சனி, மே 30, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 132

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||


இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

163ஓம் வேத்யாய நம:
நி:ஶ்ரேயஸார்த்திபிர் வேதனார்ஹத்வாத் வேத்ய:
மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார்எனவேஅவர் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

164ஓம் வைத்யாய நம:
ஸர்வவித்யானாம் வேதித்ருத்வாத் வைத்ய:
அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்அறிபவராதலால் பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

165ஓம் ஸதாயோகினே நம:
ஸதா அவிர்பூத ஸ்வரூபத்வாத் ஸதாயோகி 
எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகிஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

166ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய வீரான் அஸுரான் ஹந்தீதி
தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் வீரஹாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

167ஓம் மாதவாய நம:
மாயா வித்யாயாபதிமாதவ:
'மாஎன்ற அனைத்து வித்தைகளின் (கல்விகேள்விகளின்தலைவராதலால் பகவான் 'மாதவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

168ஓம் மதவே நம:
யதா மது பராம் ப்ரீதிம் உத்பாதயதி அயமபி ததேதி மது: 
பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர்இன்பமளிப்பவர்எனவேஅவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

169ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் இந்த்ரியானாம் அவிஶய இதி அதீந்த்ரிய: 
பகவான்ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்எட்டாதவர்எனவேஅவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

170ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாகாரித்வாத் மஹாமாய:
பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவிசாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோமீறவோ இயலாதுஎனவேபகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

171ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் உத்பத்தி ஸ்திதி லயார்த்தம் உத்யுக்தத்வாத் மஹோத்ஸாஹ:
இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்காத்தல்அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார்எனவேஅவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

172ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலவத்வாத் மஹாபல:
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.