சனி, ஜூலை 11, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 133


19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |
அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

173. ஓம் மஹாபுத்தயே நம:
புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும் 
புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் 
மஹாபுத்தி: பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

174. ஓம் மஹாவீர்யாய நம:
மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு
உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான 
அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம் 
வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான 'வீர்யம்' ஆதலால் 
மஹாவீர்ய: பகவான் 'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் 'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

175. ஓம் மஹாஶக்தயே நம:
மஹதி சிறந்த 
ஶக்தி: ஸாமர்த்யம் 'ஶக்தி' அல்லது திறமை உடையவர் 
அஸ்யேதி எனவே 
மஹாஶக்தி: பகவான் 'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் 'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், 'ஶக்தி' என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.