சனி, செப்டம்பர் 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 82

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64ஈஶான:, 65. ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

70. ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் இந்தப் ப்ரபஞ்சம் எதிலிருந்து உருவானதோ அந்த பொன்மயமான முட்டைக்குள் இருந்ததால் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: நான்முகக்கடவுளான ப்ரஹ்மா 'ஹிரண்யகர்ப்பர்' என்று அழைக்கப்படுகிறார். ததாத்மா, அந்த நான்முகக்கடவுளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறது. அந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார். எனவே, பொதுவாக அவர் 'ஹிரண்யகர்ப்பர்' என்று அழைக்கப்படுகிறார். பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார். எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்பர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே' (ரிக் வேதம் 10.121.1)
முதன்முதலில் அந்த ஹிரண்யகர்ப்பர் மட்டுமே இருந்தார்

இதி ஶ்ருதே: | இவ்வாறு ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

71. ஒம் பூகர்ப்பாய நம:
பூகர்ப்பே யஸ்ய எவருடைய கர்ப்பத்தில் இந்த பூமியும் மற்றுமுண்டான ஸகல ஸ்ருஷ்டியும் உள்ளதோபூகர்ப்ப: அந்த பகவான் 'பூகர்ப்ப' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியையும், ப்ரபஞ்சத்தையும், மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார். இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்) பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம். எனவே பகவான் 'பூகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 81

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64ஈஶான:, 65. ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

67. ஒம் ஜ்யேஶ்டாய நம:
வ்ருத்ததமோ (வயதில்) மிகவும் பெரியவரை அல்லது மூத்தவரை ஜ்யேஶ்ட: 'ஜ்யேஶ்ட' என்று அழைக்கிறோம்.

'ஜ்ய ச’ (பாணினி சூத்ரம் 5.3.61)
இத்யதிகாரே பாணினி ஸூத்ரத்தில் 'ஜ்ய' என்ற சொல்லை விளக்குகையில்

'வ்ருத்தஸ்ய ச' (பாணினி ஸூத்ரம் 5.3.62)
இதி வ்ருத்த ஶப்தஸ்ய இவ்வாறு 'வயது முதிர்ந்தவர்' என்ற பொருளில் ஜ்யாதேஶவிதானாத் 'ஜ்ய' என்ற சொல்லிற்கு பாணினி விளக்கம் அளிக்கிறார்.

அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர், அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).

68. ஒம் ஶ்ரேஶ்டாய நம:
ப்ரஶஸ்ய தம: மிகவும் புகழ்பெற்று விளங்குவதால் (அல்லது புகழ்பெற்று விளங்குவோர் அனைவரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பதால்) ஶ்ரேஶ்ட: பகவான் 'ஶ்ரேஶ்ட' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரஶஸ்யஸ்ய ஶ்ர:' (பாணினி சூத்ரம் 5.3.60)
இதி ஶ்ராதேவிதானாத் இவ்வாறு 'ஶ்ர' என்ற சொல்லிற்கு மேம்பட்ட புகழை உடையவர் என்று பாணினி விளக்கியுள்ளார்.           

'ப்ராணோ வாவ ஜ்யேஷ்டஸ்ய ஶ்ரேஷ்டஸ்ய' (சாந்தோக்ய உபநிஶத் 5.1.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த ப்ராணனே (முக்கிய ப்ராணனாக இருப்பவரே) அனைவரைக்காட்டிலும் வயது முதிர்ந்தவர். அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முக்யப்ராணோ வா, அந்த முக்கியப் ப்ராணரே ஶ்ரேஶ்டஸ்ய’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2.4.7) அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர் (என்று) இத்யதிகரண ஸித்தத்வாத் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இந்த கூற்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஸர்வகாரணத்வாத்வா ஜ்யேஶ்:, ஸர்வாதிஶயத்வாத்வா ஶ்ரேஶ்:
அனைத்திற்கும் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஶ்டர்'. அனைத்திலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஶ்டர்'.

69. ஒம் ப்ரஜாபதயே நம:
ஈஶ்வரத்வேன பகவான் அனைவருக்கும் அரசானாய் இருந்து ஸர்வாஸாம் அனைத்து ஜீவராசிகளையும் ஆள்வதால் ப்ரஜானாம் பதி: அவர் ப்ரஜைகளுக்குத் தலைவர், 'ப்ரஜாபதி' என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்). பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி). எனவே, பகவான் 'ப்ரஜாபதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, செப்டம்பர் 21, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 80

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

64. ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் நியந்த்ருத்வாத் ஆட்சி செய்வதால் (அடக்கி ஆள்வதால்) ஈஶான: பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

65. ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான் ததாதி ப்ராணனைத் தருவதால் சேஷ்ட்யதீதி நடமாட வைப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கோ ஹ்யேவான்யாத் க: ப்ராணயாத்’ (தைத்ரீய உபநிஶத் 2.7)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஹ்ருதய ஆகாசத்திற்குள் இந்த பரப்ரஹ்மம் இல்லையென்றால்) யார்தான் மூச்சை இழுப்பார். யார்தான் மூச்சை வெளியிடுவார்கள்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி = ப்ராணத:

யத்வா, அல்லது ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) காலாத்மனா காலத்தின் உருவில் த்யதி கண்டயதீதி (த்யதி என்ற சொல்லுக்கு கண்டயதி அதாவது) அழிப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + த்யதி = ப்ராணத:

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) தீபயதி ஷோதயதீதி வா (தீபயதி  என்ற சொல்லுக்கு ஷோதயதி அதாவது) ஒளி கொடுத்துப் பிரகாசிக்கச் செய்வதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + தீபயதி = ப்ராணத:

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) ததாதி லுனாதீதி வா (ததாதி  என்ற சொல்லுக்கு லுனாதி என்ற பொருள் கொண்டு அதாவது) வெட்டுவது அல்லது அழிப்பது ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:

66. ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி மூச்சை ஸ்வாசிப்பவர் ப்ராண: ‘ப்ராண’ என்று அழைக்கபடுவர் க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் பரமாத்மாவே அவர்களை அவ்வாறு வழிநடத்துவதால், பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.18)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(அந்த பரமாத்மா) ப்ராணனுக்கே ப்ராணனாய் இருப்பவர்.

அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முக்யப்ராணோ வா| பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.
காற்று இருந்தும், அதை உள்ளிழுத்து வெளியிடும் புலன் இருந்தும், பகவான் நமது அந்தர்யாமியாக இல்லாவிடில், நம்மால் ஸ்வாசிக்க முடியாது (அதாவது, உயிர் வாழ முடியாது) என்பது இதன் உட்பொருளாகும்.

செவ்வாய், செப்டம்பர் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 79

7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

55ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:

வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

56ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:

அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

57ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
"க்ருஶி" என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள்,  ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனாத் ச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:

பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:

(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

58ஓம் லோஹிதாக்ஷாய நம:
லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ: 
  
சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

59ஓம் ப்ரதர்தனாய நம:
ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன: 

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

60ஓம் ப்ரபூதாய நம:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத: 

பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர்‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

61ஓம் த்ரிககுப்தாம்னே நம:
ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம

ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

62ஓம் பவித்ரே நம:
யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம் 

பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

63ஓம் மங்களாய பரஸ்மை நம:
அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |
ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.

இதி விஶ்ணு புராண வசனாத் கல்யாணரூபத்வாத்வா மங்களம் பரம் ஸர்வபூதேப்ய: உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம மங்களம் பரம் இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்

பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.