ஞாயிறு, மார்ச் 08, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 130

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:


163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |

169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||


இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


165. ஓம் ஸதாயோகினே நம:
ஸதா எப்பொழுதும் 
அவிர்பூத (தன் ஞானத்தால்) ப்ரகாசிக்கும் 
ஸ்வரூபத்வாத் உருவமுடையவர் 
ஸதாயோகி பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

166. ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய தர்மத்தைக் காப்பதற்காக 
வீரான் அஸுரான் அஸுர வீரர்களை 
ஹந்தீதி கொல்கிறார் 
வீரஹா பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ' வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வினாஶாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (ஸ்ரீமத் பகவத்கீதை)

167. ஓம் மாதவாய நம:
மாயா 'மா' என்றால் 
வித்யாயா: அனைத்து வித்தைகளும் (கல்வியும்
பதி: (அனைத்து வித்தைகளின்) தலைவராதலால் 
மாதவ: பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மா' என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 72-வது திருநாமத்தில் 'மாதவ:' என்பதற்கு மஹாலக்ஷ்மியின் கணவர்”, “மது வித்யையின் மூலம் அறியப்படுபவர்”, “மௌனத்தாலும், த்யானத்தாலும், யோகத்தாலும் அறியப்படுபவர் என்று மூன்று விளக்கங்களை அளித்திருந்தார் ஆச்சார்யர்.

மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈஶோ யதோ பவான் |
தஸ்மான்மாதவநாமாஸி தவ: ஸ்வாமீதி ஶப்தித: || (ஹரிவம்ஶம் 3.88.49)

ஹரிவம்த்தில் கூறப்பட்டுள்ளது:
பகவான் ஹரியை அறியும் வித்தைக்கு 'மா' என்று பெயர். தாங்கள் அதன் ஸ்வாமி; "தவ" என்ற சொல் ஸ்வாமியை (தலைவனைக்) குறிக்கும். எனவே, தாங்கள் மாதவ: என்ற திருநாமத்தால் அறியப்படுகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

168. ஓம் மதவே நம:
யதா மது எவ்வாறு தேனானது 
பராம் ப்ரீதிம் (தன் சுவையின் மூலம் அதை சுவைப்பவர்களுக்கு) சிறந்த இன்பத்தை 
உத்பாதயதி தருகிறதோ 
அயமபி ததேதி அவ்வாறே பகவானும் (தன் பக்தர்களுக்கு) இன்பமளிக்கிறார் 
மது: எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.