சனி, பிப்ரவரி 20, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 150

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).

198ஓம் அம்ருத்யவே நம:

ம்ருத்யுர் வினாஶஸ் தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்யந வித்யதே இதி அம்ருத்யு: 

மரணம் மட்டுமல்லஅதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லைஎனவேஅவர் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

199ஓம் ஸர்வத்ருஶே நம:

ப்ராணினாம் க்ருதாக்ருதம் ஸர்வம் பஶ்யதி ஸ்வாபாவிகேன போதேனேதி ஸர்வத்ருக் 

பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவைசெய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார்எனவேஅவர் 'ஸர்வத்ருக்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

200ஓம் ஸிம்ஹாய நம:

ஹின்ஸதீதி ஸிம்ஹ:

பகவான்அனைத்தையும் தக்க காலத்தில்குறிப்பாக பாவிகளையும்அதர்மிகளையும் அழிக்கிறார்எனவேஅவர் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

201ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலைபுருஶான் ஸந்தத்த இதி ஸந்தாதா 

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவேஅவர் 'ஸந்தாதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

202ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா ச ஸ ஏவேதி ஸந்திமான் 

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லைபற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரேஎனவேபகவான் 'ஸந்திமான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

203ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்ஸ்திர:

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

204ஓம் அஜாய நம:

அஜதி கச்சதி க்ஷிபதி இதி வா அஜ: 

பகவான் நல்லோரிடம் செல்கிறார்தீயோரை அழிக்கிறார்எனவேஅவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

205ஓம் துர்மர்ஶணாய நம:

மர்ஶிதும் ஸோடும் தானவாதிபிர் ந ஶக்யதே இதி துர்மர்ஶண: 

துர்மர்ஶண: என்றால் ஸஹிக்கமுடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக்கொள்ள இயலாது. எனவே, அவர் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

206ஓம் ஶாஸ்த்ரே நம:

ஶ்ருதிஸ்ம்ருத்யாதிபிஸர்வேஶாமனுஶிஶ்டிம் கரோதீதி ஶாஸ்தா   

ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலியஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளையிட்டுவழிநடத்தி ஆள்வதால் பகவான் 'ஶாஸ்தாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

207ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண ஶ்ருதோ யேன ஸத்யஞானாதிலக்ஷண: ஆத்மாதோ விஶ்ருதாத்மா

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

208ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர அரிணாம்ஹந்த்ருத்வாத் ஸுராரிஹா 

பகவான்ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் 'ஸுராரிஹாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வியாழன், பிப்ரவரி 18, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 149

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

207. ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண சிறப்பாக 

ஶ்ருதோ அறிகிறார் 

யேன ஸத்யஞானாதிலக்ஷண: தன்னுடைய ஸத்யம் (மெய்), அறிவு முதலிய குணங்களால் 

ஆத்மாதோ ஆத்மாவின் தன்மையை 

விஶ்ருதாத்மா எனவே, பகவான் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

208. ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) தேவர்களின் எதிரிகளை (அஸுரர்களை

நிஹந்த்ருத்வாத் அழிக்கிறார் 

ஸுராரிஹா எனவே, பகவான் 'ஸுராரிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் 'ஸுராரிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

புதன், பிப்ரவரி 17, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 148

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

205. ஓம் துர்மர்ஶணாய நம:

மர்ஶிதும் ஸோடும் 'மர்ஶண' என்றால் ஸஹித்துக்கொள்ளுதல் என்று பொருள் 

தானவாதிபிர் ந ஶக்யதே அஸுரர்களால் (பகவானை ஸஹித்துக்கொள்ள) இயலாது 

இதி எனவே 

துர்மர்ஶண: பகவான் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துர்மர்ஶண: என்றால் ஸஹிக்கமுடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக்கொள்ள இயலாது. எனவே, அவர் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

206. ஓம் ஶாஸ்த்ரே நம:

ஶ்ருதிஸ்ம்ருத்யாதிபி: ஶ்ருதிகளைக் (வேதங்களைக்) கொண்டும், (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளைக் கொண்டும் 

ஸர்வேஶாமனுஶிஶ்டிம் கரோதீதி அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால் 

ஶாஸ்தா பகவான் 'ஶாஸ்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால் பகவான் 'ஶாஸ்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திங்கள், பிப்ரவரி 15, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 147

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.

201. ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலை: அவரவரது வினைப்பயன்களை 

புருஶான் அவரவரோடு 

ஸந்தத்த இணைக்கிறார் (கூட்டுவிக்கிறார்

இதி எனவே 

ஸந்தாதா பகவான் 'ஸந்தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் 'ஸந்தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எத்தனை பிறவி எடுத்தாலும் தத்தம் வினைப்பயனை அவரவர்களே தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது வினைப்பயனை மற்றவர் அனுபவித்தல் இயலாது.

 202. ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா அந்தந்த பலனை அனுபவிப்பவரும் 

ச ஸ ஏவேதி அவரேயாதலால் 

ஸந்திமான் பகவான் 'ஸந்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் 'ஸந்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

203. ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) எப்பொழுதும் மாறாத உருவத்துடன் இருப்பவராதலால் 

ஸ்திர: பகவான் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

204. ஓம் அஜாய நம:

அஜதி 'அஜ' என்றால் 

கச்சதி செல்வது மற்றும் 

க்ஷிபதி அழித்தல் என்று பொருள் 

இதி வா பகவான் இவ்விரண்டும் செய்வதால் (நல்லோரிடம் செல்கிறார், தீயோரை அழிக்கிறார்

அஜ: அவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.