சனி, டிசம்பர் 01, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 98


11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:


வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
   |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


99. ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின் 
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால் 
ஸர்வாதி: பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

100. ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) 
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை 
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை 
இதி அச்யுத: எனவே, பகவான் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார். 
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:

'யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா'
நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் "அச்யுதன்" ஆவேன்.

இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.

இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது

 
இந்த முதல் நூறு திருநாமங்களை காஞ்சி ஆச்சார்யாள் மற்றும் கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக