புதன், மார்ச் 13, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 104

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

109. ஓம் ஸமாய நம:
ஸர்வகாலேஶு அனைத்து காலங்களிலும் 
ஸர்வவிகார எவ்வித மாறுபாடுகளும் 
ரஹிதத்வாத் அற்றிருப்பதால் 
ஸம: பகவான் 'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லை. எனவே, அவர் 'ஸம:' (எப்பொழுதும் மாறாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு 'ஸம' என்பதற்கு எக்காலத்திலும் அவர் மாற்றமின்றி சமமாகவே இருக்கிறார் என்று பொருள்

மயா '' என்றால் 
லக்ஷ்ம்யா மஹாலக்ஷ்மியைக் குறிக்கும் 
ஸஹ வர்தத இதி வா (மஹாலக்ஷ்மியுடன்) எப்பொழுதும் கூடியிருப்பதால் 
ஸம: பகவான் 'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான் 'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- உடன் + - மஹாலக்ஷ்மி = ஸம:

110. ஓம் அமோகாய நம:
பூஜித: (தன்னை) வழிபட்டாலோ 
ஸ்துத: துதித்தாலோ 
ஸம்ஸ்ம்ருதோ வா (மனதார) நினைத்தாலோ 
ஸர்வஃபலம் அனைத்துப் பலன்களையும் 
ததாதி வா வாரி வழங்குவதால் 
ந வ்ருதா கரோதீதி அவற்றை வீணாக்காது 
அமோக: பகவான் ' அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடு, துதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார். எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவிதத உண்மையான, என்றுமே நிறைவேறக்கூடிய​ 
ஸங்கல்பாத் வா எண்ணம் (அல்லது விருப்பம்) உடையவராதலால் 
அமோக: பகவான் ' அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன. எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமோக என்ற சொல்லிற்கு, பலன்கள் மற்றும் வெற்றி என்று இரு பொருள்கள் உண்டு. முதல் அர்த்தம் 'பலன்கள்' (பலனளிப்பவர்) என்ற பொருளிலும் இரண்டாவது அர்த்தம் 'வெற்றி பெருபவர்' (தன் எண்ணங்கள் ஈடேறுவதில் தோல்வியைக் காணாதவர்) என்ற பொருளிலும் விளக்கப்பட்டிருக்கிறது.

'ஸத்யஸங்கல்ப:' (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(பரப்ரஹ்மத்தின்) அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெருகின்றன

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக