வியாழன், மார்ச் 14, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 105

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


111. ஓம் புண்டரீகாஷாய நம:
ஹ்ருதயஸ்தம் (ஒவ்வொருவருடைய இதயத்தினுள்ளும்
புண்டரீகம் (உள்ள) தாமரையில் 
அஶ்னுதே வ்யாப்னோதி நிறைந்து 
தத்ரோபலக்ஷித (அந்த இதயத் தாமரையில்) காட்சி அளிப்பதால் 
இதி புண்டரீகாக்ஷ: பகவான் 'புண்டரீகாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் 'புண்டரீகாக்ஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புண்டரீக - இதயத்தாமரை + அஶ்னுதே - காட்சி அளிக்கிறார் = புண்டரீகாக்ஷ:

''யத்புண்டரீகம் புரமத்யஸக்ஸ்தம்'
(அந்தப் பரப்ரஹ்மம்) இதயத் தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புண்டரீகாகாரே தாமரை இதழ்களை ஒத்த 
உபே இரண்டு 
அக்ஷிணீ திருக்கண்களை 
அஸ்யேதி வா உடையவராதலால் 
புண்டரீகாக்ஷ: பகவான் 'புண்டரீகாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால், அவர் 'புண்டரீகாக்ஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புண்டரீக - தாமரை (இதழ்கள்) + அக்ஷிணீ - இரண்டு திருக்கண்கள் = புண்டரீகாக்ஷ:

112. ஓம் வ்ருகர்மணே நம:
தர்மலக்ஷணம் தர்மத்தின் உருவமாக (தர்மத்திற்கு விளக்கமாக
கர்மாஸ்யேதி அவருடைய செயல்கள் இருப்பதால் 
வ்ருகர்மா பகவான் 'வ்ருகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவை. எனவே, அவர் 'வ்ருகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ரு - தர்மம் + கர்மா - செயல்கள் = வ்ருகர்மா

113. ஓம் வ்ருஶாக்ருதயே நம:
தர்மார்த்தம் தர்மத்திற்காக (தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டு
ஆக்ருதி: ஶரீரம் உடலை ('ஆக்ருதி' என்றால் உடல் என்று பொருள்
யஸ்யேதி அவர் தரிப்பதால் (எவர் தரிக்கிறாரோ அந்த பகவான்
வ்ருஶாக்ருதி: பகவான்          'வ்ருஷாக்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மத்திற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவே, அவர் 'வ்ருஶாக்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ரு - தர்மம் + ஆக்ருதி - உடல் = வ்ருஶாக்ருதி:

தர்மம் ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)
ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக