27. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: ||
இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
247. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி: |
252. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
252. ஓம் ஸித்தார்த்தாய
நம:
ஸித்தோ நிர்வ்ருத்த: முழுமையடைகின்றன (ஸித்த:)
அர்த்த்யமானோSர்த்தோSஸ்யேதி அவர் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவதனால்
ஸித்தார்த்த: பகவான் 'ஸித்தார்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தான் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுகிறார். எனவே, அவர் 'ஸித்தார்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸத்யகாம:’
(சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய உபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது: விரும்பிய அனைத்தையும் அடைகிறார்.
253. ஓம் ஸித்தஸங்கல்பாய
நம:
ஸித்தோ நிஶ்பன்ன: பூர்த்தியாகிறது (ஸித்த:)
ஸங்கல்போSஸ்யேதி அவரது எண்ணங்களும், முடிவுகளும்
ஸித்தஸங்கல்ப: எனவே, பகவான் 'ஸித்தஸங்கல்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் (முடிவுகளும்) எப்பொழுதும் பூர்த்தியாகிறது. எனவே, அவர் 'ஸித்தஸங்கல்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸத்யஸங்கல்ப:’
(சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய உபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது: அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுகிறார்.
முன் திருநாமத்தில் (ஸித்தார்த்த:) விரும்பிய பொருளை அடைபவர்
என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த திருநாமத்தில் (ஸித்தஸங்கல்ப:) தனது அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுபவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.
254. ஓம் ஸித்திதாய நம:
ஸித்திம் ஃபலம் பலன்களை (ஸித்தி)
கர்த்ருப்ய: செயல் புரிபவர்களுக்கு
ஸ்வாதிகாரானுரூபதோ (ஸ்வ அதிகாரான் அனுரூபதோ) அவரவரது செயல்களுக்குத் தக்கவாறு
ததாதீதி அளிப்பதால்
ஸித்தித: பகவான் 'ஸித்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஒவ்வொருவருக்கும், அவர்களது செயல்களுக்குத் தக்க பலன்களை அளிக்கிறார். எனவே, அவர் 'ஸித்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
255. ஓம் ஸித்திஸாதனாய நம:
ஸித்தே: க்ரியாயா: 'ஸித்தி' என்றால் செயல் (க்ரியா)
ஸாதகத்வாத் அதை புரிபவராகவும், அதைப் புரிபவர்களுக்கு உதவுபவராகவும் இருப்பதால்
ஸித்திஸாதன: பகவான் 'ஸித்திஸாதன:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் 'ஸித்தியை' (அதாவது செயல்களைப்) புரிகிறார். செயல்களைப் புரிபவர்களுக்கு (அவர்களைத் தூண்டி)
உதவுபவராகவும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்திஸாதன:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக ஸாதனம் என்றால்
கருவி, வழி என்று பல பொருள்கள் உண்டு. இங்கு, பகவான் ஸித்திக்கு (செயல்களுக்கு) ஸாதனமாய் இருக்கிறார்
என்று பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக