வெள்ளி, செப்டம்பர் 20, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 121

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
  


141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |

                146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

147. ஓம் விஜயாய நம:
விஜயதே வெற்றிகொள்கிறார் 
ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) ஞானம், வைராக்யம், செல்வம் போன்ற குணங்களால் 
விஶ்வமிதி இந்த உலகனைத்தையும் 
விஜய: எனவே, அவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான, அபரிமிதமான ஞானம், வைராக்யம், செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார். எனவே, அவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

148. ஓம் ஜேத்ரே நம:
யதோ ஜயத்யதிஶேதே விஞ்சி நிற்கிறார் 
ஸர்வபூதானி அனைத்து ஜீவராசிகளையும் 
ஸ்வபாவதோSதோ தன்னுடைய இயற்கையான தன்மையால் 
ஜேதா அவர் (அந்த பகவான்) 'ஜேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார். எனவே, அவர் 'ஜேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முந்தைய திருநாமத்தில் குணங்களால் மேன்மை. இங்கு, அவரது இயற்கையான தன்மையாலேயே மேன்மை.