செவ்வாய், செப்டம்பர் 29, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 138

 20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்: 

183. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:

யஸ்ய எவருடைய 

வக்ஷஸ்ய திருமார்பில் 

அநபாயினி அவரைவிட்டு என்றும் அகலாது 

ஸ்ரீர்வஸதி மஹாலக்ஷ்மி வசிக்கிறாளோ 

: ஸ்ரீநிவாஸ: (அவர்) பகவான் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள்

மஹாலக்ஷ்மித் தாயார் பகவானின் மார்பை விட்டு என்றும் அகலாது வசிக்கின்றபடியால், அவர் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நித்யைவேஶா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா (திருவாய்மொழி) 

184. ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் வைதிகானாம் 'ஸத்துக்கள்' - வேதத்தையும், அதில் கூறியுள்ள தர்மங்களையும் பின்பற்றுபவர்கள் 

ஸாதூனாம் அத்தகைய ஸாதுக்களின் 

புருஶார்த்தசாதன (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நால்வகை நலன்களையும் 

ஹேது: வழங்குபவராய் இருப்பதால் 

ஸதாம்கதி: பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்றால் காரணம், உதவி செய்பவர் என்று பொருள். சாதுக்களுக்கு அவரே கதி. எனவே, அவர்களுக்கு அனைத்தையும் பகவானே வழங்குகிறார்.

 185. ஓம் அநிருத்தாய நம:

ந கேனாபி ஒருபொழுதும் இயலாது 

ப்ராதுர்பாவேஶு (அவர்) தோன்றுமிடத்து 

நிருத்த இதி தடுத்தல் 

அநிருத்த: எனவே, பகவான் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை மட்டுமல்ல, அவரது ஸங்கல்பத்தையும் எவராலும் தடுக்க இயலாது.

186. ஓம் ஸுரானந்தாய நம:

ஸுர தேவர்களுக்கு 

ஆனந்தயதீதி ஆனந்தத்தை அளிப்பதால் 

ஸுரானந்த: பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது அனைத்து அவதாரங்களுமே தேவர்களின் துயர் துடைக்க, அவர்களது வேண்டுதலின்படியே நிகழ்கின்றன.

ஞாயிறு, செப்டம்பர் 06, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 137

20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்: 

181. ஓம் மஹேஶ்வாஸாய நம:
மஹான் மிகச்சிறந்த இஶ்வாஸ வில்லை இஶுக்ஷேபோ அம்புகளை எய்யக்கூடிய யஸ்ய ஸ உள்ளவர் (ஆதலால்) மஹேஶ்வாஸ: பகவான் 'மஹேஶ்வாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மழைநீர்ப் போல அம்புகளை வர்ஶிக்கக்கூடிய 'ஸார்ங்கம்' என்னும் மிகச்சிறந்த வில்லை உடையவராதலால் அவர் 'மஹேஶ்வாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

182. ஓம் மஹீபர்த்ரே நம:
ஏகார்ணவ ப்ரளய ஜலத்தில் (ஸமுத்ரத்தினுள்) ஆப்லுதாம் அழுந்தி வருந்தியிருந்த தேவீம் மஹீம் ச பூமாதேவியை பபாரேதி (அந்த ஸமுத்ர ஜலத்திலிருந்து) வெளிக்கொணர்ந்து, தாங்கியபடியால் மஹீபர்த்தா பகவான் 'மஹீபர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் ஸமுத்ர ஜலத்தினுள் அழுந்தி, வருந்திக்கொண்டிருந்த பூமாதேவியை அதனின்று வெளிக்கொணர்ந்து, தாங்கிய படியால் பகவான் 'மஹீபர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமாதேவியைக் காத்த வரலாறு: ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பகவானிடம் பகை கொண்டு, அவரது மனைவியான பூமாதேவியை ப்ரளய ஜலத்தினுள் வைத்தான். வராஹ அவதாரம் எடுத்த பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொன்று, பூமாதேவியை ப்ரளய கால ஸமுத்ர ஜலத்திலிருந்து மீட்டார். திருவிடந்தை போன்ற தலங்களில், பூமாதேவியை தனது மடியில் தாங்கிய வராஹ ஸ்வாமியை நாம் தரிசிக்கலாம்.

நாச்சியார் திருமொழி: பாசிதூர்ந்து கிடந்த பார்மகளை பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர்...

வியாழன், செப்டம்பர் 03, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 136

  19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

173ஓம் மஹாபுத்தயே நம:
புத்திமதாமபி புத்திமத்வாத் மஹாபுத்தி: 
அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

174ஓம் மஹாவீர்யாய நம:
மஹத் உத்பத்திகாரணம் அவித்யாலக்ஷணம் வீர்யமஸ்யேதி 
மஹாவீர்ய:
நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும்எனவேபகவான் 'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

175ஓம் மஹாஶக்தயே நம:
மஹதி ஶக்திஸாமர்த்யம் அஸ்யேதி மஹாஶக்தி: 
மிகவும் திறமைசாலியானவர்எனவேபகவான் 'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

176ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி த்யுதிர் பாஹ்யாப்யந்தரா ச அஸ்யேதி மஹாத்யுதி:

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்ஒளிபொருந்தியவர்எனவேஅவர் 'மஹாத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

177ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததிதி நிர்தேஶ்டும் யன் ந ஶக்யதே பரஸ்மை ஸ்வஸம்வேத்யத்வாத்  அநிர்தேஶ்யம் வபுரஸ்யேதி அநிர்தேஶ்யவபு: பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்தகையது என்று தீர்மானிக்க இயலாதநம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு 'அநிர்தேஶ்யம்என்று பெயர்அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாததிருமேனியைக் கொண்டவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

178ஓம் ஸ்ரீமதே நம:

ஐஸ்வர்யலக்ஷணா ஸமக்ரா ஸ்ரீர் யஸ்ய ஸ்ரீமான் 

அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள்பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவேபகவான் 'ஸ்ரீமான்' (திருவுடையவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

179ஓம் அமேயாத்மனே நம:

ஸர்வைப்ராணிபிர் அமேயா புத்திராத்மா யஸ்ய ஸ அமேயாத்மா 

பகவானின் ஞானத்தையும்தன்மையையும் யாராலும் அளவிட முடியாதுஎனவேஅவர் 'அமேயாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

180ஓம் மஹாத்ரித்ருஶே நம:

மஹாந்தம் அத்ரிம் கிரிம் மந்தரம் கோவர்த்தனம் ச அம்ருதமதனே கோரக்ஷணே ச த்ருத்வான் இதி மஹாத்ரித்ருக் 

பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலைஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் 'மஹாத்ரித்ருக்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.