ஞாயிறு, டிசம்பர் 17, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 223

76. பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோSநல: |

தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்த்தரோSதாபராஜித: || 

இந்த எழுபத்தாறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

708. பூதாவாஸ:, 709. வாஸுதேவ:, 710. ஸர்வாஸுநிலய:, 711. அனல: |

712. தர்ப்பஹா, 713. தர்ப்பத:, 714. த்ருப்த:, 715. துர்த்தர:, 716. அபராஜித: ||

708. பூதாவாஸாய நம:

பூதான்யத்ராபிமுக்யேன வஸந்தீதி அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) 

பூதாவாஸ: பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸந்தி த்வயி பூதானி பூதவாஸஸ்ததோ பவான் |' (ஹரிவம்ஶம் 3.88.53) 

இதி ஹரிவம்ஶே | 

ஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது: தங்களுக்குள் அனைத்து பூதங்களும் (ஜீவராசிகளும்) வசிக்கின்றன. எனவே தாங்கள் 'பூதவாஸர்' (பூதவாஸ:) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

709. வாஸுதேவாய நம:

ஜகத உலகத்தை (உலகத்திடமிருந்து தன்னை) 

ஆச்சாதயதி மறைக்கிறார் 

மாயயேதி மாயையால் 

வாஸு: எனவே பகவான் 'வாஸு:' என்று அழைக்கப்படுகிறார் 

ஸ ஏவ தேவ இதி அவர் ஒருவரே முழுமுதற்கடவுளாகவும் (தேவ) இருப்பதால் 

வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

பகவான் உலகத்தை (உலகிலுள்ளோரை / உலகத்திடமிருந்து தன்னை) மாயையால் மறைக்கிறார். எனவே அவர் 'வாஸு' என்று அழைக்கப்படுகிறார். அவரே முழுமுதற் கடவுளாகவும் இருப்பதால், 'தேவ' என்ற பதத்துடன் சேர்த்து 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சாதயாமி ஜகத் விஶ்வம் பூத்யா ஸூர்ய இவாம்ஶுபி:' (மஹாபாரதம் ஶாந்திபர்வம் 342.42)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் பகவான் கூறுகிறார்: எவ்வாறு கதிரவன் தனது கிரணங்களாலேயே மறைக்கப்படுகிறதோ, அவ்வாறே நான் அனைத்துலகங்களையும் மறைக்கிறேன்.

'வாஸுதேவ:' என்ற இதே திருநாமத்திற்கு முன்பு 332வது திருநாமத்தில் 'அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார்' என்றும், 695வது திருநாமத்தில் 'வஸுதேவரின் புதல்வர்' என்றும் ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார்.

710. ஸர்வாஸுநிலயாய நம:

ஸர்வம் ஏவாஸவ: அனைத்து 'அஸு' 

ப்ராணா (அஸு என்னும்) ப்ராணன் 

ஜீவாத்மகே ஜீவாத்மா வடிவில் 

யஸ்மின்னாஶ்ரயே நிலீயந்தே எவரிடம் லயமடைந்து உறைவதால்

ஸர்வாஸுநிலய: எனவே, பகவான் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைத்து ப்ராணன்களும் ஜீவாத்மா ஸ்வரூபமான பகவானிடத்தே லயமடைந்து உறைவதால் அவர் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

711. அநலாய நம:

அலம் பர்யாப்தி: 'அலம்' அதாவது முடிவு (எல்லை) 

ஶக்திஸம்பதாம் (பகவானின்) ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு 

நாஸ்ய வித்யத தெரிவதில்லை 

இதி அனல: எனவே பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு எல்லைநிலமே இல்லை. எனவே அவர் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

712. தர்ப்பக்னே நம:

தர்மவிருத்தே அறத்திற்கு புறம்பான 

பதி வழியில் 

திஶ்டதாம் இருப்போரின் (நடப்போரின்) 

தர்ப்பம் செருக்கை (புகழை) 

ஹந்தீதி அழிக்கிறார் 

தர்ப்பஹா எனவே பகவான் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்திற்குப் புறம்பான வழியில் நடப்போரின் செருக்கை (புகழை) அழிக்கிறார். எனவே அவர் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

713. தர்ப்பதாய நம:

தர்மவர்த்மனி அறவழியில் 

வர்த்தமானானாம் வழுவாது நடப்போருக்கு 

தர்ப்பம் கர்வம் அல்லது பெருமையை 

ததாதீதி அளிக்கிறார் 

தர்ப்பத: எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியில் வழுவாது நடப்போருக்கு பெருமையை அளிக்கிறார். எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

714. த்ருப்தாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸ (தனது) ஆத்மானுபவம் என்னும் அமுத ரசத்தை 

ஆஸ்வாதநாத் சுவைத்து (அனுபவித்து)  

நித்ய என்றும் 

ப்ரமுதிதோ இன்பமடைவதால் 

த்ருப்த: பகவான் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் தனது ஆத்மானுபவம் எனும் அமுத ரசத்தை சுவைத்து (அனுபவித்து), அதனாலேயே இன்பமடைகிறார். எனவே அவர் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

715. துர்த்தராய நம:

ந ஶக்யா அறிய இயலாது 

தாரணா மனதை ஒருமுகப்படுத்துவதால் 

யஸ்ய ப்ரணிதானாதிஶு த்யானம் முதலியவற்றால் 

ஸர்வோபாதி விநிர்முக்தத்வாத் அனைத்து உபாதிகளுக்கும் (அதாவது வரைமுறைகள்) அப்பாற்பட்டு இருப்பதால் 

ததாபி ஆயினும் 

தத்ப்ரஸாதத: அவருடைய கருணையால் 

கைஸ்சித் எவரேனும் ஒருவர் 

து:கேன மிகவும் சிரமப்பட்டு 

தார்யதே ஹ்ருதயே தங்கள் மனதில் (இதயத்தில்) 

ஜன்மாந்தரஸஹஸ்ரேஶு  ஆயிரமாயிரம் பிறவிகள் 

பாவனாயோகாத் ஆழ்ந்த த்யானத்தால் 

தஸ்மாத் துர்த்தர: எனவே பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எந்த ஒரு உபாதியாலும் வரையறுக்க முடியாதவர் (அத்தகைய வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்). எனவே அவரை மனதை ஒருமுகப்படுத்தும் த்யானம் முதலியவற்றால் எளிதில் அறிந்து கொள்ள இயலாது (மனதில் எளிதில் அவரை நிலைநிறுத்திவிட முடியாது). ஆயினும், ஆயிரமாயிரம் பிறவிகளில் புரியும் த்யானம் முதலிய முயற்சிகளால், பகவானின் அருளால் எவரேனும் ஒருவர் அவரை மிகுந்த சிரமங்களுக்குப் பிறந்து தங்கள் இதயத்தில் அறிய (தியானிக்க) இயலும். இவ்வாறு மிகுந்த கடினத்துடன் அறிய கூடியவர் ஆதலால் பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்லேஶோSதிகதரஸ்தேஶாம் அவ்யக்தாஸக்தசேதஸாம் |

அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே || (ஸ்ரீமத் பகவத்கீதை 12.5)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஆனால், 'அவ்யக்தத்தில்' மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம். உடம்பெடுத்தோர் 'அவ்யக்த' நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

முன்பு 266வது திருநாமத்தில் 'துர்த்தர:' என்ற திருநாமத்திற்கு, அனைத்தையும் தாங்கும் பூமி முதலியவற்றை எளிதில் தாங்குகிறார் என்று உரை ஆச்சார்யாள் அளித்திருந்தார். அங்கே, இரண்டாவது உரையாக 'மனதில் தாங்குவதற்கு அரியவர்' என்று சூசகமாக கூறிய ஆச்சார்யாள், அதையே இந்த உரையில் விரிவாக உரைத்துள்ளார்.

716. அபராஜிதாய நம:

இல்லை 

ஆந்தரை: உள் எதிரிகளான 

ராகாதிபிர் விருப்பு, வெறுப்பு போன்ற 

பாஹ்யைரபி புற எதிரிகளான 

தானவாதிபி: அஸுரர் போன்ற 

ஶத்ரூபி: எதிரிகளால் 

பராஜித தோற்கடிப்படுவது 

இதி அபராஜித: எனவே, பகவான் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் விருப்பு, வெறுப்பு போன்ற உள் எதிரிகளாலும், அஸுரர்கள் போன்ற புற எதிரிகளாலும் வெல்ல இயலாதவர் (தோற்கடிக்கப் படுவதில்லை). எனவே அவர் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!