செவ்வாய், நவம்பர் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 97

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
  |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

97. ஓம் ஸித்தாய நம:
நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்
நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால் 
ஸித்த: பகவான் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.

98. ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)
ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும் 
நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்
ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால் 
ஸித்தி: பகவான் ' ஸித்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள் 
வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை 
அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).

பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்தி:' (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.

சனி, நவம்பர் 24, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 96

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத:  ||

இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
 |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

95. ஓம் அஜாய நம:
ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ 
இதி அஜ: அந்த பகவான் 'அஜ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ந ஜாதோ ந ஜனிஶ்யதே'
(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |
க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: || 
(ஶாந்தி பர்வம் 342.74)
நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை 'அஜ:' (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.

96. ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் அனைத்து 
ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)
ஈஶ்வர: ஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்
ஸர்வேஶ்வர: பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

'ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)
இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஞாயிறு, நவம்பர் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 95

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
     |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):

85ஓம் ஸுரேஶாய நம:
ஸுரானாம் தேவானாம் ஈஶ: ஸுரேஶ: 
ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸூபபதோ வா ராதாதுஷோபனதாத்ருணாம்  ஈஶ: ஸுரேஶ: 
அல்லதுநன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

86ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹரணத்வாத் ஶரணம் 
துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

87ஓம் ஶர்மணே நம:
பரமானந்தரூபத்வாத் ஶர்ம:
பகவான் ஆனந்தமே வடிவானவர்தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர்எனவேஅவர் 'ஶர்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

88ஓம் விஶ்வரேதஸே நம:
விஶ்வஸ்ய காரணத்வாத் விஶ்வரேதா: 
இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான்'விஶ்வரேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

89ஓம் ப்ரஜாபவாய நம:
ஸர்வாப்ரஜா யத்ஸகாஶாதுத்பவந்தி ஸ ப்ரஜாபவ: 
அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான்'ப்ரஜாபவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

90ஓம் அஹ்னே நம:
ப்ரகாஶரூபத்வாத் அஹ:
மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'அஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

91ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா ஸ்திதோ விஶ்ணுஸம்வத்ஸர: இத்யுக்த
பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் 'ஸம்வத்ஸரஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

92ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத் க்ரஹீதும் அஶக்யத்வாத் வ்யால: 
ஒரு பாம்பு வளைந்துநெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லைஎனவே,பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

93ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி இதி: ப்ரக்ஞ்யா ப்ரத்யய:
அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

94ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி தர்ஶனாத்மகானி அக்ஷிணி யஸ்ய ஸ ஸர்வதர்ஶனஸர்வாத்மகத்வாத்
பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார்எனவே,அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார்.இவ்வாறுஅனைத்தும்அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான்'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வியாழன், நவம்பர் 15, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 94

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
    |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் மீதம் உள்ள 2 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

93. ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி இதி: 'ப்ரதி' என்றால் 
ப்ரக்ஞ்யா அறிவு மயமானவர் என்று பொருள் 
ப்ரத்யய: அந்த அறிவு மயமான பரம்பொருள் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம' (ஐத்ரேய உபநிஶத் 3.5.3)
ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அறிவே ப்ரஹ்மமாகும் (பரம்பொருளாகும்).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

94. ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி அனைவரும் 
தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால் 
யஸ்ய ஸ பகவான் 
ஸர்வதர்ஶன: 'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவானபடியால்.

பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் 'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஸ்வதஸ்சக்ஷு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

'விஶ்வாக்ஷம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஞாயிறு, நவம்பர் 11, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 93

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
   |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

91. ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா ஸ்திதோ காலத்தின் உருவில் 
விஶ்ணு: பகவான் விஶ்ணு இருப்பதால் 
ஸம்வத்ஸர: அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் 
இத்யுக்த: அழைக்கப்படுகிறார்.

பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

92. ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத் ஒரு பாம்பினைப்போல 
க்ரஹீதும் அவரைப் பிடிப்பதற்கு 
அஶக்யத்வாத் இயலாதவராக இருப்பதால் 
வ்யால: பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு பாம்பு வளைந்து, நெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லை. எனவே, பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யால என்ற சொல்லிற்கு பாம்பு என்பது நேரிடைப்பொருள். இங்கு, ஆச்சார்யர் பகவானுக்கு பாம்பைப் போன்று எவருக்கும் எளிதில் வசப்படாத குணத்தை வைத்துப் பொருள் உரைக்கிறார்.