும்) பொருட்களுக்குள் பேதங்களை
ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உபதானாத் மூலப் பொருளாய் (மூல காரணமாய்) இருக்கிறார்
ஸாத்யமாத்ரஸாதகோ வா (இங்கு பலவாகத் தெரியும்) அனைத்துப் பொருட்களையும் உருவாகும்
ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக