வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 120

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
 

141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
                146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை
ஸஹதே வெற்றி கொள்கிறார் 
அபிபவதீதி அடக்குகிறார் 
ஸஹிஶ்ணு: எனவே பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸஹதே என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.

145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண 'ஹிரண்யகர்பரின்' வடிவில் 
ஜகதாதாவுத்பத்யதே இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார் 
ஸ்வயமிதி தாமே வந்து 
ஜகதாதிஜ: எனவே, பகவான் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

146. ஓம் அனகாய நம:
அகம் பாபங்கள் 
ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை 
அனக: எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக - பாபங்கள்; அனக பாபங்களற்றவர்

‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 119

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||



இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:


141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
                146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

141. ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஒளிவடிவானவர் 
ஏகரஸத்வாத் மாற்றமில்லாதவர் 
ப்ராஜிஶ்ணு: எனவே, பகவான் 'ப்ராஜிஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

142. ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா அனுபவிக்க வேண்டிய பொருளாக 
ப்ரக்ருதிர் மாயா 'ப்ரக்ருதி' என்று அழைக்கப்படும் இந்த மாயை 
போஜனம் (அந்த மாயையின் வடிவாக இருப்பதால்) பகவான் 'போஜனம்' என்ற திருநாமத்தால் 
இத்யுச்யதே அழைக்கப்படுகிறார்.

ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் 'போஜனம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

143. ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண புருஷனின் வடிவில் 
தாம் புங்க்தே பகவான் (அந்த ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் பொருள்களை) அனுபவிக்கிறார் 
இதி போக்தா எனவே அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரண்டு திருநாமங்களை ஆதிசங்கரர் ப்ரக்ருதி-புருஶ தத்துவத்தைக் கொண்டு விளக்குகிறார். அனைத்தும் பரம்பொருளே. ப்ரக்ருதியின் வடிவில் அனைத்து அனுபவங்களாயும் இருப்பவரும் பகவானே. அவரே, புருஶனின் (அதாவது ஆத்மாவின் வடிவில்) அனைத்தையும் அனுபவிக்கிறார்.
பொது வழக்கில் போஜனம் என்றால் உண்ணும் உணவைக் குறிக்கும், போக்தா என்றால் உண்பவரைக் குறிக்கும். ஆனால், உண்மையில் நாம் அனைத்துப் புலன்களாலும் அனுபவிக்கும் எல்லா பொருட்களுக்குமே 'போஜனம்' என்றுதான் பெயர்.

சனி, ஆகஸ்ட் 10, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 118

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் (சுருக்கமான) விளக்கமும்
133ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அத்யக்ஷயதீதி லோகாத்யக்ஷ: ஸர்வேஶாம்  லோகானாம் ப்ராதான்யேனோபத்ருஶ்டா
பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்மேற்பார்வையிடுகிறார்எனவேஅவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

134ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி ஸுராணாம் அத்யக்ஷ: ஸுராத்யக்ஷ: 
பகவான்உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றிஇந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதைமேற்பார்வையிடுகிறார்எனவேபகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

135ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ ஸாக்ஷாத் ஈக்ஷதே அனுரூபம் ஃபலம் தாதும் தஸ்மாத் தர்மாத்யக்ஷ:
பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும்அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காகசரிவர நோக்குகிறார்எனவேஅவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

136ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச கார்யரூபேண அக்ருதஸ்ச காரணரூபேணேதி க்ருதாக்ருத:
பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார்ஆனால்அவர் செயல்களற்று இருக்கிறார்அனைத்தும் அவரே (காரியம்). எனவேஅனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம்ஆனாலும்பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லைஎனவேஅவர் செயல்களற்றும் இருக்கிறார்எனவேபகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

137ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர ஆத்மானோ மூர்த்தயோ 
யஸ்ய ஸ: சதுராத்மா 
பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார்எனவேஅவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

138ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
இதி வ்யாஸவசனாத் சதுர்வ்யூஹ: 
பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர்ஸங்கர்ஷணர்ப்ரத்யும்னர்அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார்எனவேஅவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

139ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ யஸ்யேதி சதுர்தம்ஶ்ட்ர: ந்ருஸிம்ஹவிக்ரஹ:
பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார்எனவேஅவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தம்ஶ்ட்ரேத்யுச்யதே சதுர்தம்ஶ்ட்ர:
அல்லது, தோற்ற ஒப்புமையால் கொம்புகளை பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள். பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

140ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ புஜா அஸ்யேதி சதுர்புஜ: 
நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 117

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:


133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:



137. ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு படைத்தல் முதலான காரியங்களுக்காக 
ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர நான்கு வெவ்வேறு 
ஆத்மானோ மூர்த்தயோ உருவங்கள் 
யஸ்ய ஸ: எவர் எடுக்கிறாரோ, அந்த பகவான் 
சதுராத்மா 'சதுராத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ்ததைவாகிலஜந்தவ: |
விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஶ்டிஹேதவ: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.31)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ரஹ்மா, தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகள், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் படைக்கும் காலத்தில் பகவான் ஹரியின் தோற்றங்களாகும்.

விஶ்ணோர்மன்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ: |
ஸ்திதேர்நிமித்தபூதஸ்ய விஶ்ணோரேதா விபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.32)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணு, மனு முதலானோர், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் காக்கும் காலத்தில் பகவான் விஶ்ணுவின் தோற்றங்களாகும். 

ருத்ர: காலோSந்தகாத்யாஸ்ச ஸமஸ்தாஸ்சைவ ஜந்தவ: |
சதுர்தா ப்ரளயாயைதா ஜனார்தனவிபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.33)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ருத்ரன், காலம், யமன் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் அழிக்கும் ப்ரளய காலத்தில் பகவான் ஜனார்தனரின் தோற்றங்களாகும்.
இதி வைஶ்ணவபுராணே – இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

138. ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
பகவான் ஜனார்தனர் (வேதங்களிலும், மற்ற ஶ்ருதிகளிலும்) மிகவும் புகழப்பெற்ற தனது வடிவத்தை வாஸுதேவர் முதலிய நான்கு வடிவங்களாக வகுத்துக் கொண்டு படைப்பு முதலிய செயல்களைப் புரிகிறார்.
இதி வ்யாஸவசனாத் ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி 
சதுர்வ்யூஹ: பகவான் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யூஹ என்றால் வகுத்தல், அல்லது பிரித்துக் கொள்ளுதல் என்று பொருள்.

139. ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ நான்கு தெற்றிப் பற்களை 
யஸ்யேதி எவரிடம் உள்ளதோ 
சதுர்தம்ஶ்ட்ர: (அந்த பகவான்) 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ந்ருஸிம்ஹவிக்ரஹ: ஸ்ரீநரஸிம்ஹ மூர்த்தி.

பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது 
ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தோற்ற ஒப்புமையால் கொம்புகளை 
தம்ஶ்ட்ரேத்யுச்யதே பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள் 
சதுர்தம்ஶ்ட்ர: பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சத்வாரி ஶ்ருங்கா:' (ரிக்வேதே)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது:
(அவருக்கு) நான்கு கொம்புகள் உள்ளது.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

140. ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ நான்கு 
புஜா திருத்தோள்களை 
அஸ்யேதி உடையவராதலால் 
சதுர்புஜ: பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்த நான்குத் திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தி இருக்கும் பகவானின் திருஉருவம் மிகவும் பிரபலாமானது.