சனி, ஏப்ரல் 20, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 108

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
                   114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

116. ஓம் பப்ரவே நம:
பிபர்த்தி தாங்குகிறார் 
லோகானிதி அனைத்து உலகங்களையும் (இந்தப் ப்ரபஞ்சத்தையும்) 
பப்ரு: பகவான் 'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களையும், இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான் 'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

117. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் 
காரணத்வாத் மூலகாரணமாக இருப்பதால் 
விஶ்வயோனி: பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 'ஓம் விஶ்வரேதஸே நம:' என்ற 88வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே உரையை எழுதியுள்ளார் (விஶ்வஸ்ய காரணத்வாத்). அங்கு 'ரேதஸ்' (தந்தையின் வீர்யம்), இங்கு 'யோனி' (தாயின் கரு). மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் இவை இரண்டும் வெவ்வேறாக இருக்கும். ப்ரபஞ்சம் பகவானிடமிருந்து நேரடியாகத் தோன்றுவதால், ப்ரபஞ்சத்திற்கு (ரேதஸ், யோனி ஆகிய) இந்த இரண்டுமே பகவான்தான். எனவே, இரண்டு திருநாமங்களுக்கும் ஒரே உரை தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால் புனருக்தி தோஷம் கிடையாது.

118. ஓம் ஶுசிஶ்ரவஸே நம:
ஶுசீனி தூய்மையானவை (தூய்மைபடுத்த வல்லவை
ஶ்ரவாம்ஸி கேட்பது 
நாமானி அவரது திருநாமங்கள் 
ஶ்ரவணீயான்யஸ்யேதி கேட்கத் தகுந்தவை (கேட்பதற்கு உகந்தவை
ஶுசிஶ்ரவா: (எனவே) பகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானது. அவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவை. எனவே, பகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶுசி - தூய்மையானது + ஶ்ரவா - அவரைப் பற்றிக் கேட்பது = ஶுசிஶ்ரவா:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக