ஞாயிறு, டிசம்பர் 06, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 142

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

191. ஓம் ஹம்ஸாய நம:

அஹம் ஸ இதி 'நானே அவர்' (நானே ப்ரஹ்மம்) என்று 

தாதாத்ம்யபாவின: தன்னுடைய ஆத்ம பாவனையில் இருப்பவரின் 

ஸம்ஸாரபயம் ஹந்தீதி பிறவி பயத்தை போக்குவதால் 

ஹம்ஸ: பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (அஹம்ஸ: என்னும் இடத்தில்) ஹம்ஸ: என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ஹந்தி கச்சதி 'ஹந்தி' என்றால் செல்வது என்று பொருள் 

ஸர்வஶரீரேஶ்விதி வா அனைத்து உடல்களுக்குள்ளும் 

ஹம்ஸ: பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஹம் ஸ: ஶுசிஶத்' (கடோபநிஷத் 2.5.2)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஆகாயத்தில் சூரியனாக இருக்கிறது

இதி மந்த்ரவர்ணாத் | இந்த கடோபநிஷத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. 

192. ஓம் ஸுபர்ணாய நம:

ஶோபன அழகிய 

தர்மாதர்ம ரூப தர்மம், அதர்மம் வடிவான 

பர்ணத்வாத் இறக்கைகளை உடையவர் 

ஸுபர்ண: பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 'த்வா ஸுபர்ணா' (முண்டகோபநித் 3.1.1)

முண்டகோபநித்தில் கூறப்பட்டுள்ளது: இரண்டு பறவைகள் (ஆத்மா, பரமாத்மா ஆகிய இந்த இரண்டு பறவைகளும் இந்த உடல் என்னும் மரத்தினுள் இருக்கின்றன).

இதி மந்த்ரவர்ணாத் | இந்த முண்டகோபநிஶத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

ஶோபனம் அழகிய 

பர்ணம் இறக்கைகள் 

யஸ்யேதி வா உடையவர் எவரோ அவர் 

ஸுபர்ண: 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு பொதுவாக அழகிய இறக்கைகளை உடையவர் என்று கூறியிருந்தாலும், ஆதிசங்கரர் தனது ஸ்ரீமத்பகவத்கீதையின் மேற்கோளினால், பகவான் பறவைகளும் கருடனாய் இருப்பதைக் குறிக்கிறார். 

'ஸூபர்ண: பததாமஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பறவைகளில் கருடன்

இதி ஈஶ்வரவசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

வியாழன், டிசம்பர் 03, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 141

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

189. ஓம் மரீசயே நம:

தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள் 

தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால் 

மரீசி: பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார். 

'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

190. ஓம் தமனாய நம:

ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால் 

ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால் 

ப்ரஜா திரியும் மக்களை 

தமயிதும் அழிப்பதை 

ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால் 

வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில் 

தமன: பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.