26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
240. ஓம்
விபவே நம:
ஹிரண்யகர்ப்பாதிரூபேண 'ஹிரண்யகர்ப்பர்' முதலான
விவிதம் பல்வேறு
பவதீதி உருவங்களை ஏற்பதால்
விபு: பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஹிரண்யகர்ப்பர்' முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'நித்யம்
விபும்' (முண்டக உபநிஶத் 1.6)
முண்டக உபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) எப்பொழுதும்
உள்ளது, அனைத்துமாகத் தோற்றமளிப்பது.
இதி மந்த்ரவர்ணாத் | இந்த (உபநிடத) மந்திரத்தின் படி (பகவான் 'விபு' என்று அழைக்கப்படுகிறார்).
241. ஓம்
ஸத்கர்த்ரே நம:
ஸத்கரோதி நற்காரியம் புரிகின்றார்
பூஜயதீதி (நல்லோரை) வணங்குகிறார்
ஸத்கர்த்தா (எனவே) பகவான் 'ஸத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் 'ஸத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக