ஞாயிறு, ஏப்ரல் 21, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 109

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
                   114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

119. ஓம் அம்ருதாய நம:
ந வித்யதே அடைவதில்லை 
ம்ருதம் மரணம் 'ம்ருதம்' என்றால் மரணம் 
அஸ்யேதி எனவே 
அம்ருத: பகவான் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு மரணம் என்பதே கிடையாது. எனவே, அவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஜரோSமர:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.25)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மமான பகவான்) மூப்பற்றவர், இறவாதவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

120. ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ நிரந்தரமானவர் 
ஸ்தாணுஸ்சேதி நிலையானவர் 
ஶாஶ்வதஸ்தாணு: (எனவே) பகவான் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

121. ஓம் வராரோஹாய நம:
வர அழகிய 
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி இடையை (மடியை) உடையவராதலால் 
வராரோஹ: பகவான் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆரோஹ என்றால் இடைப்பகுதி (அல்லது மடி)

வரம் மிகச்சிறந்த 
ஆரோஹணம் ஏற்றம் (ஏற்றமான இடம்
யஸ்மின்னிதி வா எவருடையதோ 
ஆரூடனாம் எங்கு சென்றால் 
புனராவ்ருத்யஸம்பவாத் (இந்த ஸம்ஸாரத்தினுள்) திரும்பி வருதல் இல்லையோ 
வராரோஹ: பகவான் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை. அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வரம் - மிகச்சிறந்த + ஆரோஹணம் - ஏறுதல் = வராரோஹ:
புனராவ்ருத்தி + அஸம்பவாத் = புனராவ்ருத்யஸம்பவாத்

' புனராவர்த்ததே' (சாந்தோக்ய உபநிஶத் 8.15.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த உத்தமமான இடத்தை அடைந்தவன்) மீண்டும் இங்கு வருவதில்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'யத் கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம' || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.6)
ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எதனை எய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

122. ஓம் மஹாதபஸே நம:
மஹத் மிகச்சிறந்த 
ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் 
தபோ 'தப' என்றால் 
ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால் 
மஹாதபா: பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யஸ்ய ஞானமயம் தப:' (முண்டக உபநிஶத் 1.1.9)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின் 
ப்ரதாபோ வா வீரத்தின் 
தபோ காந்தி (ஒளி
மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும் 
மஹாதபா: எனவே, பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முதல் விளக்கத்தில் 'தப' என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் 'தப' என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக