ஞாயிறு, நவம்பர் 24, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 124

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
     

151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

151. ஓம் உபேந்த்ராய நம:
இந்த்ரம் இந்திரனுக்கு 
உபகதோSநுஜத்வேனேதி தம்பியாக அவதரித்தார் (இந்திரனுக்குத் தம்பி ஒருவர் கிடைத்தார்
உபேந்த்ர: எனவே, பகவான் 'உபேந்த்ரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்ததால் பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்திரன் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் பிறந்தவன். அவனது ஸ்வர்கலோகம் மஹாபலியால் அபகரிக்கப் பட்டது. அதிதியின் வேண்டுதலின்படி பகவான் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனனாகத் தோன்றினார். எனவே, அவர் இந்திரனின் தம்பியாவார்.
உபகதோSநுஜத்வேனேதி = உபகத: (தோன்றினார்) + அனுஜத்வேனேதி (தம்பியாக)

யத்வா அல்லது 
உபரி உயர்ந்தவர் (மேம்பட்டவர்
இந்த்ர: இந்திரனைக் காட்டிலும் 
உபேந்த்ர: எனவே, பகவான் 'உபேந்த்ரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்திரனைக் காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மமோபரி யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபிரீஶ்வர: |
உபேந்த்ர இதி க்ருஷ்ண த்வாம் காஸ்யந்தி புவி தேவதா: || (ஹரிவம்ம் 2.19.46)
இந்த ஆநிரைகள் (பசுக்கள்) தங்களை எனக்கு மேலே, எனக்கும் தலைவராக ஆக்கியுள்ளன. எனவே, தேவர்கள் இனி தங்களை உபேந்திரன் என்ற திருநாமத்தால் உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.
இதி ஹரிவம்ஶேஇவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

152. ஓம் வாமனாய நம:
பலிம் மஹாபலியிடமிருந்து 
வாமனரூபேண வாமனராக 
யாசிதவான் (மூன்றடி மண்) தானமாக யாசித்ததால் 
இதி வாமன: பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், குள்ள வடிவம் கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து மூன்றடி மண் யாசித்ததால், அவர் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன் வேள்விகள் மூலம் பெற்ற ஆயுதங்களினாலும், தனது தான தர்மத்தின் நற்பலன்களினாலும் அனைவரையும் வென்றான். தேவேந்திரனையும் தோற்கடித்து ஸ்வர்கலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களின் தாயான அதிதியின் வேண்டுதலை ஏற்ற பகவான், அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனர் என்ற பெயருடன், குள்ள வடிவினராகத் தோன்றினார். நரஸிம்ஹ அவதாரத்தில் தான் ப்ரஹ்லாதனுக்கு அவனது வம்சத்தில் எவரையும் இனி கொல்ல மாட்டேன் வாக்களித்திருந்தபடியால், மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து, ஏழுலகங்களையும் அளந்து தனதாக்கினார். ஸ்வர்கத்தை மீண்டும் இந்திரனுக்கு அளித்தார். வந்திருப்பது பகவான் என்று தெரிந்தும், இல்லை என்று சொல்லாமல் தானம் அளித்த மஹாபலியை பாதாள உலகிற்கு அரசனாக நியமித்து, அவனுக்குக் காவலாக தானே இருந்தும் வருகிறார். மேலும், மஹாபலியே அடுத்த மன்வந்தரத்தில் இந்திரனாக நியமிக்கப்படுவான் என்ற வரத்தையும் அளித்தார். இந்த சரித்திரம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் (எட்டாவது ஸ்கந்தம்) விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஸம்பஜனீய நன்றாகப் போற்றத்தகுந்தவர் 
இதி வா வாமன: எனவே, பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மத்யே வாமனமாஸீனம் விஶ்வேதேவா உபாஸதே | (கதோபநித் 2.2.3)
கதோபநித்தில் கூறப்பட்டுள்ளது:
விஶ்வேதேவர்கள் (இந்த்ரியங்கள்) ஹ்ருதயத்தில் இருக்கின்ற வணங்கத்தக்கவரை (பரப்ரஹ்மத்தை, ஆத்மாவை) வழிபடுகின்றன. 
இதி மந்த்ரவர்ணாத் – இந்த உபநிஷத மந்திரத்தின் படி (வாமனர் என்றால் வணங்கத்தக்கவர், போற்றத்தக்கவர் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது).

வியாழன், நவம்பர் 14, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 123

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
    

141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

141ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஏகரஸத்வாத் ப்ராஜிஶ்ணு: 
மாற்றமில்லாதஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

142ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா ப்ரக்ருதிர் மாயா போஜனம்  இத்யுச்யதே
ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளதுஎனவேப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்என்றழைக்கப்படுகிறதுபகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால்அவர் 'போஜனம்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

143ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண தாம் புங்க்தே இதி போக்தா 
இங்குப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானேஎனவேஅவரே 'போக்தாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

144ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஸஹதே அபிபவதீதி ஸஹிஶ்ணு:
ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களைஅஸுரர்களைஅடக்கிவெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

145ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண ஜகதாதாவுத்பத்யதே ஸ்வயமிதி ஜகதாதிஜ: 

பகவான் தானேஇந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

146ஓம் அனகாய நம:
அகம் ந வித்யதேSஸ்யேதி அனக:
பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார்ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார்இவ்வாறுஅனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல்இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லைஎனவேபகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

147ஓம் விஜயாய நம:
விஜயதே ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) விஶ்வமிதி விஜய: 
பகவான் தனது இயற்கையானஅபரிமிதமான ஞானம்வைராக்யம்செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார்எனவேஅவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

148ஓம் ஜேத்ரே நம:
யதோ யத்யதிஶேதே ஸர்வபூதானி ஸ்வபாவதோSதோ ஜேதா 
பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார்எனவேஅவர் 'ஜேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

149ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம் யோனிர்யஸ்ய விஶ்வஸ்சாஸௌ யோனிஸ்சேதி வா 
விஶ்வயோனி:
பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளதுஅதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார்எனவேஅவர் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லதுபகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும்அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார்இங்குப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டுமற்ற உயிர்களைப் படைக்கிறார்என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.

150ஓம் புனர்வஸவே நம:
புனபுனஶரீரேஶு வஸதி க்ஷேத்ரஞ்யரூபேணேதி புனர்வஸு: 
பகவானேஅனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார்எனவேஅவர் மீண்டும்மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார்எனவேஅவர் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.