சனி, மார்ச் 31, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 21

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 

"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"

என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக சில உபநிஶத் வாக்யங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம்.


அக்னிர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதிரூபோ பஹிச்ச ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் உலகில் உள்ள ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது.

வாயுர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதிரூபோ பஹிச்ச ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் உலகில் உள்ள ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது

ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷூர்னலிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஶை: |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகது:கேன பாஹ்ய: ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியன், (அந்த ஒளியை கொண்டு பார்க்கப்படும்) பார்வையில் உள்ள குறைகளாலும் வெளியே (காட்சிப் பொருட்களில்) உள்ள குறைகளாலும் எவ்வாறு பாதிக்கபடுவதில்லையோ, அவ்விதம், எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா உலகத்தினுடைய துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. (அந்த ஆத்மா) அனைத்தையும் கடந்தும் உள்ளது.

ஏகோ வஷீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி |
தமாத்மஸ்தம் யேSனுபஶ்யந்தி தீராஸ்தேஶாம் ஶாஸ்வதம் நேதரேஶாம் ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒன்று அனைத்தையும் தன வசத்தில் வைத்துள்ளதாகவும், எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டும் தன்னுடைய ஒரு ரூபத்தை பலவாறாக வெளிப்படுத்துகிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான ஸுகம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

நித்யோ நித்யானாம் சேதனஸ்சேதனானாம் ஏகோ
பஹூனாம் யோ விததாதி காமான் |
தமாத்மஸ்தம் யேSனுபஷ்யந்தி தீராஸ்
தேஶாம் ஶாஸ்வதீ நேதரேஶாம் || (கடோபநிஷத் 2.2.9 – 2.2.13)
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒன்று அழிவனவற்றுள் அழியாததாகவும், உயிரினங்களுக்குள் உயிராகவும் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான அமைதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

இதி காடகே (அக்னிர்யதைகோ தொடக்கமாக) இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீதேகமேவ ததேகம் ஸன்ன வ்யபவத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.11)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் அந்த ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. தனித்து இருந்ததினால் அந்த ப்ரஹ்மம் கர்மங்களை புரியவில்லை.

நான்யததோSஸ்தி த்ரஷ்டா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதை (அந்த ப்ரஹ்மத்தை) தவிர பார்ப்பதற்கு எதுவும் இல்லை

இத்யாதி ப்ருஹதாரண்யகே இவ்வாறு ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, மார்ச் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 20

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"

என்று கூறுகிறார்.

இதில் முதல் பதத்திற்கு (பவித்ராணாம் பவித்ரம் ய:) உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டியதை நேற்று வரை பார்த்தோம். இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.


நனு கதம் ஏகோ தேவ: ஜீவ பரயோர்பேதாத்?
கேள்வி: ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவர்கள்; அவ்வாறிருக்க, கடவுள் ஒருவரே என்று எவ்வாறு கூறமுடியும்?

ந பதில்:அப்படி கூற இயலாது.

(ஆதி சங்கரர் தானே இந்த கேள்வியைக் கேட்டு, இதன் விடையாக தனது அத்வைத கொள்கையின் சாரத்தை கூறுகிறார். அத்வைதமாவது ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன் மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ – ‘ப்ரஹ்மம் ஒன்றே உண்மை. இவ்வுலகம் மற்றும் அதில் காணப்படும் அனைத்தும் கானல் நீர் போல் நிலையற்றது. ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. அந்த ப்ரஹ்மத்தை தவிர இரண்டாவது தத்துவமே இல்லை என்பதாகும்).


‘தத்ஸ்ருஷ்டா ததேவானுப்ராவிஷத்’ (தைத்ரிய உபநிஶத் 2.6)
தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: தானே அவற்றை படைத்து, அதனுள் பிரவேசித்தார்
‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய:’ (ப்ரஹதாரண்ய உபநிஶத் 1.4.7)
ப்ரஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அவர் இந்த உடலில் நகம் முதற்கொண்டு (தலை வரை) எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்’

இத்யாதி ஸ்ருதிப்யோSவிக்ருதஸ்ய பரஸ்ய புத்திதத்வ்ருத்திசாக்ஷித்வேன பிரவேஷஷ்ராவணாதபேத: |
இந்த ஸ்ருதி வாக்கியங்கள் ‘மாறுதலற்ற அந்த பரமாத்மாவே புத்தி மற்றும் அதன் விரிவான இந்த சரீரத்தில் சாக்ஷி ரூபமாய் உள்நுழைந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்’ என்று கூறுகின்றன. எனவே, ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேற்றுமை கிடையாது (இரண்டும் ஒன்றே).

ப்ரவிஷ்டானாமிதரேதரபேதாத் பராத்மைகத்வம் கதமிதி சேத்?
கேள்வி: உள்நுழைந்தார் என்றால் (உள்ளே இருப்பதான) ஜீவத்மாவும், (சாட்சியாக உள்நுழைந்த) பரமாத்மாவும் ஒன்று என்று எவ்வாறு கூறுவது?

பதில்:அப்படி அல்ல

‘ஏகோ தேவ: பஹுதா சந்நிவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: ஒருவரே கடவுள்; அவரே பலவாறாக நிலைபெற்றிருக்கிறார்.
‘ஏக: சன் பஹுதா விசார:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.11)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: அந்த ஒருவரே பலவாறாக எண்ணப்படுகிறார்.
‘த்வமேகோSஸி பஹுனனுப்ரவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: தாங்கள் ஒருவரே பலவற்றிலும் உள்நுழைந்திருக்கிறீர்

இத்யேகஸ்யைவ பஹுதா பிரவேஷஷ்ரவணாத் பிரவிஷ்டானாம் ச ந பேத: |
இந்த ஸ்ருதி வாக்கியங்களில் ஒருவரே பலவாறாக மாறி, பலவற்றின் உள்நுழைந்தார் என்று கூறப்படுகின்றது. எனவே, உள்நுழைந்த பரமாத்மாவிற்கும், உள்ளே உறையும் ஜீவாத்மாவிற்கும் வேறுபாடுகள் கிடையாது.

‘ஹிரண்யகர்ப்ப:’ (ரிக் வேதம் 10.121.1) இத்யஷ்டௌ மந்த்ரா: |
ரிக் வேதத்தில் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று தொடங்கி எட்டு மந்திரங்கள் உள்ளன.

‘கஸ்மை தேவாய’ (தைத்ரீயகம்)
இத்யத்ர ஏகாரலோபேநைகதைவதபிரதிபாதகஸ்தைத்ரீயகே |
‘கஸ்மை தேவாய’ என தொடங்கும் தைத்திரீயக ஸ்ருதியிலும் (இந்த வாக்கியத்தின்) தொடக்கத்தில் ஏகாரம் மறைந்து இருக்கிறது (அதாவது அந்த ஸ்ருதியில் கஸ்மை என்பதற்கு பதில் ஏகஸ்மை என்று பொருள் கொள்ள வேண்டும்). எனவே, இந்த மந்திரமும் ஒன்றே தெய்வம் என்றே கூறுகின்றன.

வியாழன், மார்ச் 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 19

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"

என்று கூறுகிறார்.

இதில் முதல் பதத்திற்கு (பவித்ராணாம் பவித்ரம் ய:) உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டியதை நேற்று வரை பார்த்தோம். இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.


மங்களானாம் ச மங்களம் மங்களம் சுகம் சுகம் மங்களம் என்று கூறப்படுகிறது தத் ஸாதனம் அதை அடையும் வழியாகவும் தஞ்ஞாபகம் ச அதை தருபவராகவும், தேஷாமபி பரமானந்தலக்ஷணம் பரம் மங்களமிதி அவர் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பதால் மங்களானாம் ச மங்களம் (பகவான் ஸ்ரீ விஶ்ணு) மங்களமானவைகளை காட்டிலும் மங்களமானவர் என்று அழைக்கப்படுகிறார்.

தைவதம் தேவதானாம் ச தேவானாம் தேவ: அனைத்து தேவர்களுக்கும் தேவர், த்யௌதனாதிபி: ஸமுத்கர்ஷேண வர்த்தமானத்வாத் தனது ஒளி (ப்ரகாசம்) முதலியவற்றால் அனைவரை காட்டிலும் மேலானவர்.

பூதானாம் ய: அவ்யய: வ்யயரஹித் அழிதலற்றவரும் பிதா ஜனகோ யோ தேவ: அனைத்து ஜீவராசிகளையும் தோற்றுவித்தவருமான கடவுளே, ஸ ஏகம் தைவதம் லோக இதி வாக்யார்த்த: இவ்வுலகில் ஒரே முழுமுதற் கடவுளாவார் என்பதே இந்த வாக்கியத்தின் பொருளாகும் (இதுவே யுதிஷ்டிரன் கேட்ட ‘கிமேகம் தைவதம் லோகே’ என்ற முதல் கேள்வியின் விடையாகும்).

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபி ஸர்வபூதாந்தராத்மா |
கர்மாத்யக்ஷ: சர்வபூதாதிவாஸ: சாக்ஷி சேதா கேவலோ நிர்குணச்ச ||
(ஸ்வேதாஷ்வர உபநிஶத் 6.11)
ஸ்வேதாஷ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து இருக்கிறாரோ, எங்கும் நிறைந்து இருக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கிறாரோ, (அந்த ஜீவராசிகளின்) கர்மங்களை (கர்மங்களின் பலன்களை அளிப்பதன் மூலம்) நிர்வகிக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளையும் நிலைநிறுத்துகிறாரோ, அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறாரோ, அனைவருக்கும் தன்னுனர்வைத் தருகிறாரோ, அந்த நிர்குணமானவரே ஒரே தெய்வமாவார்.

யோ ப்ரஹ்மாம் விததாதி பூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |
தம்ஹ தேவம் ஆத்மபுத்திப்ரகாஶம்
முமுக்ஷுர்வை ரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

‘சேயம் தேவதைக்ஷத’ (சாந்தோக்ய உபநிஶத் 6.3.2)
‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அந்த ஆதிமுழுமுதற்கடவுள் நினைத்தார்’; ‘அவர் இரண்டற்ற ஒருவராவார் (அத்விதீய)’

புதன், மார்ச் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 18

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.


யதாக்னிருத்ததஷிக: கக்ஷம் தஹதி சானில: |
ததா சித்தஸ்திதோ விஶ்ணுர் யோகிநாம் சர்வகில்பிஷம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.74)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு காற்றுடன் கூடிய நெருப்பானது உயர உயர எழுந்து வைக்கோல் பொதிகளை எரித்து விடுமோ, அவ்வாறே பகவான் ஸ்ரீ விஶ்ணு யோகிகளின் ஹ்ருதயத்தில் வீற்றிருந்து அவர்களின் அனைத்து தோஷங்களையும் அழிக்கிறார்.

ஏகஸ்மின்னப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யானவர்ஜிதே |
தச்யுபிர்முஷிதேனேவ யுக்தமாகிரந்திதும் ப்ருஷாம்||
திருடர்களால் நமது பொருட்கள் திருடப்பட்டால் எவ்வாறு துக்கப்பட்டு அழுவோமோ, அவ்வாறு (பகவான் ஸ்ரீ ஹரியை) த்யானிக்காமல் ஒரு முஹூர்த்தம் நேரம் கழிந்தாலும் அழுது வருந்த வேண்டும்.

ஜனார்தனம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரன் மனுஷ்ய: ஸததம் மஹாமுனே |
து:க்கானி ஸர்வான்யபஹந்தி ஸாதயத்யசேஷகார்யாணி ச யான்னபீப்ஸதே ||
ஹே மஹாமுனியே!! அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபுவும், அனைத்துலகத்திற்கும் குருவானவருமான பகவான் ஸ்ரீ ஜனார்தனனை நித்தம் த்யானிப்பதன் மூலம் ஒரு மனிதர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவதோடல்லாமல், அவரவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

ஏவமேகாக்ரசித்த: ஸன் ஸம்ஸ்மரன் மதுசூதனம் |
ஜன்மம்ருத்யுஜராக்ராஹம் ஸம்ஸாராப்திம் தரிஷ்யதி ||
இவ்வாறு ஒருமித்த மனதோடு பகவான் ஸ்ரீ மதுசூதனனை த்யானிப்பதால் ஒரு மனிதன், பிறப்பு, இறப்பு மற்றும் மூப்பு போன்ற முதலைகள் நிறைந்திருக்கும் ஸம்ஸாரம் எனும் பெருங்கடலைத் தாண்டுகிறான்.

கலாவத்ராபி தோஷாட்யே விஷயாஸக்தமானஸ: |
க்ருத்வாபி ஸகலம் பாபம் கோவிந்தம் ஸம்ஸ்மரண் சுசி: ||
இந்த தோஷங்கள் நிறைந்த கலியுகத்தில், ஒரு மனிதன், விஷயசுகத்தில் மனதை லயிக்கவிட்டு பாவங்களை புரிந்திருந்தாலும், பகவான் ஸ்ரீ கோவிந்தனை த்யானிப்பத்தின் மூலம் தூய்மை அடைகிறான்.

வாசுதேவே மனோ யஸ்ய ஜபஹோமார்ச்சனாதிஷு |
தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரவாதிகம் ஃபலம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.41)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! எவரொருவரின் மனது ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய செயல்களை செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு (பகவானை த்யானிப்பதற்கு இடையூறாக இருக்குமென்பதால்) தேவேந்திர பதவிகூட இடராகவே தோன்றும்.

லோகத்ர்யாதிபதிமப்ரதிமப்ரபாவமீஷத் ப்ரணம்ய சிரஸா பிரபவிஶ்ணுமீஷம் |
ஜன்மாந்தரப்ரளயகல்பஸஹஸ்ரஜாதமாஷு ப்ரணாஷமுபயாதி நரஸ்ய பாபம் ||
ஆயிரம் மஹாகல்பங்களிலும், பிரளயங்களிலும், ஜன்ம ஜன்மங்களிலும் செய்த பாவங்கள் கூட, மூவுலகின் ஸ்வாமியும், தன்னிகரில்லா சக்திபடைத்தவரும், அனைவரையும் ஆள்பவரான பகவான் ஸ்ரீ விஶ்ணுவை சிறிது நேரம் தலை வணங்குவதாலேயே அழிந்து விடுகின்றன.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஷ்வமேதாவப்ருதேன துல்ய: |
தசாஷ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||
(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)
மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

அதஸீபுஷ்ப ஶங்காஷம் பீதவாஸஸம் அச்யுதம் |
யே நமஸ்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம் ||
(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.91)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஆளிபூவைப்போல (கருநீல) நிறம்படைத்தவரும், மஞ்சள்வர்ண பட்டாடை உடுத்தியிருப்பவருமான பகவான் ஸ்ரீ அச்யுதன் கோவிந்தனை யார் வணங்குகிறார்களோ, அவர்களுக்கு எந்த வித பயமும் இல்லை.

ஷாட்யேனாபி நமஸ்கார: ப்ரயுக்தஸ்சக்ரபாணயே |
ஸம்ஸாரஸ்தூலபந்தானாமுத்வேஜனகரோ ஹி ஸ: ||
சக்ரபாணியான பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு (மனதில் பக்தியின்றி) தவறான எண்ணத்தோடும் கர்வத்தோடும், செய்யப்படும் நமஸ்காரங்கள் கூட ஸம்ஸாரம் என்னும் மரத்தின் வேரை வெட்டிவிடும்.

இத்யாதிஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராண வசனேப்ய: |
(இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண வசனேப்ய:)
இப்படிப்பட்ட வேத, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்து (பகவான் ஸ்ரீ விஶ்ணுவும், அவரது நாம ஸங்கீர்த்தனமும் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்  /புனிதம் என்பது நிரூபணமாகிறது).

செவ்வாய், மார்ச் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 17


"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.


ஷமாயாலம் ஜலம் வஹ்னேஸ்தமஸோ பாஸ்கரோதய: |
ஷாந்தி: கலௌ ஹ்யகௌகஸ்ய நாமசங்கீர்த்தனம் ஹரே: ||
நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரைப் போலவும், இருளை போக்குவதில் சூரியனைப் போலவும், கலியுகத்தில் பாபத்திரள்களை ஸ்ரீ ஹரிநாமசங்கீர்த்தனம் போக்குகிறது.

ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம் |
கலௌ நாஸ்தயேவ நாஸ்தயேவ நாஸ்தயேவ கதிரன்யதா || 
(ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணம் 1.41.15)
ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹரி நாமமே, ஹரி நாமமே, ஹரி நாமமே எனது வாழ்க்கையாகும். இதை தவிர கலியுகத்தில் வேறு புகலிடம் இல்லவே இல்லை, இல்லவே இல்லை, இல்லவே இல்லை.

ஸ்துத்வா விஶ்ணும் வாஸுதேவம் விபாபோ ஜாயதே நர: |
விஶ்ணோ: ஸம்பூஜநான்னித்யம் ர்வபாபம் ப்ரனஶ்யதி ||
எங்கும் நிறைந்துள்ள பகவான் வாசுதேவனான ஸ்ரீ விஶ்ணுவை நித்யம் துதிப்பதால் ஒரு மனிதன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். பகவான் ஸ்ரீ விஶ்ணுவை தினமும் பூஜை செய்வதன் மூலம் அனைத்து பாவங்களும் அழிகின்றன.

ஸர்வதா ஸர்வகார்யேஷு நாஸ்தி தேஶாம் அமங்கலம் |
ஶாம் ஹ்ருதிஸ்தோ பகவான் மங்களாயதனோ ஹரி: ||
(ஸ்ரீ ஸ்கந்த புராணம் 5.3.157.7)
ஸ்ரீ ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவரின் ஹ்ருதயத்தில் அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடமான பகவான் ஸ்ரீ ஹரி வாசம் செய்கிறாரோ, அவருக்கு எந்த ஒரு காரியத்திலும் (செயலிலும்) அமங்களங்கள் ஏற்படுவதில்லை.

நித்யம் ஸஞ்சிந்தயேத்தேவம் யோகயுக்தோ ஜனார்தனம் |
ஸாஸ்ய மன்யே பரா ரக்ஷா கோ ஹினஸ்த்யச்யுதாஶ்ரயம் ||
மனதை ஒருமுகபடுத்தி பகவான் ஸ்ரீ ஜனார்தனனை த்யானிக்கவேண்டும். இதுவே அனைவருக்கும் மிகச்சிறந்த காப்பாகும் (ரக்ஷையாகும்). எவரொருவர் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்துள்ளாரோ (பகவான் ஸ்ரீ ஹரியால் காக்கப்படுகிறாரோ), அவருக்கு யார் என்ன துன்பம் விளைவிக்க முடியும்?



கங்காஸ்நானஸஹஸ்ரேஶு புஶ்கர ஸ்நானகோடிஶு |
யத் பாபம் விலயம் யாதி ஸ்ம்ருதே நஶ்யதி தத்தரௌ (தத் ஹரௌ) ||
(ஸ்ரீ கருட புராணம் 1.230.18)
ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஆயிரம் முறை கங்கையில் புனித நீராடுவதாலும், கோடி முறை புஶ்கரத்தில் புனித நீராடுவதாலும் எவ்வளவு பாபங்கள் கழியுமோ, அவ்வளவு பாபங்கள் பகவான் ஸ்ரீ ஹரியை நினைப்பதால் (த்யானிப்பதால்) அழிகிறது.

முஹுர்த்தமபி யோ த்யாயேந்நாராயணம் அனாமயம் |
ஸோSபி ஸித்திம் அவாப்னோதி கிம்புனஸ்தத்பராயண: ||
எவரொருவர் அழிவற்ற பகவான் ஸ்ரீ நாராயணனை ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே தியானம் செய்கிறாரோ, அவரும் அனைத்து ஸித்திகளையும் அடைகிறார்; பிறகு, பகவான் ஸ்ரீ நாராயணனை எப்பொழுதும் சரணடைந்துள்ளாரோ அவரைப்பற்றி (அவர் அடையும் பலன்களைப்பற்றி) என்னவென்று கூறுவது?

ப்ராயச்சித்தான்யசேஶானி தப: கர்மாத்மகானி வை |
யானி தேஶாம் அஶேஶானாம் கிருஷ்ணானுஸ்மரணம் பரம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.39)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தவம் மற்றும் கர்ம முறைகளாக கூறப்பட்டுள்ள அனைத்து வகை ப்ராயசித்தங்களைக் காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை த்யானிப்பதே (நமது பாவங்கள் தொலைவதற்கான) மிகச்சிறந்த ப்ராயச்சித்தமாகும்.
(இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஶ்ணுபுராணத்தின் மிகச்சிறந்த ஸ்லோகமாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்லோகம் அனைவராலும் நித்ய பாராயணம் செய்யத்தக்கதாகும்).

கலிகல்மமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |
ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத்யத்ராபி ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ ஹரியை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மஷதை: க்ருதம் |
பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||
எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் எரிக்கப்படுகின்றன.