27. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: ||
இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
247. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி: |
252. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
247. ஓம் அஸங்க்யேயாய நம:
யஸ்மின் எவரிடம் (பகவானிடம்)
ஸங்க்யா நாம ரூப பேதாதி: 'ஸங்க்யா' அதாவது பெயர் (நாம), உருவம் (ரூப) முதலிய வேறுபாடுகள்
ந வித்யத இதி காணப்படுவதில்லையோ
அஸங்க்யேய: எனவே, பகவான் 'அஸங்க்யேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸங்க்யா' என்றால் எண்ணிக்கை என்று பொருள். உலகில் அனைத்தையும் நாம் பெயர் (நாமம்) மற்றும் உருவத்தாலேயே (ரூபம்) வேறுபடுத்துகிறோம். பகவானிடம் இத்தகைய நாம, ரூப வேறுபாடுகள் இல்லையாதலால், பகவான் 'அஸங்க்யேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
248. ஓம் அப்ரமேயாத்மனே
நம:
அப்ரமேய புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறியமுடியாத
ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி ஆத்மா, (அவரது இயற்கையான உருவம்) உடையவர் ஆதலால்
அப்ரமேயாத்மா பகவான் 'அப்ரமேயாத்மா' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
பகவானின் ஆத்மாவின் தன்மையை (அல்லது அவரது இயற்கையான உருவத்தை) நமது புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறிய இயலாது. எனவே, பகவான் 'அப்ரமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக