ஞாயிறு, டிசம்பர் 06, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 142

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

191. ஓம் ஹம்ஸாய நம:

அஹம் ஸ இதி 'நானே அவர்' (நானே ப்ரஹ்மம்) என்று 

தாதாத்ம்யபாவின: தன்னுடைய ஆத்ம பாவனையில் இருப்பவரின் 

ஸம்ஸாரபயம் ஹந்தீதி பிறவி பயத்தை போக்குவதால் 

ஹம்ஸ: பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (அஹம்ஸ: என்னும் இடத்தில்) ஹம்ஸ: என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ஹந்தி கச்சதி 'ஹந்தி' என்றால் செல்வது என்று பொருள் 

ஸர்வஶரீரேஶ்விதி வா அனைத்து உடல்களுக்குள்ளும் 

ஹம்ஸ: பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஹம் ஸ: ஶுசிஶத்' (கடோபநிஷத் 2.5.2)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஆகாயத்தில் சூரியனாக இருக்கிறது

இதி மந்த்ரவர்ணாத் | இந்த கடோபநிஷத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. 

192. ஓம் ஸுபர்ணாய நம:

ஶோபன அழகிய 

தர்மாதர்ம ரூப தர்மம், அதர்மம் வடிவான 

பர்ணத்வாத் இறக்கைகளை உடையவர் 

ஸுபர்ண: பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 'த்வா ஸுபர்ணா' (முண்டகோபநித் 3.1.1)

முண்டகோபநித்தில் கூறப்பட்டுள்ளது: இரண்டு பறவைகள் (ஆத்மா, பரமாத்மா ஆகிய இந்த இரண்டு பறவைகளும் இந்த உடல் என்னும் மரத்தினுள் இருக்கின்றன).

இதி மந்த்ரவர்ணாத் | இந்த முண்டகோபநிஶத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

ஶோபனம் அழகிய 

பர்ணம் இறக்கைகள் 

யஸ்யேதி வா உடையவர் எவரோ அவர் 

ஸுபர்ண: 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு பொதுவாக அழகிய இறக்கைகளை உடையவர் என்று கூறியிருந்தாலும், ஆதிசங்கரர் தனது ஸ்ரீமத்பகவத்கீதையின் மேற்கோளினால், பகவான் பறவைகளும் கருடனாய் இருப்பதைக் குறிக்கிறார். 

'ஸூபர்ண: பததாமஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பறவைகளில் கருடன்

இதி ஈஶ்வரவசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

வியாழன், டிசம்பர் 03, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 141

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

189. ஓம் மரீசயே நம:

தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள் 

தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால் 

மரீசி: பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார். 

'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

190. ஓம் தமனாய நம:

ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால் 

ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால் 

ப்ரஜா திரியும் மக்களை 

தமயிதும் அழிப்பதை 

ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால் 

வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில் 

தமன: பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.

வியாழன், அக்டோபர் 29, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 140

 20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி: ||

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

181ஓம் மஹேஶ்வாஸாய நம:

மஹான் இஶ்வாஸ இஶுக்ஷேபோ யஸ்ய ஸ மஹேஶ்வாஸ:


பகவான் மழைநீர்ப் போல அம்புகளை வர்ஶிக்கக்கூடிய 'ஸார்ங்கம்' என்னும் மிகச்சிறந்த வில்லை உடையவராதலால் அவர் 'மஹேஶ்வாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

182ஓம் மஹீபர்த்ரே நம:

ஏகார்ணவ ஆப்லுதாம் தேவீம் மஹீம் ச பபாரேதி மஹீபர்த்தா 


ப்ரளய காலத்தில் ஸமுத்ர ஜலத்தினுள் அழுந்தி, வருந்திக்கொண்டிருந்த பூமாதேவியை அதனின்று வெளிக்கொணர்ந்து, தாங்கிய படியால் பகவான் 'மஹீபர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

183ஓம் ஸ்ரீநிவாஸாய நம:

யஸ்ய வக்ஷஸ்ய அநபாயினி ஸ்ரீர்வஸதி ஸ்ரீநிவாஸ:

மஹாலக்ஷ்மித் தாயார் பகவானின் மார்பை விட்டு என்றும் அகலாது வசிக்கின்றபடியால்அவர் 'ஸ்ரீநிவாசன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

184ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் வைதிகானாம் ஸாதூனாம் புருஶார்த்தசாதன ஹேதுஸதாம்கதி:

வேதத்தில் நம்பிக்கைக் கொண்டுஅதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 185ஓம் அநிருத்தாய நம:

ந கேனாபி ப்ராதுர்பாவேஶு நிருத்த இதி அநிருத்த:

பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாதுஎனவேஅவர் 'அநிருத்தன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

186ஓம் ஸுரானந்தாய நம:

ஸுர ஆனந்தயதீதி ஸுரானந்த:

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

187ஓம் கோவிந்தாய நம:

'நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |

கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:' || 

(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)

இதி மோக்ஷதர்மவசனாத் கோவிந்த: 

ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்திதுன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் 'கோவிந்தன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |

கோவிந்த இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)

இதி கோவிந்த: 

எவ்வாறுஇந்திரன் தேவர்களின் தலைவனோஅவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்ஆநிரைகளுக்குத் தலைவராவார்எனவேபகவான் 'கோவிந்தன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |

கோவிந்தஸ்து ததோ தேவ முனிபிகத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம் 3.88.50)

இதி ச ஹரிவம்ஶே கோவிந்த:  

'கௌஎன்ற சொல் வாக்கைக் (வாணிகுறிக்கும்தாங்கள் அதில் வன்மை பொருந்தியவர்எனவேஓ பகவானே!!! இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி முனிவர்கள் தங்களை 'கோவிந்தன்என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

188ஓம் கோவிதாம் பதயே நம:

கௌர்வாணி தாம் விந்ததீதி கோவிததேஶாம் பதிர்விஶேஶேணேதி கோவிதாம்பதி:

வேதமறிந்தோரை 'கோவித:' என்று கூறுவர்அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால்பகவான் 'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, அக்டோபர் 18, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 139

20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்: 

187. ஓம் கோவிந்தாய நம:

'நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |

கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:' || 

(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: நான் முற்காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை மீட்டு வந்தேன். எனவே, தேவர்கள் தங்கள் வாக்கால் என்னை 'கோவிந்தா' என்றழைத்து துதித்தனர்.

இதி மோக்ஷதர்மவசனாத் இந்த (மஹாபாரத) மோக்ஷ தர்மக் கூற்றின்படி 

கோவிந்த: பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு பூமி என்று பொருள்.

 அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |

கோவிந்த இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் தேவர்களின் இந்திரன். தாங்கள் பசுக்களுக்கு  இந்திரனாக உள்ளீர்கள். எனவே, பூமியில் அனைவரும் தங்களை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் தங்களைத் துதிப்பார்கள்.

இதி இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி 

கோவிந்த: பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 எவ்வாறு, இந்திரன் தேவர்களின் தலைவனோ, அவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்) ஆநிரைகளுக்குத் தலைவராவார். எனவே, பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு ஆநிரை என்று பொருள்.

கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |

கோவிந்தஸ்து ததோ தேவ முனிபி: கத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம் 3.88.50)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

'கௌ' என்ற சொல் வாக்கைக் (வாணி) குறிக்கும். தாங்கள் அதில் வன்மை பொருந்தியவர். எனவே, ஓ பகவானே!!! முனிவர்கள் தங்களை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இதி ச ஹரிவம்ஶே இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி 

கோவிந்த: பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் சிறந்த வாக்குவன்மை பொருந்தியவர். எனவே, முனிவர்கள் அவரை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி ஆகிய பொருள்.

188. ஓம் கோவிதாம் பதயே நம:

கௌர்வாணி 'கௌ' என்றால் சொல் (இங்கு வேதம் என்று பொருள்

தாம் விந்ததீதி கோவித: வேதத்தை நன்கு கற்றறிந்தவர்களை 'கோவித:' என்று அழைப்பர் 

தேஶாம் அவர்களின் 

பதிர்விஶேஶேணேதி (வேதமறிந்தோரை வழி நடத்தும்) தலைவரானபடியால் 

கோவிதாம்பதி: பகவான் 'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 வேதமறிந்தோரை 'கோவித:' என்று கூறுவர். அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால், பகவான் 'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி, ஆகிய பொருள். அதிலும், குறிப்பாக (மிகச் சிறந்த வாக்கான) வேதங்கள் என்ற பொருளில் உரை அளித்துள்ளார்.