வெள்ளி, மே 21, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 174

 27. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: | 

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

247. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி: |

252. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

247. ஓம் அஸங்க்யேயாய நம:

யஸ்மின் ஸங்க்யா நாம ரூப பேதாதிந வித்யத இதி அஸங்க்யேய:

'ஸங்க்யாஎன்றால் எண்ணிக்கை என்று பொருள்உலகில் அனைத்தையும் நாம் பெயர் (நாமம்மற்றும் உருவத்தாலேயே (ரூபம்வேறுபடுத்துகிறோம்பகவானிடம் இத்தகைய நாமரூப வேறுபாடுகள் இல்லையாதலால்பகவான் 'அஸங்க்யேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

248. ஓம் அப்ரமேயாத்மனே நம:

அப்ரமேய ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி அப்ரமேயாத்மா

பகவானின் ஆத்மாவின் தன்மையை (அல்லது அவரது இயற்கையான உருவத்தைநமது புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறிய இயலாதுஎனவேபகவான் 'அப்ரமேயாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

249. ஓம் விஶிஶ்டாய நம:

அதிஶேதே ஸர்வமதோ விஶிஶ்ட:

பகவான் (அறிவுபலம்செல்வம்வீரம் முதலியஅனைத்திலும்அனைவரையும் (அனைத்தையும்விஞ்சியிருப்பதால் அவர் 'விஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

250. ஓம் ஶிஶ்டக்ருதே நம:

ஶிஶ்டம் தத் கரோதீதி ஶிஶ்டக்ருத்

அனைத்தையும் (அனைவரையும்ஆணையிடுபவராய் (ஆணையிட்டு ஆள்பவராய்இருப்பதால்பகவான் 'ஶிஶ்டக்ருத்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶிஶ்டான் கரோதி பாலயதீதி வா ஶிஶ்டக்ருத்

பகவான் தனது அடியவர்களை (ஶிஶ்டர்களைகாக்கிறார்எனவேஅவர் 'ஶிஶ்டக்ருத்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

251. ஓம் ஶுசயே நம:

நிரஞ்ஜன: ஶுசி: 

களங்கமற்றவரானதால் (தூய்மையானவராதலால்பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

252. ஓம் ஸித்தார்த்தாய நம:

ஸித்தோ நிர்வ்ருத்த: அர்த்த்யமானோSர்த்தோSஸ்யேதி ஸித்தார்த்த: 

பகவான் தான் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுகிறார்எனவேஅவர் 'ஸித்தார்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

253. ஓம் ஸித்தஸங்கல்பாய நம:

ஸித்தோ நிஶ்பன்னஸங்கல்போSஸ்யேதி ஸித்தஸங்கல்ப:

பகவானின் எண்ணங்களும்தீர்மானங்களும் (முடிவுகளும்எப்பொழுதும் பூர்த்தியாகிறதுஎனவேஅவர் 'ஸித்தஸங்கல்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

254. ஓம் ஸித்திதாய நம:

ஸித்திம் ஃபலம் கர்த்ருப்யஸ்வாதிகாரானுரூபதோ (ஸ்வ அதிகாரான் அனுரூபதோததாதீதி ஸித்தித:

பகவான் ஒவ்வொருவருக்கும்அவர்களது செயல்களுக்குத் தக்க பலன்களை அளிக்கிறார்எனவேஅவர் 'ஸித்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

255. ஓம் ஸித்திஸாதனாய நம:

ஸித்தேக்ரியாயாஸாதகத்வாத் ஸித்திஸாதன:

பகவான் 'ஸித்தியை' (அதாவது செயல்களைப்புரிகிறார்செயல்களைப் புரிபவர்களுக்கு (அவர்களைத் தூண்டிஉதவுபவராகவும் இருக்கிறார்எனவேஅவர் 'ஸித்திஸாதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக