ஞாயிறு, ஜூலை 17, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 211

64. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

596. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ: |

601. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

596. அநிவர்த்தினே நம:

தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் 

ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால் 

அநிவர்த்தீ பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை  ஆதலால், அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால் 

தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை) 

அநிவர்த்தீ எனவே, பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

597. நிவ்ருத்தாத்மனே நம:

ஸ்வபாவதோ இயற்கையாகவே 

விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) 

நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும் 

ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால் 

நிவ்ருத்தாத்மா பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

598. ஸங்க்ஷேப்த்ரே நம:

விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள 

ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 

ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில் 

ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய் 

ஸங்க்ஷிபன் சுருக்குவதால் 

ஸங்க்ஷேப்தா பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

599. க்ஷேமக்ருதே நம:

உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை 

பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால் 

க்ஷேமக்ருத் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

600. ஶிவாய நம:

ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை 

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே 

பாவயன் புனிதப்படுத்துவதால் 

ஶிவ: பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

601. ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:

ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் 

சிஹ்னமஸ்ய சின்னம் (குறி) 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்திதமிதி இருப்பதால் 

ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

602. ஸ்ரீவாஸாய நம:

அஸ்ய அவரது 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள் 

வஸதீதி வசிப்பதால் 

ஸ்ரீவாஸ: பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

603. ஸ்ரீபதயே நம:

அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது 

ஸர்வான் அனைத்து 

ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை 

விஹாய விடுத்து 

ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக) 

வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ: பராஶக்தி: 'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் 

தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே' (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)

ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.

604. ஸ்ரீமதாம்வராய நம:

ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள் 

ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும் 

தேஶாம் அவர்களை (விட

ஸர்வேஶாம் அனைவரின் 

ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய 

விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான 

ப்ரதானபூத: மேலானது 

ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ரிச: ஸாமானி யஜூஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, ஜூலை 10, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 210

63. ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய: |

கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||

இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

586. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |

591. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய: ||   

586. ஶுபாங்காய நம:

ஸுந்தராம் அழகியதான 

தனும் உடலை 

தாராயன் தரித்திருப்பவராதலால் 

ஶுபாங்க: பகவான் 'ஶுபாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகவும் அழகிய உடலைத் தாங்கியவர் (உடையவர்) ஆதலால் பகவான் 'ஶுபாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

587. ஶாந்திதாய நம:

ராக விருப்பு 

த்வேஶாதி வெறுப்புகள் 

நிர்மோக்ஷலக்ஷணம் விலகிய தன்மைக்கு அடையாளமான 

ஶாந்திம் (மன)அமைதியை (பொறுமையை) 

ததாதீதி அளிப்பவர் ஆதலால் 

ஶாந்தித: பகவான் 'ஶாந்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விருப்பு, வெறுப்புக்கள் அற்ற தன்மையின் அடையாளமான மன அமைதியையும், பொறுமையையும் அளிப்பவர் ஆதலால் பகவான் 'ஶாந்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

588. ஸ்ரஶ்ட்ரே நம:

ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில் 

ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) 

ஸஸர்ஜேதி படைப்பதால் 

ஸ்ரஶ்டா பகவான் 'ஸ்ரஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைப்பின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) படைப்பதால் பகவான் 'ஸ்ரஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

589. குமுதாய நம:

கௌ பூம்யாம் 'கு' என்றால் பூமியில் (பூமாதேவியிடம்) 

மோதத இதி வா மகிழ்கிறார் 

குமுத: பகவான் 'குமுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'கு' என்று அழைக்கப்படும் பூமியிடம் (பூமாதேவியிடம்) மகிழ்கிறார். எனவே பகவான் 'குமுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

590. குவலேஶாய நம:

கோ: க்ஷிதேர் 'கு' என்று அழைக்கப்படும் பூமியை 

வலனாத் ஸம்ஸரணாத் 'வல' அதாவது சூழ்ந்திருப்பதால் 

குவலம் ஜலம் நீரிற்கு 'குவலம்' என்று பெயர் 

தஸ்மின் அதில் (நீரில்) 

ஶேத இதி சயனித்து இருப்பதால் 

குவலேஶய: பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கு' என்று அழைக்கப்படும் பூமியை அதாவது சூழ்ந்திருப்பதால் நீரிற்கு 'குவலம்' என்று பெயர். அதில் (நீரில்) சயனித்து இருப்பதால் பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶயவாஸவாஸிஶ்வகாலாத்' (பாணினி ஸூத்ரம் 6.3.18)

இதி அலுக் ஸப்தம்யா: |

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இந்த சொல் உருவாயுள்ளது. 

குவலஸ்ய பதரி ஃபலஸ்ய 'குவல' என்றால் இலந்தைப் பழம் 

மத்யே அதன் நடுவில் 

ஶேதே சயனித்து இருக்கிறான் 

தக்ஷக: 'தக்ஷகன்' 

ஸோபி தஸ்ய அந்த தக்ஷகனும் 

விபூதிரிதி வா ஹரி: பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். 

குவலேஶய: எனவே, பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'குவல' என்றழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் நடுவில் தக்ஷகன் சயனித்து இருக்கிறான். தக்ஷகனும் பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். எனவே பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உரையின் படி தக்ஷகனுக்கு 'குவலேஶய:' என்று பெயர். அவன் பகவானின் ஒரு வெளிப்பாடு ஆதலால் பகவானுக்கே அந்த திருநாமம் பொருந்தும். 

கௌ பூம்யாம் 'கு' என்றால் பூமி 

வலதே ஸம்ஸ்ரயதே இதி அந்த பூமியில் (ஊர்ந்து) செல்வதால் 

ஸர்ப்பாணாம் பாம்புகளின் 

உதரம் குவலம் வயிற்றுப் பகுதி குவலம் என்று அழைக்கப்படுகிறது, 

தஸ்மிந் ஶேஶோதரே ஆதிசேடனது மடியில் (வயிற்றில்) 

ஶேத இதி சயனித்து இருப்பதால் 

குவலேஶய: பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கு' என்றழைக்கப்படும் பூமியில் ஊர்ந்து செல்வதால் பாம்புகளின் வயிற்றுப்பகுதியை 'குவலம்' என்று  அழைப்பார்கள். அத்தகைய பாம்பான ஆதிசேடனின் வயிற்றில் (குவலயத்தில்) சயனித்து இருப்பதால் பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

591. கோஹிதாய நம:

கவாம் ஆவினங்களை 

வ்ருத்யர்த்தம் வளர்ப்பதற்காக (அவற்றை காப்பதற்காக) 

கோவர்தனம் கோவர்தன மலையை 

த்ருதவானிதி (கையில்) ஏந்தினார் 

கோப்யோ ஹிதோ அந்த ஆநிரைகளின் நலத்தை பேணி 

கோஹித: எனவே  பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (இந்திரன் வ்ருந்தாவனத்தின் மீது கல்மாரி பொழிந்த பொது) ஆநிரைகளின் நலத்தை பேணி, அவற்றைக் காக்க கோவர்தன மலையை கையில் ஏந்தினார். எனவே அவர் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

கோர்பூமே: 'கோ' என்றழைக்கப்படும் பூமியின் 

பாராவதரணேச்சயா (பார அவதரண இச்சயா) பாரத்தைக் குறைக்கும் பொருட்டு தனது இச்சையால் 

ஶரீரக்ரஹணம் குர்வன்வா உடலை ஏற்றுக் கொள்வதால் 

கோஹித: பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கோ' என்றழைக்கப்படும் இந்த பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு (ஒவ்வொரு அவதாரத்தின் பொழுதும்) தனது இச்சையால் ஒரு உடலை ஏற்றுக் கொள்வதால் பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

592. கோபதயே நம:

கோர்பூம்யா: 'கோ' என்றழைக்கப்படும் பூமிக்கு 

பதி: கணவரானபடியால் 

கோபதி: பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கோ' என்றழைக்கப்படும் பூமிக்கு கணவரானபடியால் பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பதி என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் பொருள். அவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது பூமிக்குத் தலைவன் அல்லது பூமியின் அரசன் என்றும் இந்த உரையை கொள்ளலாம்.

593. கோப்த்ரே நம:

ரக்ஷகோ காப்பாற்றுகிறார் 

ஜகத இதி பூமியை (பூமியில் உள்ளோரை) 

கோப்தா எனவே பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியை (அதில் உள்ளோரைக்) காப்பதால் பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்வமாயயா தனது மாயையால் 

ஸ்வமாத்மானம் தனது ஆத்மாவை, அதாவது தனது உண்மையான தன்மையை 

ஸம்வ்ருணோதீதி வா மறைத்துக் கொள்கிறார் 

கோப்தா எனவே பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது மாயையால் தன் இயற்கையான தன்மையை (ஆத்மாவை) அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்வதால் பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

594. வ்ருஶபாக்ஷாய நம:

ஸகலான் காமான் அனைத்து ஆசைகளையும் 

வர்ஶுகே பொழியும் 

அக்ஷிணீ அஸ்யேதி திருக்கண்களை உடையவராதலால் 

வ்ருஶபாக்ஷ: பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் அனைத்து ஆசைகளையும் (விருப்பங்களையும்) மழையைப்போல பொழியும் திருக்கண்களை உடையவராதலால் பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வ்ருஶபோ தர்ம: 'வ்ருஶ' என்றால் தர்மம் (அறம்) 

ஸ ஏவ வா த்ருஶ்டிர் அஸ்யேதி தனது பார்வையாக கொண்டிருப்பதால் 

வ்ருஶபாக்ஷ: பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வ்ருஶ' என்று அழைக்கப்படும் அறத்தை தனது பார்வையாக கொண்டிருப்பதால் பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறமே கண்ணாக - அறத்தின் வழியிலேயே நடக்கிறார் என்று பொருள்.

595. வ்ருஶப்ரியாய நம:

வ்ருஶோ தர்ம: 'வ்ருஶ' என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) 

ப்ரியோ யஸ்ய  எவருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ 

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வ்ருஶ' என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) விரும்புபவராதலால் பகவான் 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வா ப்ரியஸ்ய' (வார்த்திகம்) இதி பூர்வநிபாதவிகல்பவிதானாத் பரநிபாத:

இங்கு ஆசார்யாள் இந்த சொல்லிற்கு உரித்தான இலக்கணக் குறிப்பை அளிக்கிறார். 

வ்ருஶஸ்சாஸௌ 'வ்ருஶ' அதாவது அறமே வடிவானவராகவும் 

ப்ரியஸ்சேதி வா ப்ரியமானவராகவும் (அனைவராலும் விரும்பப்படுபவராகவும்) இருப்பதால் 

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறமே வடிவானவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும் இருப்பதால் பகவான் 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, ஜூலை 03, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 209

62. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக் |

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

574. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக் |

580. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||    

574. ஓம் த்ரிஸாம்னே நம:

தேவவ்ரத தேவவ்ரதம் என்னும் 

ஸமாக்யாதைஸ் பெயருடைய 

த்ரிபி: மூன்று 

ஸாமபி ஸாமங்களால் 

ஸாமகை: ஸாமகானம் செய்பவர்களால் 

ஸ்துத இதி போற்றித் துதிக்கப்படுவதால் 

த்ரிஸாமா பகவான் 'த்ரிஸாமா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.   

தேவவ்ரதம் என்னும் பெயருடைய மூன்று ஸாமங்களால் ஸாமகானம் செய்பவர்களால் போற்றித் துதிக்கப்படுவதால் பகவான் 'த்ரிஸாமா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

575. ஓம் ஸாமகாய நம:

ஸாம ஸாமவேதத்தை 

காயதீதி பாடுவதால் 

ஸாமக: பகவான் 'ஸாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாமவேதத்தை பாடுவதால் பகவான் 'ஸாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

576. ஓம் ஸாம்னே நம:

'வேதானாம் ஸாமவேதோஸ்மி' (ஸ்ரீமத்பகவத் கீதை 10.22)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதங்களில் யான் ஸாமவேதம்.

இதி பகவத்வசனாத் பகவானின் இந்த பகவத்கீதையின் கூற்றின்படி 

ஸாமவேத: ஸாம ஸாமவேத வடிவாய் இருப்பதால் பகவான் 'ஸாம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் 'வேதங்களில் யான் ஸாமவேதம்'  என்று கூறியுள்ளார். எனவே ஸாமவேத வடிவினாரான பகவான் 'ஸாம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

577. ஓம் நிர்வாணாய நம:

ஸர்வது:க அனைத்துவித துன்பங்களும் 

உபஶம லக்ஷணம் அற்று இருப்பதன் அடையாளமாக 

பரமானந்தரூபம் உயரிய ஆனந்தமே வடிவினராய் இருப்பதால் 

நிர்வாணம் பகவான் 'நிர்வாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித துன்பங்களும் (துக்கங்களும்) அற்று இருப்பதன் அடையாளமாக உயரிய ஆனந்தமே வடிவானவராதலால் பகவான் 'நிர்வாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

578. ஓம் பேஶஜாய நம:

ஸம்ஸார இந்தப் பிறவியென்னும் 

ரோகஸ்ய பிணிக்கு (நோய்க்கு) 

ஒளஶதம் அருமருந்தாய் இருப்பதால் 

பேஶஜம் பகவான் 'பேஶஜம்' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பிணிக்கு (நோய்க்கு) அருமருந்தாய் இருப்பதால் பகவான் 'பேஶஜம்' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

579. ஓம் பிஶஜே நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பிணியை 

நிர்மோக்ஷகாரிணீம் போக்கவல்ல அருமருந்தாகிற 

பராம் வித்யாம் மேலான வித்தையை (அறிவை) 

உபதிதேஶ அனைவருக்கும் உபதேசித்தார் 

கீதாஸ்விதி 'ஸ்ரீமத் பகவத்கீதை' என்னும் 

பிஶக் எனவே பகவான் 'பிஶக்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியை போக்கவல்ல அருமந்தாகிற 'ஸ்ரீமத் பகவத்கீதை' என்னும் உயரிய வித்தையை (அறிவை) அனைவருக்கும் போத்தித்தபடியால் (உபதேசித்த படியால்) பகவான் 'பிஶக்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பிஶக்தம் த்வா பிஶஜா ஶ்ருணோமி'

அனைவரைக் காட்டிலும் சிறந்த மருத்துவரைப் பற்றி கேட்பாயாக

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

580. ஓம் ஸந்யாஸக்ருதே நம:

மோக்ஷார்த்தம் முக்தியை அடையும் பொருட்டு (அதை விழைவோருக்கு) 

சதுர்த்தம் ஆஶ்ரமம் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸ ஆஸ்ரமத்தை (அதாவது வாழும் வழிமுறையை) 

க்ருதவானிதி உருவாக்கியவராதலால் 

ஸந்யாஸக்ருத் பகவான் 'ஸந்யாஸக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு, அதை அடையும் வழிமுறையாக நான்காவது ஆஸ்ரமமான 'ஸந்யாஸ ஆஸ்ரமத்தை' உருவாக்கியவராதலால் பகவான் 'ஸந்யாஸக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

581. ஓம் ஶமாய நம:

ஸந்யாஸினாம் துறவறம் பூண்டவர்களுக்கு (ஸன்யாஸிகளுக்கு) 

ப்ராதான்யேன முதன்மையான (முக்கியமான) 

ஞானஸாதனம் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக 

ஶமம் (மன) அமைதியை 

ஆசஶ்ட உபதேசித்ததால் 

இதி ஶம: பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைவோருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமத்தை (துறவறத்தை) ஏற்படுத்தினார் (ஸந்யாஸக்ருத்). அவ்வாறு துறவறம் பூண்டோரின் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக மன அமைதியை (ஶம) உபதேசித்ததால் அவர் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“யதீநாம் ப்ரஶமோ தர்மோ நியமோ வனவாஸினாம் |

தானமேவ க்ருஹஸ்தானாம் ஶுஶ்ரூபா ப்ரஹ்மசாரிணாம் ||”

துறவிகளுக்கு மன அமைதியும், வனவாசிகளுக்கு கட்டுப்பாடும் (நியமம்), இல்லறத்தோருக்கு தானமும் மற்றும் ப்ரஹ்மச்சாரிகளுக்கு (குரு) சேவையும் தர்மமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் (வேதங்களில்) கூறப்பட்டுள்ளது.

'தத்கரோதி ததாசஶ்டே' (சுராதிகணவார்த்திகம்)

இதி ணிசி பசாத்யசி க்ருதே ரூபம் ஶம இதி |

இந்த இலக்கண விதியின் படி "ஶம"என்ற சொல் உருவாகிறது.

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும் 

ஶமயிதேதி வா அழிப்பதால் 

ஶம: பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களையும் (ப்ரளய காலத்திலும், அந்தந்த ஜீவனின் கால முடிவிலும்) அழிப்பதாலும் பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

582. ஓம் ஶாந்தாய நம:

விஶயஸுகேஶ்வ(அ)ஸங்கதயா விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) சேராது இருப்பதால் 

ஶாந்த: பகவான் 'ஶாந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) நாட்டமில்லாமல் அவற்றோடு சேராது  இருப்பதால் பகவான் 'ஶாந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

583. ஓம் நிஶ்டாய நம:

ப்ரளயே ப்ரளய காலத்தில் 

நிதராம் முழுமையாக 

தத்ரைவ அவரிடமே 

திஶ்டந்தி உறைவதால் 

பூதாநிதி உயிரினங்கள் (ஜீவராசிகள்) 

நிஶ்டா பகவான் 'நிஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) முழுமையாக பகவானிடம் (லாயமடைந்து) உறைவதால் பகவான் 'நிஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

584. ஓம் ஶாந்தயே நம:

ஸமஸ்தாவித்யா (ஸமஸ்த அவித்யா) அனைத்து வகை அறியாமைகளும் 

நிவ்ருத்தி: விலகி இருப்பதே 

ஶாந்தி: 'ஶாந்தி:' என்று அழைக்கப்படுகிறது. 

ஸா ப்ரஹ்மைவ (அந்த அறியாமைகளற்ற நிலையானது) பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையாகும். எனவே, பரப்ரஹ்மமான பகவான் 'ஶாந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகை அறியாமைகளும் அற்ற தன்மையே 'ஶாந்தி:' என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு, அறியாமை அற்ற நிலையானது பரப்ரஹ்மமான பகவானின் இயற்கையான தன்மையாகும். எனவே அவர் 'ஶாந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

585. ஓம் பராயணாய நம:

பரமுத்க்ருஶ்டமயனம் ஸ்தானம் (பரம் உத்க்ருஶ்டம் அயனம்) அயனம் என்றால் அடையப்படும் இடம் (ஸ்தானம்) என்று பொருள். மிக உயரிய அடையப்படக்கூடிய இடமாக 

புனராவ்ருத்தி மீண்டு வருதல் 

ஶங்காரஹிதம் இதி என்ற ஐயமின்றி இருப்பதால் 

பராயணம் பகவான் 'பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மீண்டு வருதல் என்ற ஐயத்திற்கு இடமின்றி, மிக உயரிய ஸ்தானமாக (அடையக்கூடிய இடமாக) இருப்பதால் பகவான் 'பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புல்லிங்கபக்ஷே பஹுவ்ரீஹி: இந்தத் திருநாமத்தை ஆண்பாலாகக் கருத்துமிடத்தில் எவர் உயரிய ஸ்தானமாக இருப்பவரோ என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!