செவ்வாய், செப்டம்பர் 29, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 138

 20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்: 

183. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:

யஸ்ய எவருடைய 

வக்ஷஸ்ய திருமார்பில் 

அநபாயினி அவரைவிட்டு என்றும் அகலாது 

ஸ்ரீர்வஸதி மஹாலக்ஷ்மி வசிக்கிறாளோ 

: ஸ்ரீநிவாஸ: (அவர்) பகவான் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள்

மஹாலக்ஷ்மித் தாயார் பகவானின் மார்பை விட்டு என்றும் அகலாது வசிக்கின்றபடியால், அவர் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நித்யைவேஶா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா (திருவாய்மொழி) 

184. ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் வைதிகானாம் 'ஸத்துக்கள்' - வேதத்தையும், அதில் கூறியுள்ள தர்மங்களையும் பின்பற்றுபவர்கள் 

ஸாதூனாம் அத்தகைய ஸாதுக்களின் 

புருஶார்த்தசாதன (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நால்வகை நலன்களையும் 

ஹேது: வழங்குபவராய் இருப்பதால் 

ஸதாம்கதி: பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்றால் காரணம், உதவி செய்பவர் என்று பொருள். சாதுக்களுக்கு அவரே கதி. எனவே, அவர்களுக்கு அனைத்தையும் பகவானே வழங்குகிறார்.

 185. ஓம் அநிருத்தாய நம:

ந கேனாபி ஒருபொழுதும் இயலாது 

ப்ராதுர்பாவேஶு (அவர்) தோன்றுமிடத்து 

நிருத்த இதி தடுத்தல் 

அநிருத்த: எனவே, பகவான் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை மட்டுமல்ல, அவரது ஸங்கல்பத்தையும் எவராலும் தடுக்க இயலாது.

186. ஓம் ஸுரானந்தாய நம:

ஸுர தேவர்களுக்கு 

ஆனந்தயதீதி ஆனந்தத்தை அளிப்பதால் 

ஸுரானந்த: பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது அனைத்து அவதாரங்களுமே தேவர்களின் துயர் துடைக்க, அவர்களது வேண்டுதலின்படியே நிகழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக