சனி, அக்டோபர் 05, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 122

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
   

141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


149. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே 
யோனிர்யஸ்ய எவருடைய கர்ப்பப்பையாக (அனைத்தையும் தோற்றுவிக்கும் இடமாக) உள்ளதோ 
விஶ்வஸ்சாஸௌ இந்தப் ப்ரபஞ்சமாயும் 
யோனிஸ்சேதி வா அதன் தோற்றுவாயாகவும் (காரணமாயும்) இருப்பதால் 
விஶ்வயோனி: பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது. அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்" என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.

150. ஓம் புனர்வஸவே நம:
புன: புன: மீண்டும் மீண்டும் 
ஶரீரேஶு உடல்களுக்குள் 
வஸதி வசிக்கிறார் 
க்ஷேத்ரஞ்யரூபேணேதி (இந்த உடலை அறியும்) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் 
புனர்வஸு: எனவே, பகவான் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே, அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே, அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தில் எண்ணிறந்த ஜீவராசிகள் உள்ளன. தினந்தோறும் மென்மேலும் பிறக்கின்றன. பகவான் அந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார்.