புதன், டிசம்பர் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 99

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
    |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

101. ஓம் வ்ருஶாகபயே நம:
வர்ஶணாத் மழைப்போன்று 
ஸர்வகாமானாம் அனைத்து ஆசைகளையும் நமக்கு அள்ளித் தருவதால் 
தர்மோ தர்மத்தை 
வ்ருஶ: 'வ்ருஶ' என்று குறிக்கின்றனர்
காத் தோயாத் 'கா' என்றால் தண்ணீரைக் குறிக்கும் 
பூமிமபாதிதி அந்த கடல் நீருக்குள் அகப்பட்டுக் கிடந்த பூமியை இடர்ந்து எடுத்து வந்ததால் 
கபிர்வராஹ: வராஹப் பெருமானை 'கபி' என்று அழைக்கின்றனர்.
வ்ருஶரூபத்வாத் இவ்வாறு, (அனைத்து ஆசைகளையும் வாரி வழங்கும்) தர்மத்தின் உருவமாகவும்
கபிரூபத்வாத் பூமியை நீரினின்று இடர்ந்து எடுத்து வந்த வராஹ ரூபமாயும் (இரண்டும் சேர்ந்து இருப்பதால்
வ்ருஶாகபி: பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார். அந்த வராஹப் பெருமானே, தர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார். இவ்வாறு, தர்மத்தின் உருவமாயும், வராஹமாயும் இருப்பதால் பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶ - தர்மம்; - தண்ணீர்; கபி - அந்த தண்ணீரிலிருந்து பூமியை இடர்ந்து எடுத்த வராஹப் பெருமான். வ்ருஶாகபி - தர்மமே உருவாயுள்ள வராஹப் பெருமான்.

கபிர்வராஹ: ஶ்ரேஶ்டஸ்ச தர்மஸ்ச வ்ருஶ உச்யதே |
தஸ்மாத்வ்ருஶாகபி ப்ராஹ காஶ்யபோ மாம் ப்ரஜாபதி: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.89)
'கபி' என்றால் பன்றியை (வராஹத்தை) அல்லது உத்தமமான ஒன்றைக் குறிக்கும் (மிகச்சிறந்த உத்தமமான வராஹம் என்றும் கொள்ளலாம்). தர்மத்தை 'வ்ருஶ' என்ற சொல் குறிக்கும். எனவே, கஶ்யபப் ப்ரஜாபதி என்னை 'வ்ருஶாகபி' என்ற திருநாமத்தால் அழைத்தார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

102. ஓம் அமேயாத்மனே நம:
இயானிதி இப்படிப்பட்டதென்று 
மாதும் பரிச்சேதும் 'மா' என்றால் தீர்மானித்தல் 
ந ஶக்யத இயலாது 
ஆத்மா யஸ்யேதி எவருடைய தன்மையை 
அமேயாத்மா பகவான் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மா என்றால் தீர்மானித்தல், அனுமானித்தல். பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாது. எனவே, பகவான் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமேயாத்மா = - இயலாது + மா - இன்னதென்று அறிந்துகொள்ள + ஆத்மா - பகவானின் தன்மை.

103. ஓம் ஸர்வயோகவிநி:ஸ்ருதாய நம:
ஸர்வஸம்பந்தவினிர்கத: பகவான் எவருடனும் எந்த வித சம்பந்தமும், தொடர்புமின்றி இருப்பதால் 
ஸர்வயோகவிநி:ஸ்ருத: அவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஸங்கோ ஹ்யயம் புருஶ:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த புருஶன் (பகவான்) எதனுடனும் தொடர்பின்றியே இருக்கிறார்.

(நானாஶாஸ்த்ரோக்தாத்யோகாதபகதத்வாத் வா) 
நானாஶாஸ்த்ரஅல்லதுபல்வேறு சாஸ்திரங்களால் 
உக்தாத் விளக்கப்பட்டுள்ள 
யோக யோக சாதனங்களால் 
அதபகதத்வாத் வா அவர் அறியப்படுவதால், பகவான் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்தி, கர்ம, ஞானம் போன்ற) யோக சாதனங்களால் அவர் அறியப்படுவதால், பகவான் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சனி, டிசம்பர் 01, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 98


11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:


வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
   |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


99. ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின் 
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால் 
ஸர்வாதி: பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

100. ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) 
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை 
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை 
இதி அச்யுத: எனவே, பகவான் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார். 
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:

'யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா'
நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் "அச்யுதன்" ஆவேன்.

இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.

இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது

 
இந்த முதல் நூறு திருநாமங்களை காஞ்சி ஆச்சார்யாள் மற்றும் கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.