31. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர: |
ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||
இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
283. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர: |
287. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
283. ஓம் அம்ருதாம்ஸூத்பவாய
நம:
மத்யமானே கடையும்பொழுது
பயோனிதாவம்ருதாம்ஸோஸ்சந்த்ரஸ்ய பாற்கடலை அம்ருதத்தின் தன்மையைக் கொண்ட வெண்மதி
உத்பவோ தோன்றினார்
யஸ்மாத்ஸ: எவரால் (எந்த பரம்பொருளின் சக்தியால் வெண்மதி தோன்றினாரோ) அவர்
அம்ருதாம்ஸூத்பவோ அந்த பகவான், 'அம்ருதாம்ஸூத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(தேவர்களுக்கு அமுதம் கிடைப்பதற்காக)
பாற்கடலைக் கடையும்பொழுது பகவானின் சக்தியாலேயே, அந்த பாற்கடலிலிருந்து அம்ருதத்தின் தன்மையுடன் கூடிய சந்திரன் (வெண்மதி) தொன்றினார். எனவே,
பகவான் 'அம்ருதாம்ஸூத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அம்ருத + அம்ஸு + உத்பவ: = அம்ருதாம்ஸூத்பவ:
284. ஓம் பானவே
நம:
பாதீதி நன்றாக ஒளிவிடுவதால்
பானு: பகவான் 'பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
285. ஓம் ஶஶபிந்தவே
நம:
ஶஶ இவ முயலைப் போன்ற வடிவுடைய
பிந்துர்லாஞ்சனம் 'பிந்து' அதாவது குறியை
அஸ்யேதி உடையதால்
ஶஶபிந்துஸ்சந்த்ர: வெண்மதி (சந்திரன்) ஶஶபிந்து என்று அழைக்கப்படுகிறார்
தத்வத் அது போன்றே (அந்த வெண்மதியைப் போன்றே)
ப்ராஜா: அனைத்து உயிரினங்களையும்
புஶ்ணாதீதி போஶித்து வளர்ப்பதால்
ஶஶபிந்து: பகவான் 'ஶஶபிந்து:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முயலைப் போன்று குறியீடு இருப்பதால் வெண்மதியை (சந்திரனை) 'ஶஶபிந்து' என்று அழைப்பார்கள். அந்த வெண்மதியைப் (சந்திரனைப்) போன்றே அனைத்து உயிரினங்களையும் போஶித்து வளர்ப்பதால் பகவான் 'ஶஶபிந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'புஶ்ணாமி
சௌஶதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:'
(ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ரஸ வடிவமுள்ள சோமமாகி (வெண்மதி) பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
286. ஓம் ஸுரேஶ்வராய
நம:
ஸுராணாம் தேவானாம் 'ஸுரர்' என்றால் தேவர்கள் என்று பொருள்
ஶோபனதாத்ருணாம் (அந்த தேவர்களுக்கும் மற்றும்) அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும்
ச ஈஶ்வர: அரசராக இருப்பதால்
ஸுரேஶ்வர: பகவான் 'ஸுரேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தேவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும் அரசராக (ஈஶ்வரனாக) இருக்கிறார். எனவே, அவர் 'ஸுரேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
287. ஓம் ஔஶதாய
நம:
ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பெரும்பிணிக்கு
பேஶஜத்வாத் மருந்தாக இருப்பதால்
ஒளஶதம் பகவான் 'ஒளஶத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறார். எனவே, அவர் 'ஒளஶத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
288. ஓம் ஜகதஸ்ஸேதவே
நம:
ஜகதாம் இந்த பிறவியென்னும் பெருங்கடலை
ஸமுத்தாரணஹேதுத்வாத் கடப்பதற்கு உதவி புரிபவராகவும்
அஸம்பேதகாரணத்வாத்வா ஒன்றை ஒன்று கலவாமல் பிரித்து வைப்பவராகவும்
ஸேதுவத் ஒரு பாலத்தைப் போல (பாலம் எவ்வாறு ஒரு நீர் நிலையின் இரு பக்கங்களையும் பிரிக்கிறதோ அவ்வாறே)
வர்ணாஶ்ரமாதீனாம் வர்ணாஶ்ரமங்களை
ஜகத:ஸேது: பகவான் 'ஜகத:ஸேது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலைத் தாண்ட உதவும் பாலமாக இருக்கிறார். மேலும், ஒரு பாலம் எவ்வாறு நீர் நிலையின் இரு பக்கங்களை பிரிக்கிறதோ அவ்வாறே பகவானும் இவ்வுலகில் வர்ணாஶ்ரம தர்மங்கள் ஒன்றுக்கொன்று கலவாமல் பிரித்து வைக்கிறார். எனவே, அவர் 'ஜகத:ஸேது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஏஶ ஸேதுர்விதரண ஏஶாம் லோகானாமஸம்பேதாய
(ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த மக்களை ஒருவருக்கொருவர் கலவாத வண்ணம் (பரப்ரஹ்மம்) ஒரு பாலமாக இருக்கிறார்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
289. ஓம் ஸத்யதர்மபராக்ரமாய நம:
ஸத்யா அவிததா உண்மையாகவும்
தர்மா: ஞானாதயோ குணா: (தர்மம் என்றால்) ஞானம் முதலிய குணங்களும்
பராக்ரமஸ்ச யஸ்ய ச வீரமும் ஒருங்கே உள்ளவராதலால்
ஸத்யதர்மபராக்ரம: பகவான் 'ஸத்யதர்மப்ராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் உண்மை, ஞானம் முதலிய குணங்கள் மற்றும் வீரம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். எனவே, அவர் 'ஸத்யதர்மபராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக