புதன், ஜூன் 19, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 116

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


135. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ (அனைவரும் செய்யும்) அறச்செயல்களையும், அறமல்லாத செயல்களையும் 
ஸாக்ஷாத் ஈக்ஷதே சரிவர நோக்குகிறார் (பார்க்கிறார்
அனுரூபம் அவற்றிற்கு (அந்தந்த செயல்களுக்கு) ஏற்ற 
ஃபலம் பலன்களை 
தாதும் வழங்குவதற்காக 
தஸ்மாத் எனவே 
தர்மாத்யக்ஷ: பகவான் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்னிரண்டு திருநாமங்களில் அத்யக்ஷ என்ற சொல் மேற்பார்வையிடுதல் என்ற பொருளில் வருகிறது. இந்தத் திருநாமத்தில் 'பார்த்தல்' என்ற பொருளில் வருகிறது.
தர்ம: + அதர்ம: = தர்மோதர்ம:

136. ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச பகவான் அனைத்து செயல்களையும் செய்கிறார் 
கார்யரூபேண காரிய ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில் 
அக்ருதஸ்ச பகவான் எந்த செயல்களும் புரிவதில்லை 
காரணரூபேணேதி காரண ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில் 
க்ருதாக்ருத: எனவே அவர் 'க்ருதாக்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தத் திருநாமம் புரிந்துகொள்ள சற்று கடினமானது. இரண்டு நேரெதிர் சொற்களை சேர்த்து ஒரே திருநாமமாக பீஷ்மாச்சார்யார் தந்துள்ளார். ஆதிசங்கர பகவத்பாதரும் இதற்கு, உபநிஶத்துக்கள் பரப்ரஹ்மமான பகவானை எவ்வாறு வர்ணிக்கின்றனவோ, அவ்வாறே விளக்கம் அளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள (மேலும் அத்வைத சாரத்தையும் அறிந்து கொள்ள) உபநிஶத்துக்களையும் அதன் விளக்கங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஞாயிறு, ஜூன் 16, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 115

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

133. ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அனைத்து உலகங்களுக்கும் (அதிலுள்ள ஜீவராசிகளுக்கும்
அத்யக்ஷயதீதி தலைவரான படியால் 
லோகாத்யக்ஷ: பகவான் 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வேஶாம் அனைத்து 
லோகானாம் உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்
ப்ராதான்யேனோபத்ருஶ்டா முதன்மையான ஸ்தானத்திலிருந்து மேற்பார்வையிடுகிறார்.

பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

134. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி இந்த உலகிற்கு (மழை, வெயில் முதலிய) தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பில் உள்ள 
ஸுராணாம் (இந்திரன், வருணன், அக்னி, சூர்யன் முதலான) தேவர்களை 
அத்யக்ஷ: மேற்பார்வையிடுகிறார் 
ஸுராத்யக்ஷ: எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சனி, ஜூன் 15, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 114

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

123ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர கச்சதீதி ஸர்வக: காரணத்வேனவ்யாப்தத்வாத் ஸர்வத்ர
அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும்எதிலும் வ்யாபித்துப் பரவிநிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார்எனவேஅவர் 'ஸர்வக:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

124ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் வேத்தி விந்ததீதி வா ஸர்வவித் பாதீதி பானு: ஸர்வவிச்சாஸௌ பானுஸ்சேதி ஸர்வவித்பானு: 
பகவான் அனைத்தையும் அறிகிறார்நினைத்ததை அடைகிறார்மேலும்அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன்அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவேபகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

125ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் ஸர்வேத்யர்த்தே | விஶ்வ கச்சதி தைத்யஸேனா யஸ்ய ரணோத்யோகமாத்ரேணேதி விஶ்வக்ஸேன: 
'விஶ்வஎன்றால் எங்கும்எல்லாவிடத்திலும் என்று பொருள்பகவான்,போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார்எனவேபகவான் 'விஶ்வக்ஸேனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

126ஓம் ஜனார்தனாய நம:
ஜனான் துர்ஜனான் அர்தயதி ஹினஸ்தி நரகாதீன் கமயதீதி வா ஜனார்தன:
பகவான்துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறுநரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார்எனவேபகவான் 'ஜனார்தனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: அப்யுதய நி:ஶ்ரேயஸ லக்ஷணம் யாச்யதே இதி ஜனார்தன:
மனிதர்கள்தத்தம் கர்மங்களின் பலனாக, அறம்பொருள்இன்பம்வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர்எனவே,பகவான் 'ஜனார்தனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

127ஓம் வேதாய நம:
வேதரூபத்வாத் வேத:
பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் 'வேத:' 

வேதயதீதி வா வேத: 
அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தைவழங்குவதால் பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

128ஓம் வேதவிதே நம:
யதாவத் வேதம் வேதார்த்தம்  வேத்தீதி வேதவித் 
பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும்அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார்எனவேபகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

129ஓம் அவ்யங்காய நம:
அவ்யங்க: ஞானாதிபி: பரிபூர்ணோS()விகல த்யுச்யதே
அவரிடம்ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால்பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யங்கோ வ்யக்திர் ந வித்யத இதி அவ்யங்கோ வா
பகவானுக்கு நமது பார்வையாலோமற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவேபகவான்'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

130ஓம் வேதாங்காய நம:
வேதா அங்கபூதா யஸ்ய ஸ வேதாங்க:
வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் 'வேதாங்க:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

131ஓம் வேதவிதே நம:
வேதான் வின்தே விசாரயதி இதி வேதவித் 
வேதங்களை ஆராய்கிறார்எனவேபகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்)என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

132ஓம் கவயே நம:
க்ராந்ததர்ஶீ கவி: ஸர்வத்ருக்
பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார்எனவேஅவர் 'கவிஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, ஜூன் 07, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 113

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

129. ஓம் அவ்யங்காய நம:
அவ்யங்க: பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஞானாதிபி: (ஏனெனில்) ஞானம் முதலிய குணங்கள்
பரிபூர்ணோS()விகல எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக உள்ளதால் 
த்யுச்யதே பகவான் இவ்வாறு (அவ்யங்க: என்று) அழைக்கப்படுகிறார்.

அவரிடம், ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால், பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யங்கம் என்றால் குறைபாடு; அவ்யங்க: என்றால் குறைபாடுகள் இல்லாதவர். அவிகல = முழுமையாக

வ்யங்கோ வ்யக்திர் உருவம் (அறிதல்
ந வித்யத அவர் அடைவதில்லை 
இதி அவ்யங்கோ வா எனவே, பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு நமது பார்வையாலோ, மற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவே, பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அவ்யக்தோSயம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 2.25)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: தெளிதற்கரியான்
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

130. ஓம் வேதாங்காய நம:
வேதா வேதங்கள் 
அங்கபூதா யஸ்ய அவரது அங்கங்களாக இருப்பதால் 
வேதாங்க: பகவான் 'வேதாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் 'வேதாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

131. ஓம் வேதவிதே நம:
வேதான் வேதங்களை 
வின்தே விசாரயதி ஆராய்கிறார் 
இதி வேதவித் எனவே, பகவான் 'வேதவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை ஆராய்கிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
128வது திருநாமத்தில் வேத - வேதங்களை + வித் - அறிகிறார் = வேதவித். இந்தத் திருநாமத்தில் வேத - வேதங்களை + வின் (விசாரயதி) = வேதவித்.

132. ஓம் கவயே நம:
க்ராந்ததர்ஶீ ஊடுருவிப் பார்க்கிறார் 
கவி: எனவே, பகவான் 'கவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வத்ருக் அனைத்தையும் காண்கிறார்.

பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார். எனவே, அவர் 'கவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ப்ரஹ்மத்தைத் தவிர) இங்கு காண்பவர் வேறு இல்லை.

இத்யாதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'கவிர்மனீஶி' (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ப்ரஹ்மம்) அனைத்தையும் அறிபவன், மனதை ஆள்பவன்.
இத்யாதி மந்த்ரவர்ணாத் | இவ்வாறு மந்திரங்களும் கூறுகின்றன.