வெள்ளி, ஏப்ரல் 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 165

26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |

241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

236. ஓம் ஸுப்ரஸாதாய நம:

ஶோபன: மிக மங்களமான 

ப்ரஸாதோ அவரது கருணை 

யஸ்ய அபகாரவதாமபி தன்னை (பகவானை) அவமதித்து, தவறிழைத்த 

ஶிஶுபாலாதீனாம் சிசுபாலன் முதலானோருக்கும் 

மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி முக்தியை அளிப்பதால் 

ஸுப்ரஸாத: பகவான் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

237. ஓம் ப்ரஸன்னாத்மனே நம:

ரஜஸ்தமோப்யாம் ரஜோ மற்றும் தமோ குணங்களால் 

அகலுஶித மாசடையாதது (தீண்டப்படாதது

ஆத்மா ஆன்மாவையும் 

அந்த:கரணமஸ்யேதி மனதையும் உடையவராதலால் 

ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த:கரணம் என்றால் உள்ளுறுப்புகள் என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு மனம் என்று பொருள் கொள்வதே ஏற்புடையதாகும். 

கருணார்த்ர ஸ்வபாவத்வா கருணையே வடிவானவராக இருப்பதால் 

ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

யத்வா அல்லது 

ப்ரஸன்னஸ்வபாவத்வா மகிழ்ச்சியான இயல்புடையவராதலால் 

ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

காருணிக இத்யர்த்த: மிகவும் கருணையுள்ளவர் என்று இதற்குப் பொருள்.

மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் இங்கு 'மகிழ்ச்சியான ஸ்வபாவமுடையவர்' என்று உரை தந்துள்ளார். மேலும், இதற்கு 'பரம காருணிகர்' என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனது கருணையால் தன் அடியவர்கள் மகிழ்வதைக்கண்டு தான் மகிழ்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம். 

அவாப்தஸர்வகாமத்வாத்வா தனது அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவர் 

ப்ரஸன்னாத்மா (ஆதலால்) பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வியாழன், ஏப்ரல் 29, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 164

 25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

228ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் ஸம்ஸார சக்ரம் ஶீலமஸ்யேதி ஆவர்த்தன: 

பிறப்புஇறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால்பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

229ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் நிவ்ருத்த ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி நிவ்ருத்தாத்மா 

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும்இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லைஎனவேபகவான் 'நிவ்ருத்தாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

230ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா அவித்யயா ஸம்வ்ருதத்வாத் ஸம்வ்ருத: 

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளதுஇவ்வாறுஅறியாமையால் (அஞ்ஞானத்தால்மூடியுள்ள படியால் அவர் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

231ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் ப்ரமர்த்தயதீதி ருத்ரகாலாத்யாபிர் விபூதிபிர் இதி ஸம்ப்ரமர்த்தன:

பகவான் ருத்ரன்காலன் (காலம்ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும்அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும்அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்அழிக்கிறார்எனவேஅவர் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

232ஓம் அஹஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் ப்ரவர்த்தநாத் ஸூர்யஅஹஸம்வர்த்தக:

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

233ஓம் வஹ்னயே நம:

ஹவிர் வஹநாத் வஹ்னி: 

யாகங்களிலும்ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் தேவர்களின் உணவுதேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

234ஓம் அனிலாய நம:

அனிலயஅனில:

(காற்று வடிவில்எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் அனில:

பகவான் வாயு (காற்றின்வடிவாய் உள்ளார்காற்றிற்கு தொடக்கமோமுடிவோ இல்லைஎனவேகாற்றின் வடிவில் இருக்கும் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அனில:.

பகவான் வாயு (காற்றின்வடிவாய் உள்ளார்அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்கமுடியாதுஎனவேபகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா அனில:

(மூச்சுக்காற்றின் வடிவில்அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

235ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண வராஹரூபேண ச தரணீம் தத்த இதி தரணீதர:

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார்மேலும்பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார்எனவேபகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புதன், ஏப்ரல் 28, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 163

25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

234. ஓம் அனிலாய நம:

அனிலய: (காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் 

அனில: பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் தொடக்கமும், முடிவும் இல்லாமையால் 

அனில: பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது 

அனில: எனவே பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா (மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் 

அனில: பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனில: என்றால் ஓரிடத்தில் நிலையில்லாதது (காற்று) என்று பொருள். இந்த திருநாமத்தையும் அவ்வாறே ஆச்சார்யர் விளக்கியுள்ளார். இதிலுள்ள வெவ்வேறு அர்த்தங்களால், வாயுவின் வெவ்வேறு குணங்களைக் கொண்டு பகவானை வர்ணித்துள்ளார் ஆதிசங்கரர்.

235. ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண ஆதிசேடன், எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) ஆகிய வடிவிலும் 

வராஹரூபேண ச வராஹ அவதாரத்தின் பொழுதும் 

தரணீம் பூமியை 

தத்த இதி தாங்குவதால் 

தரணீதர: பகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், ஏப்ரல் 27, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 162

25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

232. ஓம் அஹ: ஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்

ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற 

ஸூர்ய: கதிரவனின் வடிவானவராய் இருப்பதால் 

அஹ: ஸம்வர்த்தக: பகவான் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

233. ஓம் வஹ்னயே நம:

ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு

வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும் 

வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திங்கள், ஏப்ரல் 26, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 161

 25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

230. ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா (பரம்பொருளை நம்மிடமிருந்து) மறைக்கும் தன்மையுடைய 

அவித்யயா அறியாமையால் 

ஸம்வ்ருதத்வாத் மூடப்பட்டுள்ளார் 

ஸம்வ்ருத: எனவே, பகவான் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி, அஞ்ஞானத்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா தளைப்பட்டிருக்கிறான். ஞானத்தால் பரப்ரஹ்மத்தை உணர்ந்து மோக்ஷமடைகிறான். இங்கு, பரம்பொருளை அஞ்ஞானம் சூழ்ந்தது என்று பொருளல்ல (பகவானை அஞ்ஞானம் தீண்டாது). நமது அஞ்ஞானமானது (அறியாமையானது) பகவானை நம்மிடமிருந்து மூடி மறைத்துள்ளது என்று பொருள் கொள்ளவேண்டும். 

231. ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் எல்லோரையும், எல்லாவிடங்களிலிருந்தும் 

ப்ரமர்த்தயதீதி அழிக்கிறார் 

ருத்ரகாலாத்யாபிர் ருத்ரன், காலன் (காலம்

விபூதிபிர் இதி ஆகிய உருவங்களை தரித்து 

ஸம்ப்ரமர்த்தன: பகவான் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்யக் + ப்ரமர்த்தய = ஸம்ப்ரமர்த்தன

ஞாயிறு, ஏப்ரல் 25, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 160

25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

228. ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் சுழற்றுவது (சுழற்றுவதை

ஸம்ஸார சக்ரம் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை 

ஶீலமஸ்யேதி இயற்கையான குணமாக (கொண்டுள்ளபடியால்

ஆவர்த்தன: பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

229. ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் ஸம்ஸாரத் தளைகளில் 

நிவ்ருத்த ஆத்மா கட்டுப்படாத ஆத்மா (ஆத்மாவை உடையவராக இருப்பதால்

ஸ்வரூபமஸ்யேதி இயற்கையாகவே 

நிவ்ருத்தாத்மா பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.