செவ்வாய், ஜூலை 31, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 73

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


50. ஓம் விஶ்வகர்மணே நம:
விஶ்வம் அனைத்து ஜீவராசிகளும் கர்மம் க்ரியா கர்ம என்றால் செயல் யஸ்ய எவருடையதோ விஶ்வகர்மா அந்த பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம உருவாக்கபடுவதால் இந்தப் பிரபஞ்சத்தையே ‘கர்மம்’ என்று கூறலாம் விஶ்வம் கர்ம இந்தப் பிரபஞ்சமெனும் செயல் யஸ்யேதி  எவருடையதோ வா விஶ்வகர்மா அந்த பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விசித்ர ஆச்சரியமான நிர்மாணக்திமத்வாத்வா படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் விஶ்வகர்மா பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு ஆச்சரியமான பலவற்றையும் மிக சாதாரணமாகவே அவர் படைக்கிறார்.

த்வஶ்ட்ரா த்வஶ்டா எனப்படும் தேவர்களுக்கு ஸாத்ருஶ்யாத்வா சமானமானவராக இருப்பதால் விஶ்வகர்மா பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான் 'விஸ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்வஶ்டா எனும் தேவர்களை விஸ்வகர்மா என்றும் அழைப்பதுண்டு.

51. ஓம் மனவே நம:
மனனாத் நினைப்பதால் (எண்ணுவதால்) மனு: பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்துமே அந்த பகவான் ஒருவரே (அத்வைத தத்துவம்). அவரின்றி வேறொன்றுமில்லை. எனவே, நினைப்பவரும் அவரே, நினைக்கப்படுபவரும் அவரே.

'நான்யோSதோSஸ்தி மந்தா' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(பரப்ரஹ்மத்தைத் தவிர) நினைப்பவர் வேறொருவர் இல்லை.

மந்த்ரோ வா மந்திரங்களின் வடிவில் இருப்பதால் மனு: பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா (இந்த மனித குலத்தை) நான்முகக் கடவுள் பிரமனின் வடிவில் இருந்துப் படிப்பதால் மனு: பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜூலை 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 72

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |
விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


48. ஓம் பத்மநாபாய நம:
ஸர்வஜகத்காரணம் அனைத்துலகின் தோன்றுமிடமாக பத்மம் தாமரை நாபௌ யஸ்ய எவருடைய தொப்புளில் இருக்கிறதோ பத்மநாப: அவர் 'பத்மநாபன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்'
பிறப்பற்ற (அந்தப் பரம்பொருளின்) தொப்புளில் ஒன்று (ஒரு தாமரை) உள்ளது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

49. ஓம் அமரப்ரபவே நம:
அமரானாம் தேவர்களின் ப்ரபு: தலைவர் அமரப்ரபு: பகவான் 'அமரப்ரபு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமரப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சனி, ஜூலை 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 71

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |
விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


47. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:
ஹ்ருஶீகாணிந்த்ரியாணி 'ஹ்ருஷீகம்' என்றால் இந்த்ரியங்கள் தேஶாம் : அவற்றை அடக்கி ஆள்கிறார் க்ஷேத்ரஞ ரூபபாக் (அனைத்திலும் உள்ளுறைந்து) அனைத்தையும் உள்ளபடி அறிவதால் ஹ்ருஶீகேஶ: அவர் 'ஹ்ருஶீகேஶன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்து, அனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார். எனவே, பகவான் 'ஹ்ருஶீகேஶன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது இந்த்ரியாணி புலன்கள் யஸ்ய எவரின் வஶே கட்டுப்பாட்டுக்குள் வர்த்தந்தே உள்ளதோ ஸ பரமாத்மா அந்தப் பரம்பொருள் ஹ்ருஶீகேஶ:  'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா அல்லது ஸூர்யரூபஸ்ய கதிரவனின் வடிவிலும் சந்த்ரரூபஸ்ய குளிர்நிலவின் வடிவிலும் ஜகத்ப்ரீதிகரா உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் ஹ்ருஶ்டா: ஹ்ருஷ்டா என்றால் மகிழ்ச்சி கேஶா தனது கிரணங்களால் ரஶ்மய: 'ரஶ்மி' என்றால் கிரணங்கள் அவர் ஹ்ருஶீகேஶ: அவர் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும், தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் 'ஹ்ருஷீகேஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸூர்யரஸ்மிர்ஹரிகேஶ: புரஸ்தாத்'
கதிரவனின் முன்னே பகவான் ஹரியின் ஒளிக்கிரணங்கள் (கேஶ) உள்ளன.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹ்ருஶ்டகேஶம் என்னும் இடத்தில்) ஹ்ருஶீகேஶன் என்ற பெயர் ப்ருஶோதராதி ஸூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ப்ருஶோதராதி ஸூத்ரம்: எவரேனும் பெரியவர் ஒருவர் ஒரு பெயரையோ, சொல்லையோ குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தி இருந்தால், அந்த சொல் இலக்கண முறைப்படி அமையாது இருப்பினும், முன்னோர் கூறிய வடிவிலும், பொருளிலுமேயே நாம் பயன்படுத்த வேண்டும்.

யதோக்தம் மோக்ஷதர்மே | எவ்வாறு மோக்ஷதர்மத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதோ,

ஸூர்யாசந்த்ரமஸௌ சஷ்வதம்ஶுபி: கேஶஸம்ஞிதை: |
போதயன் ஸ்வாபயம்ஸ்சைவ ஜகதுத்திஶ்டதே ப்ருதக் ||
(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.66)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனும், திங்களும் தங்களுடைய “கேஶ” என்னும் கிரணங்களால் இந்த உலக மக்களை துயில் எழுப்பியும், துயிலுறச் செய்தும் (அந்தக் கிரணங்களிலிருந்து) வேறுபட்டு உதிக்கின்றன.

போதனாத்ஸ்வாபனாஸ்சைவ ஜகதோ ஹர்ஶணம் பவேத் |
அக்னிஶோமக்ருதைரேவம் கர்மபி: பாண்டுநந்தன ||
ஹ்ருஶீகேஶோ மஹேஶானோ வரதோ லோகபாவன: ||
(மஹாபாரதம் சாந்தி பர்வம் 342.67)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: மக்களைத் துயிலெழுப்பியும், துயிலுறச்செய்தும் அவர்களை (கதிரவனும், திங்களும்) மகிழச் செய்கின்றனர். ஒ பாண்டுவின் மைந்தனே!!! இவ்வாறு, தீயையும் (இது கதிரவனுக்கு அடைமொழி), திங்களையும் தத்தம் கடமைகளைச் செய்விப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமாய், அனைவருக்கும் வரங்களை வழங்குபவரான அந்த பரம்பொருளை ‘ஹ்ருஷீகேஷன்’ என்று அழைக்கின்றனர்.

இதி | இவ்வாறு (பகவான் ஹ்ருஶீகேஶன் என்று அழைக்கப்படுகிறார்).

புதன், ஜூலை 25, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 70


6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||
46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

46. ஓம் அப்ரமேயாய நம:
ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: பரம்பொருள் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.  எனவே, ஒலி முதலியவற்றை அறிய உதவும் நமது புலனுறுப்புக்களால் அவரை அறிய இயலாது நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் எவ்வித குறியீடோ, குறிப்பிட்டதொரு உருவமோ இல்லாததால் அவரை அனுமானித்தும் அறிந்துகொள்ள முடியாது (உதாரணமாக, நேரடியாக தெரியாவிடினும் புகை இருப்பதன் மூலம் நெருப்பை நாம் அனுமானிக்கலாம். பரம்பொருளை அவ்வாறும் அறிய முடியாது) | நாப்யுபமான ஸித்த:, நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் அவரை பிரிக்க (பகுக்க) முடியாது, (அவருக்கு) வேறொரு ஒப்புமை இல்லை. எனவே, எடுத்துக்காட்டின் மூலமும் அவரை அறிய முடியாது | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் அவரை சில சூழ்நிலைகளைக் (காரணங்களைக்) கொண்டும் அறிய முடியாது, ஏனெனில், அவரைத் தவிர வேறொன்றைக் கொண்டும் அந்த சூழ்நிலைகளுக்கு விளக்கம் அளிக்க இயலாது (அவரைக் கொண்டே விளக்கம் அளிக்க வேண்டுமெனில், அவற்றால் அவரை எவ்வாறு அறிய முடியும்?) | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் அவர் அனைத்திலும் உள்ளார் என்று ஏற்றுக்கொள்வதால், அவரை (இவை அனைத்துமில்லை) என்ற நீக்க வாதத்தாலும் வர்ணிக்க இயலாது (பரப்ரஹ்மம் இது இல்லை, இது இல்லை என்று அனைத்தையும் நீக்கி, முடிவில் எது உள்ளதோ அதுவே என்று விவரிப்பது நீக்க வாதம்) | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய எனவே, அவரை (நாம் காணும், அறியும்) எதுவும் இல்லை என்ற நீக்க வாதத்தை விளக்கும் ஆறு சான்றுகளாலும் விளக்க இயலாது | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதியாபாவாத் அவரை, சாத்திரங்களைக் கொண்டும் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஏனெனில், அவர் சாத்திர விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டும், அவற்றிலிருந்து மேம்பட்டும் இருப்பவர் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? உண்மை இவ்வாறிருக்க, அவரை சாத்திரங்களைக் கொண்டே அறிய இயலும் என்று கூறுவது ஏன்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா ஒளிமயமான அவர் (வேதம் முதலிய) சான்றுகளுக்கு அப்பாற்பட்டு இருப்பினும், (புலன்களுக்கு அறியமுடியாத வகையில்) இந்த உலகனைத்தையும் (அதன் உள்ளிருக்கும் ஆத்மாவாக) கட்டுக்குள் வைத்திருப்பதால், அவர் (மறைமுகமாக) சாத்திரங்களில் (அவரைப்பற்றிக்) கூறியள்ளதற்கு சாட்சியாக இருக்கிறார். எனவே, மற்ற எவ்வகையிலும் அவரை அறிய முடியாது, அத்தகைய சாட்சியாக மட்டுமே அவரை அறியமுடியமாதலால் அவர் ‘அப்ரமேயர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் 'அப்ரமேயஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜூலை 22, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 69

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் உள்ள 9 திருநாமங்களும்  அவற்றின் விளக்கமும்: 

37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

37. ஓம் ஸ்வயம்புவே நம:
ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |
(வேறொரு காரணமின்றிதான் மட்டும்தனியொருவராய் இருப்பதால்பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |
அனைவருக்கும் மேலே இருப்பதாலும்தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |
எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

38. ஓம் ஶம்பவே நம:
ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |
தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்பகவான் 'ஶம்பு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

39. ஓம் ஆதித்யாய நம:
ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶஆதித்ய: |
சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |
பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |
'அதிதிஎன்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும்அந்த நிலமகளின் கணவன் ஆதலால்பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |
ஒரே சூரியன்பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறதுஅது போன்றேஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார்.இவ்வாறுசூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

40. ஓம் புஶ்கராக்ஷாய நம:
புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |
தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் 'புஷ்கராக்ஷ' (தாமரைக்கண்ணன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

41. ஓம் மஹாஸ்வனாய நம:
மஹான் ஊர்ஜிதஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய  மஹாஸ்வன: |
வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லதுமிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

42. ஓம் அநாதிநிதனாய நம:
ஆதிர்ஜன்மநிதனம் விநாஶதத்த்வயம் யஸ்ய ந வித்யதே  அநாதிநிதன: |
எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் 'அநாதிநிதன:' (பிறப்புஇறப்பு அற்றவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

43. ஓம் தாத்ரே நம:
ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |
ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் 'தாதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

44. ஓம் விதாத்ரே நம:
கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |
செயல்களையும்அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் 'விதாதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

45. ஓம் தாதவ உத்தமாய நம:
அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்யப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |
(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ளஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தைதாங்கும் சக்தியை அளித்துஅவர்களையும்(அந்த சக்தியை அளிப்பதன் மூலம்தாங்குவதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:இதி வா வையதிகரண்யேன |
(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாதுஉத்தம என்றுஇரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ தாது: |
இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் 'தாது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வேஶாம் உத்கதானாம் அதிஶயேனோத்கதத்வாத் உத்தம: |
அனைவரையும்அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் 'உத்தமர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.