ஞாயிறு, மே 23, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 175

28. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

256. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர:  |

261. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர:  || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

256. ஓம் வ்ருஶாஹிணே நம:

வ்ருஶோ தர்ம: புண்யம் 'வ்ருஶ' என்றால் தர்மம் (அறம்) அல்லது நற்கருமம் (புண்யம்) என்று பொருள் 

ததேவாஹ: அவரே (இந்த அறம், மற்றும் நற்கரும வடிவான பகவானே) 'அஹ' என்றழைக்கப்படும் பகலாக இருக்கிறார் 

ப்ரகாஶஸாதர்ம்யாத் ஒளி வடிவானவராய் இருப்பதால் (பகவான் பகலுக்கு ஸமமானவர்

வ்ருஶாஹீ எனவே, பகவான் 'வ்ருஶாஹீ' என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவான் அறம் மற்றும் நற்கரும (வ்ருஶ) வடிவினராய் இருக்கிறார். ஒளிபடைத்தவராய் இருப்பதால் அவரே பகலாகவும் இருக்கிறார் (அஹி). எனவே, பகவான் 'வ்ருஶாஹீ' (வ்ருஶ + அஹி) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

த்வாதஶாஹப்ரப்ருதிர்வ்ருஶாஹ: பன்னிரு வேள்விகள் 'வ்ருஶாஹ' என்று அழைக்கப்படுகின்றன 

ஸோSஸ்யாஸ்தீதி அவை (அந்த பன்னிரு வேள்விகள்) பகவானிடமே நிலைபெற்றிருக்கின்றன 

வ்ருஶாஹீ எனவே, பகவான் 'வ்ருஶாஹீ' என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பன்னிரு வேள்விகள் 'வ்ருஶாஹ:' என்று அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பகவானிடமே நிலைப்பெற்றிருக்கின்றன. எனவே, பகவான் 'வ்ருஶாஹீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ராஜாஹ: ஸகிப்யஶ்டச்' (பாணினி சூத்ரம் 5.4.91)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ராஜா, அஹி, ஸகி முதலிய சொற்கள் ஒரு 'தத்புருஶ' சொற்றொடரின் பின் வரும்பொழுது அதனுடன் 'டச்' என்ற விகுதி சேர்க்கப்படுகிறது. 

இதி டச் ப்ரத்யய: ஸமாஸாந்த: |

பாணினி ஸூத்ரத்தின் படி 'வ்ருஶாஹ' என்ற சொல்லின் இறுதியில் 'டச்' விகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

257. ஓம் வ்ருஶபாய நம:

வர்ஶத்யேஶ மழைப்போல பொழிகிறார் 

பக்தேப்ய: பக்தர்களின் 

காமானிதி விருப்பங்களை 

வ்ருஶப: எனவே பகவான் 'வ்ருஶப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்புவதை மழை போன்று பொழிகிறார். எனவே, அவர் 'வ்ருஶப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

258. ஓம் விஶ்ணவே நம:

விஶ்ணு: பகவான் 'விஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஶ்ணுர்விக்ரமனாத்' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.13)

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸோக்தே: ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி (பகவான் 'விஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்ற ஸ்ரீவ்யாஸரின் கூற்றின்படி பகவான் 'விஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

259. ஓம் வ்ருஶபர்வணே நம:

வ்ருஶரூபாணி அறமே வடிவானதாய் 

ஸோபானபர்வான்யாஹு: படிக்கட்டுகள் (பர்வா என்றால் படிக்கட்டு) கூறப்பட்டுள்ளன 

பரம் தாம பரமபதமான பகவானின் இருப்பிடத்தை 

ஆருருக்ஷோர் ஏறிச் செல்வதற்கு 

இத்யதோ வ்ருஶபர்வா எனவே, பகவான் 'வ்ருஶபர்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பரமபதமான இருப்பிடத்தை அடைய அறமே வடிவான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன (வேதங்கள் 'வர்ணாஸ்ரம தர்மமான' இந்தப் படிக்கட்டுக்களைப் பற்றி விளக்குகின்றன). எனவே, பகவான் 'வ்ருஶபர்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

260. ஓம் வ்ருஶோதராய நம:

ப்ரஜா (ப்ரஜைகளான) அனைத்துயிர்களையும் 

வர்ஶதீவ மழை பொழியுமா போல பிறப்பிக்கிறார் 

உதரமஸ்யேதி தனது வயிற்றிலிருந்து 

வ்ருஶோதர: எனவே, பகவான் 'வ்ருஶோதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வயிற்றிலிருந்து அனைத்து உயிர்களையும் மழையானது நீரைப் பொழிவது போல உருவாக்குகிறார் (பிறப்பிக்கிறார்). எனவே, அவர் 'வ்ருஶோதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

261. ஓம் வர்த்தனாய நம:

வர்த்தயதீதி (அனைவரையும், அனைத்து உயிரினங்களையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார் 

வர்த்தன: எனவே, பகவான் 'வர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களையும் (அனைவரையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார். எனவே அவர் 'வர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

262. ஓம் வர்த்தமானாய நம:

ப்ரபஞ்ச ரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் 

வர்தத இதி (அனைத்து திசைகளிலும், அனைத்து பரிமாணங்களிலும்) வளர்கிறார் 

வர்த்தமான: எனவே, பகவான் 'வர்த்தமான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் அனைத்து திசைகளிலும், அனைத்துப் பரிமாணங்களிலும் முடிவின்றி வளர்கிறார். எனவே, அவர் 'வர்த்தமான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

263. ஓம் விவிக்தாய நம:

இத்தம் வர்த்தமானோSபி பகவான் இவ்வாறு (ப்ரபஞ்சமாய்) வளர்ந்தாலும் 

ப்ருதகேவ திஶ்டதீதி தான் எதனுடனும் கலவாது தனித்தே இருக்கிறார் 

விவிக்த: எனவே, அவர் 'விவிக்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் படைத்து, அனைத்துமாய் வ்யாபித்து, இந்தப் ப்ரபஞ்சமாகவே விரிந்து வளர்ந்தாலும், தான் எதனுடனும் கலவாது தனித்து இருக்கிறார். எனவே, அவர் 'விவிக்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விவிக்த: என்றால் தனித்திருப்பவர் என்று பொருள். 

264. ஓம் ஶ்ருதிஸாகராய நம:

ஶ்ருதய: ஶ்ருதிகள் (வேதங்கள்

ஸாகர கடலுக்குள்ளே 

இவாத்ர நிதீயந்தே எவ்வாறு செல்வக்குவியல்கள் (முத்துக்களும், பவளங்களும்) நிறைந்திருக்குமோ 

இதி (அவ்வாறு வேதங்கள் பகவான் என்னும் கடலுக்குள் இருக்கின்றன) எனவே

ஶ்ருதிஸாகர: பகவான் 'ஶ்ருதிஸாகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலுக்குள் முத்துக்கள், பவளங்கள் போன்ற செல்வக்குவியல்கள் நிறைந்துள்ளன. அதுபோன்றே, பகவான் என்னும் கடலுக்குள் வேதங்கள் என்னும் செல்வக்குவியல் நிறைந்துள்ளது. எனவே, பகவான் 'ஶ்ருதிஸாகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக