வெள்ளி, மே 17, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 111

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

123. ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர எங்கும் 
கச்சதீதி செல்வதால் 
ஸர்வக: பகவான் 'ஸர்வக' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய் 
வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார் 
ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் 'ஸர்வக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

124. ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் அனைத்தையும் 
வேத்தி அறிவதனாலும் 
விந்ததீதி வா அடைவதனாலும் 
ஸர்வவித் பகவான் 'ஸர்வவித்' என்று அழைக்கப்படுகிறார்
பாதீதி பானு: ஒளி வீசுவதால் 'பானு' என்று அழைக்கப்படுகிறார்.

'தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்' (கதோபநிஷத் 2.2.15)
கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:
ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).
இத்யாதிஸ்ம்ருதேஸ்ச இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும் 
பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும் 
ஸர்வவித்பானு: பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

125. ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் 'விஶ்வ' என்ற சொல்லிற்கு 
ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள்
விஶ்வ எங்கும் 
கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று 
தைத்யஸேனா அஸுரப் படைகளை 
யஸ்ய எவர் 
ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால் 
விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் 'விஶ்வக்ஸேனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஶ்வ' என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் 'விஶ்வக்ஸேனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக