திங்கள், மே 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 176

29. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: 

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

265. ஸுபுஜ:, 266. துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு|

271. நைகரூப:, 272. ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன|| 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

265. ஓம் ஸுபுஜாய நம:

ஶோபனா நன்மை தருவதான (அழகான

புஜா திருத்தோள்களை கொண்டிருக்கிறார் 

ஜகத்ரக்ஷகரா: உலகத்தை (உலகத்தோரை) காப்பதற்காக 

அஸ்யேதி ஸுபுஜ: எனவே, பகவான் 'ஸுபுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகத்தையும், உலகத்தோரையும் காப்பதற்காக நன்மை தருவதான, அழகான திருத்தோள்களைக் கொண்டிருப்பதால் பகவான் 'ஸுபுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் என்றால் காந்தி (ஒளி), நன்மை, அழகு, அலங்காரம், அணிகலன் என்று பல பொருள்கள் உண்டு. இவை அனைத்துமே பகவானின் தோள்களுக்குப் பொருந்தும்.

266. ஓம் துர்த்தராய நம:

ப்ருதிவ்யாதீனபி இந்த பூமி முதலான 

லோகதாரகான்யன்யைர் அனைவரையும் தாங்கக்கூடிய 

தாரயிதுமஶக்யானி பிறரால் தாங்குவதற்கு கடினமானவற்றையும் 

தாரயன் தாங்குகிறார் 

ந கேனசித் தாரயிதும் ஷக்ய இதி ஆனால், ஒரு பொழுதும் தான் பிறரால் தாங்க இயலாதவராய் இருப்பதால் 

துர்த்தர: பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தாங்கக் கூடியதானதும், பிறரால் தாங்குதற்குக் கடினமானதுமான பூமி முதலியவற்றைத் தாங்குகிறார். ஆனால், ஒரு பொழுதும் பிறரால் தாங்க இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

து:கேன கடினமானது 

த்யானஸமயே த்யானிக்கும் பொழுது 

முமுக்ஷுபிர் முக்தியை விழைபவர்கள் 

ஹ்ருதயே (தங்கள்) மனத்தினுள் 

தாரயத இதி (பகவானின் உருவத்தை) தாங்குவதற்கு 

துர்த்தர: எனவே, பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைபவர்கள், த்யானிக்கும் பொழுது பகவானின் உருவத்தை தத்தம் மனத்தினுள் தாங்குவது மிகக் கடினமானது. எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து: என்றால் கடினமானது. தர என்றால் தாங்குவது. பகவான் கடினமானவற்றை எளிதில் தாங்குகிறார். அவரை பிறர் தாங்குவது இயலாது. த்யானத்தின் பொழுதும் அவரது உருவத்தை நம் மனத்தினுள் அவ்வளவு எளிதில் தாங்கி விட முடியாது. இவ்வாறு, பல காரணங்களினால் பகவான் ‘துர்த்தர:’ 

267. ஓம் வாக்மினே நம:

யதோ நி:ஸ்ருதா எவரிடமிருந்து தோன்றினவோ 

ப்ரஹ்மமயீ வாக் (பரப்ரஹ்மமே சொல் வடிவாய் இருக்கும்) வேதங்கள் 

தஸ்மாத் பகவான் 

வாக்மீ ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடமிருந்தே வேதங்கள் தோன்றின. எனவே, அவர் ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

268. ஓம் மஹேந்த்ராய நம:

மஹாம்ஸ்சாஸாவிந்தரஸ்சேதி மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் 

மஹேந்த்ர: பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஈஶ்வரானாமபி ஈஶ்வர: அனைத்து ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர்.

மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் ஆதலால், பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இந்தப் ப்ரபஞ்சத்தில் சக்தி படைத்த ஈஸ்வரர்கள் (ஆளுநர்கள்) பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆளும் ஈஸ்வரனாக பகவான் இருக்கிறார் என்று இதற்குப் பொருள். 

269. ஓம் வஸுதாய நம:

வஸு தனம் வஸு என்றால் செல்வம் என்று பொருள் 

ததாதீதி (செல்வத்தை) அனைவருக்கும் அளிப்பதால் 

வஸுத: பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் செல்வத்தை (வஸுவை) அளிக்கிறார் (ததா). எனவே, பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரு (268, 269) திருநாமங்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு செல்வத்தை அளிக்கும் பல ஈஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் செல்வத்தை பகவானே அளிக்கிறார் (வஸுத:). எனவே, அவர் அந்த ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரராக இருக்கிறார் (மஹேந்த்ர:) என்று பொருள் கொள்ளலாம். 

270. ஓம் வஸவே நம:

தீயமானம் கொடுக்கப்படும் 

தத் வஸ்வபி அந்த செல்வமாக 

ஸ ஏவேதி வா அவராகவே இருப்பதால் 

வஸு: பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவ்வாறு பிறருக்கு அளிக்கப்படும் செல்வமும் பகவானன்றி வேறொன்றுமில்லை. அந்த செல்வமாகவும் தானே இருப்பதால், பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஆச்சாதயத் மறைத்துக் கொள்கிறார் 

ஆத்மஸ்வரூபம் தனது இயற்கையான உருவத்தை 

மாயயேதி வா மாயையினால் 

வஸு: எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அந்தரிக்ஷ ஏவ ஆகாயத்தில் மட்டுமே 

வஸதி வசிக்கிறார் 

நான்யத்ரேதி வேறெங்கும் (வசிப்பதில்லை) 

அஸாதாரணேன வசனேன இவ்வாறு தனிச்சிறப்புடைய 

வஸனேன இருப்பிடத்தை கொண்டிருப்பதால் 

வாயுர்வா வஸு: காற்றிற்கு (வாயு பகவானிற்கு) ‘வஸு’ என்று பெயர் (அவரது உள்ளுறை ஆத்மாவாக - அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாயு பகவான் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார். வேறெங்கும் வசிப்பதில்லை. இவ்வாறு, தனிச்சிறப்புடைய இருப்பிடத்தைக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘வஸு’ என்று பெயர். அந்த வாயு பகவானிற்கும் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) இருப்பதால் பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுரந்தரிக்ஷஸத்’ (கடோபநிஶத் 2.5.2)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஆகாயத்தில் வசிப்பவர் வஸு’ 

271. ஓம் நைகரூபாய நம:

ஏகம் ரூபமஸ்ய ஓரு குறிப்பிட்ட உருவம் என்பதை 

ந வித்யத இதி அவர் ஏற்பதில்லை 

நைகரூப: எனவே, பகவான் ‘நைகரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு குறிப்பிட்ட உருவம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அவர் ‘நைகரூப:’ (பல உருவங்கள் கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகரூப: என்பதை ந + ஏக + ரூப: என்ற பிரிக்கவேண்டும். ஒரு உருவம் கிடையாது என்பது இதன் பொருள். அத்வைதத்தின் படி, பரப்ரஹ்மம் எந்த ஒரு உருவமும் அற்றவர். மாயையின் வசப்பட்டே அவருக்கு உருவம் உள்ளதாக நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

விஶிஶ்டாத்வைதத்தில், பகவானுக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. அவை அனைத்தும் உண்மையே. எனவேதான், அவருக்கு “ந ஏக ரூப:” என்ற திருநாமம் பொருந்தும் என்று பொருள் கூறுவர். பல்வேறு உருவங்கள் இருப்பதால், ஒரு உருவத்தை மட்டும் அவரது உருவம் என்று கொள்ளலாகாது என்பது இதன் பொருள்.

இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தக் கடவுளானவர் (பரப்ரஹ்மம்) மாயையினால் பல்வேறு உருவங்கள் கொள்வதாக உணரப்படுகிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஜ்யோதீம்ஶி விஶ்ணு:’ (விஶ்ணு புராணம் 2.12.37)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஒளிகளும் விஶ்ணுவே.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச | இத்தகைய ஸ்ம்ருதிகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன. 

272. ஓம் ப்ருஹத்ரூபாய நம:

ப்ருஹன்மத் மிகப்பெரிய 

வராஹாதிரூபமஸ்யேதி வராஹம் முதலிய பல்வேறு உருவங்களை எடுப்பதால் 

ப்ருஹத்ரூப: பகவான் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், வராஹம் முதலிய அவதாரங்களை எடுக்கும் பொழுது மிகப்பெரிய திருமேனியை (உருவத்தை) ஏற்கிறார். எனவே, அவர் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

273. ஓம் ஶிபிவிஶ்டாய நம:

ஶிபய: பஶவ: 'ஶிபி' என்றால் மிருகங்கள் என்று பொருள் 

தேஶு விஶதி ப்ரதிதிஶ்டதி அவற்றில் நிலைகொண்டுள்ளார் (விஶதி என்றால் நிலைபெற்றிருத்தல் என்று பொருள்

யஞ்யரூபேணேதி வேள்வியின் வடிவில் 

ஶிபிவிஶ்ட: யஞ்யமூர்த்தி: எனவே, வேள்வியின் வடிவினரான பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்வியின் வடிவினரான பகவான், அந்த வேள்வியில் ஆகுதியாகக் கொடுக்கப்படும் மிருகங்களுக்குள் வேள்வியின் பொருட்டு நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு: பஶவ: ஶிபிர்யஞ்ய ஏவ பஶுஶு ப்ரதிதிஶ்டதி’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார். அந்த வேள்வியில் ஆகுதி கொடுக்கப்படும் மிருகங்களுள் வேள்வியே நிலைபெற்றுள்ளது.

விஶ்ணுவே வேள்வியாதலால், அந்த யாக மிருகங்களில் அவரே நிலைபெற்றுள்ளார் என்பது இதன் பொருள்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ஶிபயோ ரஶ்மயஸ்தேஶு 'ஶிபி' என்றால் கிரணங்கள் என்றும் பொருள் 

நிவிஶ்ட இதி வா அவற்றுள் உறைவதால் 

ஶிபிவிஶ்ட: பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிபி என்றால் கிரணங்கள் என்றும் பொருள். கதிரவன் மற்றும் வெண்மதியின் கிரணங்களில் உள்ளுறைந்து இருப்பதால் பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶைத்யாச்சயனயோகாஸ்ச ஶீதீ வாரி ப்ரசக்ஷதே |

தத்பானாத்ரக்ஷணாஸ்சைவ ஶிபயோ ரஶ்மயோ மதா: ||

தேஶு ப்ரவேஶாத்விஶ்வேஶ: ஶிபிவிஶ்ட இஹோச்யதே |

குளிர்ச்சியாய் இருப்பதாலும், பகவான் அதில் துயில்கொள்வதாலும், நீரை 'ஶி' என்று அழைப்பார்கள். அதை (கதிரவனின் கிரணங்கள்) பருகுவதாலும், (வெண்மதியின் கிரணங்கள்) பாதுகாப்பதாலும், (கதிரவன் மற்றும் வெண்மதியின்) கிரணங்களை 'ஶிபி' என்று அழைப்பர். அந்த கிரணங்களுள் (ஶிபிக்குள்) பிரவேசித்து உள்ளுறைவதால் விஶ்வேஶ்வரரான பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

274. ஓம் ப்ரகாஶனாய நம:

ஸர்வேஶாம் அனைத்தையும் 

ப்ரகாஶனஶீலத்வாத் ஒளிவிடச் செய்வதால்  

ப்ரகாஶன: பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்தையும் ஒளியூட்டுகிறார். நமக்கு ஒளியை வழங்கும் கதிரவன், வெண்மதி, தீ போன்ற அனைத்துமே பகவானிடமிருந்தே தத்தம் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பகவான் 'ப்ரகாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக