சனி, ஏப்ரல் 11, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 131

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:

169. ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் ஶப்தம் முதலிய (கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய
இந்த்ரியானாம் ஐம்புலன்களுக்கும் 
அவிஶய இதி விஶயம் ஆகாதவர் (அவற்றிற்கு எட்டாதவர்
அதீந்த்ரிய: பகவான் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்) எட்டாதவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157-வது திருநாமம் 'அதீந்த்ர:' (அதி + இந்த்ரன்); இந்தத் திருநாமம் அதீந்த்ரிய: (அதி + இந்த்ரியம்)

170. ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாவிகளுக்குக் கூட 
மாயாகாரித்வாத் மாயையை விளைவிப்பவர் 
மஹாமாய: எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவி. சாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோ, மீறவோ இயலாது. எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மம மாயா துரத்யயா (ஸ்ரீமத் பகவத்கீதை 7.14)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: எனது தேவமாயை கடத்தற்கரியது.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

171. ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 
உத்பத்தி படைத்து 
ஸ்திதி காத்து 
லயார்த்தம் அழிப்பது (ஆகிய முத்தொழில்களை
உத்யுக்தத்வாத் மிகுந்த உற்சாகத்துடன் செய்வதால் 
மஹோத்ஸாஹ: பகவான் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார். எனவே, அவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

172. ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 
பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 
மஹாபல: பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.