26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
244. ஓம்
ஜான்ஹவே நம:
ஜனான் அனைத்து ஜீவராசிகளையும்
ஸம்ஹாரஸமயே அழியும் காலத்தில்
அபஹ்னுதே அபனயதீதி தன்னுள் லயமடையச் செய்வதால்
ஜஹ்னு: பகவான்
'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்) அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார். எனவே, அவர் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஜனான் + அபஹ்னுதே = ஜஹ்னு:
ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோ) ஞானமற்றோரை விடுத்து
பக்தான் நயதீதி பக்தர்களை வழிநடத்திச் செல்கிறார்
பரம்பதமிதி வா (தன்னுடைய) பரமபதத்திற்கு (வைகுண்டத்திற்கு)
ஜஹ்னு: பகவான் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தன்னிடம் பக்தியில்லாத, ஞானமற்றோரை விடுத்து, தனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
245. ஓம் நாராயணாய
நம:
நர ஆத்மா 'நர' என்றால் ஆத்மா என்று பொருள்
ததோ ஜாதான்யாகாஶாதீனி அந்த ஆத்மாவின் பிறப்பிடமான ஆகாயம் முதலியவை
நாராணி 'நாரம்' என்று அழைக்கப்படும்
கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி (அந்த ஆகாயம் என்னும்) காரியத்தை (அதன் காரணமாய் இருந்து) பரவி இருப்பதால்
அதஸ்ச தான்யயனமஸ்யேதி அதற்கு (நாரங்களுக்கு) இருப்பிடமாக (அயனமாக) இருப்பதால்
நாராயண: பகவான் 'நாராயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அஜாமிளனுக்கு முக்தியளித்த திருநாமம். திருமங்கையாழ்வாரை ஆட்கொண்ட திருநாமம். நாராயண நாமத்தின் பெருமையை விவரிக்க இயலாது.
நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை 'நாரங்கள்' என்று அழைக்கப்படுகிறது. அந்த நாரங்களை, அவற்றின் காரணமாக இருப்பதால், பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவே, அவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவே, பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'யச்ச
கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம்
வ்யாப்த நாராயண: ஸ்தித:' || (நாராயண உபநிஶத் 13.1-2)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்ற) இந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும், புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).
இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).
நரஜ்ஜாதானி தத்வானி
நாராணீதி ததோ விது: |
தான்யேவ சாயன தஸ்ய தேன
நாராயண: ஸ்ம்ருத: || (மஹாபாரதம்)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றன. எனவே, அவை 'நாரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்) கொண்டுள்ளதால், பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்.
இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).
நாராணாம் ஜீவானாம் அனைத்து ஜீவராசிகளும் 'நாரங்கள்' ஆகும்
அயனத்வாத் ப்ரளய இதி வா ப்ரளய காலத்தில் (இந்த நாரங்களாகிய ஜீவராசிகள் அனைத்தும்) சென்றடையும் இடமாக இருப்பதால்
நாராயண: பகவான் 'நாராயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் 'நாராயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயண: ஸ்ம்ருத:' (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)
ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்..
இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ
வை நரஸூனவ: |
தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)
மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: நரனான பகவானிடமிருந்து உருவானதால் தண்ணீருக்கு 'நாரம்' என்று பெயர். அந்த நாரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளதால், பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்.
நாராயணாய நம இத்யயமேவ ஸத்ய:
ஸம்ஸாரகோரவிஶஸஹரணாய மந்த்ர: |
ஶ்ருண்வந்துமவ்யமதயோ யதயோSஸ்தராகா
உச்சைஸ்தராமுபதிஶாம்யஹமூர்த்த்வபாஹு: || (நரஸிம்ஹ புராணம்)
நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ நல்லறிவு கொண்டோரே!!! பற்றுதலற்ற துறவிகளே!!! நீங்கள் கேளுங்கள். நான் என் கைகளை உயர்த்தி உரத்த குரலில் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். 'நாராயணாய நம:' என்னும் இந்த மந்திரமே (அனைத்திலும் சிறந்த) உண்மையாகும். இந்தப் பிறவியென்னும் கொடிய நஞ்சினை அழிக்க வல்லதாகும்.
இதி நாரஸிம்ஹ புராணே | இவ்வாறு நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
246. ஓம் நராய
நம:
நயதீதி நர: ப்ரோக்த: பரமாத்மா
ஸனாதன: |
அனைவரையும் (நற்பேற்றுக்கு) வழிநடத்தி அழைத்துச் செல்வதால், என்றும் உள்ள அந்த பரமாத்மா 'நரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸ வசனம் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி பகவான் 'நரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக