புதன், மார்ச் 27, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 107

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

114. ஓம் ருத்ராய நம:
ஸம்ஹாரகாலே இந்தப் ப்ரபஞ்சம் அழியும் ப்ரளய காலத்தில் 
ப்ரஜா: அனைத்து ஜீவராசிகளையும் 
ஸம்ஹரன் அவர்களை அழித்து 
ரோதயதீதி (அவ்வாறு அழிக்கும் காலத்தில் அவர்களை) அழவைப்பதால் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதயதி என்றால் அழவைத்தல். ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்) அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார். எனவே, அவர் 'ருத்ரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் வாக்கு அல்லது ஒலி 
ராதி ததாதீதி வா 'ராதி' என்றால் தருபவர் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியை) வழங்குவதால் பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ருதம் - வாக்கு + ராதி - தருபவர் = ருத்ர

ருர்துக்கம் "ரு" என்றால் துக்கம் மற்றும் துன்பத்தைக் குறிக்கும் 
துக்ககாரணம் வா (அனைவரின் துன்பங்களையும் அவற்றை உருவாக்கும் அஞ்ஞானம், மோஹம் போன்ற) காரணங்களையும் த்ராவயதி வா (அவற்றை அழித்துத்) துரத்திவிடுவதால் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (அனைத்துத்) துன்பங்களையும், அஞ்ஞானம், மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரு - துக்கம், துன்பம் + த்ராவயதி - ஓட்டிவிடுபவர் = ருத்ர

ரோதனாத் அழவைப்பதாலும் 
த்ராவணாத்வாபி தூர விரட்டுவதாலும் 
ருத்ர இதயுச்யதே பகவான் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.

அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கரர் எவரை அழவைப்பவர், எதை ஓட்டுபவர் என்று கூறவில்லை. எனவே, இதை மேற்சொன்ன துக்க காரணங்களை அழவைத்தும், ஒட்டியும் விடுகிறார் என்று சேர்த்து பொருள் கொள்ளலாம். ஏனெனில், அடுத்து அவர் அந்த காரணத்தை விளக்கும் சிவபுராண ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

'ருர்துக்கம் துக்கஹேதும் வா தத் த்ராவயதி ய: ப்ரபு: |
ருத்ர இதயுச்யதே தஸ்மாச்சிவ: பரமகாரணம்’ || (ஸம்ஹிதா 6 அத்யாயம் 9.14)
'ரு' என்றால் துன்பங்களும், அதன் மூலகாரணங்களுமாகும். அவற்றை தூர ஓட்டுவதால் அனைத்திற்கும் காரணமான பகவான் சிவன் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶிவபுராணவசனாத் இவ்வாறு ஶிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி அத்வைதத்தில் சிவ-விஶ்ணு பேதங்கள் இல்லை. அனைத்தும் பரப்ரஹ்மமே. ஆதிசங்கரர் இதை முன்பே பூர்வ பாகத்தில் பல மேற்கோள்களைக் காட்டி ஸ்தாபித்துள்ளார். எனவே, சிவனைக் குறிக்கும் அனைத்தும் நாராயணனையேக் குறிக்கும்.

115. ஓம் பஹுஶிரஸே நம:
பஹுனி எண்ணிலடங்கா 
ஶிராம்ஸி தலைகள் 
யஸ்யேதி உடையவராதலால் 
பஹுஶிரா: பகவான் 'பஹுஶிரா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:
(பரப்ரஹ்மமான புருஶருக்கு) பல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்) கூறியுள்ளபடி.

(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடி) எண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் ' பஹுஶிரா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்துமாக இருப்பதால் அனைத்துமே பகவானின் தலைகளாகும். எனவே, அவருக்கு எண்ணிலடங்கா தலைகள் உள்ளன.

ஞாயிறு, மார்ச் 17, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 106

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கங்களையும் மீண்டும் ஒரு முறை பாப்போம்.

104ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர தேஶ்வயமபி வஸதீதி வா வஸு: 
அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்படபகவானுக்குள் வசிக்கின்றனஅனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாகவசிக்கின்றார்இவ்விரண்டு காரணங்களுக்காகவும்பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸூனாம் பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான் தீ.
இத்யுக்தோ வா வஸு: 
இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்குறிப்பிட்டுள்ளபடி அக்னியின் (தீயின்வடிவாய் இருப்பதால் பகவான் 'வஸுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

105ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன தனவாசினா ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே ப்ரஶஸ்தம் மனோ யஸ்ய  வஸுமனா: ராக த்வேஶாதிபி க்லேஶைர் மதாதிபிர் உபக்லேஶைர் யதோ ந கலுஶிதம் சித்தம் ததஸ்தன்மனப்ரஶஸ்தம்
'வஸுஎன்ற சொல் செல்வம் (தனம்என்ற பொருளின் மூலம்சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறதுவிருப்புவெறுப்புக்கள்கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால்,பகவான் 'மிகச்சிறந்த மனமுடையவர்என்ற பொருளில் 'வஸுமனாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


106ஓம் ஸத்யாய நம:
அவிததரூபத்வாத் பரமாத்மா ஸத்ய: 
உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூர்த்த அமூர்த்தாத்மகத் வாத் வா ஸத்ய:
பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும்ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால்'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத் இதி ப்ராணா: தி இதி அன்னம் யம் இதி திவாகரஸ்தேன ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: 
பகவான் 'என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), 'த்என்ற அன்னம் (உணவுமற்றும்'என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லதுஇவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்ஸு ஸாதுத்வா ஸத்ய: 
மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால்அவர் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


107ஓம் ஸமாத்மனே நம: 
ஸம ஆத்மா யஸ்ய ராக த்வேஶாதிபிர் அதூஶித ஸமாத்மா ஸர்வபூதேஶு ஸம ஏக ஆத்மா வா 
பகவானின் மனம் விருப்புவெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றதுஎனவே,அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்றுஒன்றாகவே பார்க்கிறார்எனவேபகவான் 'ஸமாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

108ஓம் ஸம்மிதாய நம: / ஓம் அஸம்மிதாய நம:
ஸர்வைர் அப்யர்தஜாதை: பரிச்சின்ன: ஸம்மித: 
பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டுஅவரை அளவிடமுடியும்அறியமுடியுமாதலால் அவர் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைர் அபரிச்சின்னோSமித இதி அஸம்மித: 
பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும்அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார்எனவேஅவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாதுஅளவிடமுடியாதுஎனவேபகவான் 'அஸம்மித:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.


109ஓம் ஸமாய நம:
ஸர்வகாலேஶு ஸர்வவிகார ரஹிதத்வாத் ஸம: 
பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லைஎனவே,அவர் 'ஸம:' (எப்பொழுதும் மாறாதவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா லக்ஷ்ம்யா ஸஹ வர்தத இதி வா ஸம:
ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான்'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

110ஓம் அமோகாய நம:
பூஜித: ஸ்துத: ஸம்ஸ்ம்ருதோ வா ஸர்வஃபலம் ததாதி வா ந வ்ருதா கரோதீதி அமோக: 
பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுதுதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார்.எனவேபகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவிதத ஸங்கல்பாத் வா அமோக:
பகவானின் எண்ணங்களும்விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன.எனவேபகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

111ஓம் புண்டரீகாஷாய நம:
ஹ்ருதயஸ்தம் புண்டரீகம் அஶ்னுதே வ்யாப்னோதி தத்ரோபலக்ஷித இதி புண்டரீகாக்ஷ: 
பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் 'புண்டரீகாக்ஷன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீகாகாரே உபே அக்ஷிணீ அஸ்யேதி வா புண்டரீகாக்ஷ: 
பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால்அவர் 'புண்டரீகாக்ஷன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

112ஓம் வ்ருகர்மணே நம:
தர்மலக்ஷணம் கர்மாஸ்யேதி வ்ருகர்மா 
பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவைஎனவேஅவர்'வ்ருகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

113ஓம் வ்ருஶாக்ருதயே நம:
தர்மார்த்தம் ஆக்ருதிஶரீரம் யஸ்யேதி  வ்ருஶாக்ருதி:
தர்மத்திற்காகவும்தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவேஅவர் 'வ்ருஶாக்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.