ஞாயிறு, மே 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 177

30. ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன: 

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

275. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |

278. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

275. ஓம் ஒஜஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓஜ: ப்ராணபலம் 'ஓஜஸ்' என்றால் ப்ராணன் மற்றும் பலத்தைக் குறிக்கும் 

தேஜ: ஶௌர்யாதயோ குணா: 'தேஜஸ்' என்றால் சூரத்தனம் முதலிய குணங்களைக் குறிக்கும் 

த்யுதிர்தீப்தி: 'த்யுதி' என்றால் ஒளியைக் குறிக்கும் 

தா: தாரயதீதி இவை அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால் 

ஒஜஸ்தேஜோத்யுதிதர: பகவான் 'ஒஜஸ்தேஜோத்யுதிதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுள் 'ஓஜஸ்' என்றழைக்கப்படும் ப்ராண சக்தி, பலம், 'தேஜஸ்' என்றழைக்கப்படும் சூரத்தனம் முதலிய குணங்கள் 'த்யுதி' என்றழைக்கப்படும் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளார். எனவே, அவர் 'ஒஜஸ்தேஜோத்யுதிதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அதவா, அல்லது 

ஒஜஸ்தேஜ இதி நாமத்வயம் 'ஒஜஸ்' மற்றும் 'தேஜஸ்' என்று இரண்டு நாமங்களாய்ப் பிரித்தால்,

'பலம் பலவதா சாஹம்' (ஸ்ரீ பகவத்கீதை 7.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந்தீர்ந்த வலிமை நான்.

'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்' (ஸ்ரீ பகவத்கீதை 7.10)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளபடி அவர் பலவான்களுக்குள் பலமாகவும், ஒளிபொருந்தியோருள் ஒளியாகவும் இருக்கிறார் (எனவே, 'ஓஜஸ்தேஜ:' என்று அழைக்கப்படுகிறார்). 

த்யுதிம் ஞானலக்ஷணாம் தீப்திம் 'த்யுதி' என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும் 

தாரயதீதி அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்

த்யுதிதர: பகவான் 'த்யுதிதர:' திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'த்யுதி' என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும்அ. ந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்), பகவான் 'த்யுதிதர:' திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும், ஆதிசங்கரர் தனது முதல் விளக்கமான 'ஓஜஸ்தேஜோத்யுதிதர:' என்பதையே பிரதானமான விளக்கமாகக் கொண்டுள்ளார். ஆயிரம் திருநாமக் கணக்கில், இது ஒரே திருநாமமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது. 

276. ஓம் ப்ரகாஶாத்மனே நம:

ப்ரகாஶஸ்வரூப ஒளிமயமான 

ஆத்மா யஸ்ய : ஆத்மாவைக் (திருமேனியைக்)​ கொண்டவர் எவரோ 

ப்ரகாஶாத்மா (அந்த பகவான்) 'ப்ரகாஶாத்மா' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒளிமயமான ஆத்மாவை (திருமேனியை) உடையவராதலால் அவர் 'ப்ரகாஶாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

277. ஓம் ப்ரதாபனாய நம:

ஸவித்ராதி கதிரவன் முதலான விபூதிபி: உருவங்களைத் தரித்து 

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்திற்கு 

ப்ரதாபயதீதி வெப்பமளிப்பதால் 

ப்ரதாபன: பகவான், 'ப்ரதாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவன் முதலிய உருவங்களை தரித்து, இந்தப் ப்ரபஞ்சத்திற்கு வெப்பத்தை அளிக்கிறார் (அல்லது இந்தப் ப்ரபஞ்சத்தினை வெம்மையினால் சுட்டெரிப்பதால்). எனவே, அவர் 'ப்ரதாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

278. ஓம் ருத்தாய நம:

தர்மஞானவைராக்யாதிபிரூபேத்வாத் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் 

ருத்த: பகவான் 'ருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் அவர் 'ருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருத்த: என்றால் செல்வசெழிப்பு (செல்வசெழிப்புள்ளவர்) என்று பொருள். தர்மம் (அறம்), ஞானம் (அறிவு) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) ஆகியவையே உண்மையான செல்வங்களாகும். இவை அனைத்தும் நிறைந்திருப்பதால் பகவான் 'ருத்த:' என்று அழைக்கப்படுகிறார். 

279. ஓம் ஸ்பஶ்டாக்ஷராய நம:

ஸ்பஶ்டம் உதாத்தம் 'ஸ்பஶ்டம்' என்றால் மிகத் தெளிவாக (உரக்க) என்று பொருள் 

ஓம்காரலக்ஷணம் ஓம்காரமென்னும் 

அக்ஷரமஸ்யேதி சொல்லால் உரைக்கப்படுகிறார் (உணர்த்தப்படுகிறார்

ஸ்பஶ்டாக்ஷர: எனவே, பகவான் 'ஸ்பஶ்டாக்ஷர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஓம்காரத்தால் (உரத்து) தெளிவாக உணர்த்தப்படுகிறார். எனவே, அவர் 'ஸ்பஶ்டாக்ஷர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

280. ஓம் மந்த்ராய நம:

ரிக்யஜு:ஸாமலக்ஷணோ ரிக், யஜுர், ஸாம வேதங்களின் (அவ்வேதங்களிலுள்ள மந்திரங்களின்) வடிவில் இருப்பதால் 

மந்த்ர: பகவான் 'மந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ரிக், யஜுர், ஸாம வேதங்களின் வடிவில் (அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் வடிவில்) இருப்பதால் அவர் 'மந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

281. ஓம் சந்த்ராம்ஶவே நம:

ஸம்ஸாரதாபதிக்மாம்ஶு இந்தப் பிறவியென்னும் கதிரவனின் 

தாபதாபித வெப்பத்தினால் தாக்கப்பட்டு தவிக்கும் 

சேதஸாம் மனிதர்களுக்கு 

சந்த்ராம்ஶுரிவ வெண்மதியின் கிரணங்கள் எவ்வாறு மக்களை குளிர்விக்குமோ அவ்வாறே அனைவரையும் குளிர்வித்து 

ஆஹ்லாதகரத்வாத் மகிழ்விப்பதால் 

சந்த்ராம்ஶு பகவான் 'சந்த்ராம்ஶு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் கதிர்களால் துன்புறுவோரை வெண்மதியானது எவ்வாறு தன் கிரணங்களால் குளிர்விக்குமோ, அவ்வாறே, இந்தப் பிறவியென்னும் கதிரவனின் வெப்பத்தால் தாக்கப்பட்டுத் துன்புறுவோரை பகவான் குளிர்வித்து மகிழ்ச்சியூட்டுகிறார். எனவே, அவர் 'சந்த்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திக்ம என்றால் வெப்பம். இங்கு கதிரவனைக் குறிக்கும்.

282. ஓம் பாஸ்கரத்யுதயே நம:

பாஸ்கரத்யுதி கதிரவனின் ஒளியை 

ஸாதர்ம்யாத் ஒத்தவராய் (ஒத்த ஒளியை உடையவராய்) இருப்பதால் 

பாஸ்கரத்யுதி பகவான் 'பாஸ்கரத்யுதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனை ஒத்த ஒளி படைத்தவராய் இருப்பதால் பகவான் 'பாஸ்கரத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக