27. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: ||
இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
247. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி: |
252. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
249. ஓம் விஶிஶ்டாய நம:
அதிஶேதே விஞ்சியவர்
ஸர்வமதோ அனைத்தையும் (அனைவரையும்)
விஶிஶ்ட: (எனவே) பகவான் 'விஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (அறிவு, பலம், செல்வம், வீரம் முதலிய) அனைத்திலும், அனைவரையும் (அனைத்தையும்) விஞ்சியிருப்பதால் அவர் 'விஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
250. ஓம் ஶிஶ்டக்ருதே நம:
ஶிஶ்டம் ஶாஸனம் 'ஶிஶ்டம்' என்றால் ஆணையிடுதல் அல்லது ஆள்வது என்று பொருள்
தத் கரோதீதி அதை புரிவதால் (அனைவரையும் ஆணையிட்டு ஆள்வதால்)
ஶிஶ்டக்ருத் பகவான் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்தையும் (அனைவரையும்) ஆணையிடுபவராய் (ஆணையிட்டு ஆள்பவராய்) இருப்பதால், பகவான் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிஶ்டான் தனது அடியவர்களை
கரோதி பாலயதீதி வா காக்கிறார் (கரோதி என்றால் காப்பது என்றும் பொருள்)
ஶிஶ்டக்ருத் எனவே, பகவான் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது அடியவர்களை (ஶிஶ்டர்களை) காக்கிறார். எனவே, அவர் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிஶ்ட - அடியவர்கள் + கரோதி - காப்பது = ஶிஶ்டக்ருத்
ஸாமான்யவசனோ தாதுர்விஶேஶவசனோ த்ருஶ்ட: குரு காஶ்டானீத்யாஹரனே யதா, தத்விதிதி வா ஶிஶ்டக்ருத் |
பொதுவான
பொருளை விடுத்து சிறப்புப் பொருளை குறிப்பதற்கு இங்கு 'க்ரு' என்ற வேர்ச்சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. "குரு
காஶ்டானி" என்ற வாக்கியத்தில் 'க்ரு' என்ற வேர்ச்சொல் 'எடுத்துச் செல்லுதல், கொண்டு செல்லுதல்' என்ற பொருளில் உபயோகப்
படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே இங்கும் 'க்ரு' என்ற வேர்ச்சொல் இந்த திருநாமத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
251. ஓம் ஶுசயே நம:
நிரஞ்ஜன: களங்கமற்றவரானதால் (தூய்மையானவராதலால்)
ஶுசி: பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
களங்கமற்றவரானதால் (தூய்மையானவராதலால்) பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக