ஞாயிறு, மே 26, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 112

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

126. ஓம் ஜனார்தனாய நம:
ஜனான் துர்ஜனான் 'ஜன' என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்
அர்தயதி ஹினஸ்தி அவர்களை 'அர்தனம்' செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார் 
நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார் 
ஜனார்தன: எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை 
அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக 
நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த 
யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால் 
ஜனார்தன: எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

127. ஓம் வேதாய நம:
வேதரூபத்வாத் வேதமே வடிவாக இருப்பதால் 
வேத: பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதயதீதி வா அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் 
வேத: பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேஶாமேவானுகம்பார்த்தமஹமஞானஜம் தம: |
நாஶயாம்யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.11)
ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

128. ஓம் வேதவிதே நம:
யதாவத் உள்ளவாறு    
வேதம் வேதங்களையும் 
வேதார்த்தம் அந்த வேதங்களின் உட்பொருளையும் 
வேத்தீதி அறிவதால் 
வேதவித் பகவான் 'வேதவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும், அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.15)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்வே வேதா: ஸர்வேவேத்யா: ஸஶாஸ்த்ரா:
ஸர்வே யஞ்யா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண: |
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோ
யே தேஶாம் ஸர்வயஞ்யா: ஸமாப்தா: || (மஹாபாரதம்)
அனைத்து ஸாஸ்திரங்கள், வேதங்கள், அறியக்கூடிய (அறிய வேண்டிய) அனைத்தும், அனைத்து யாகங்களும், பூஜிக்கப்படும் அனைத்தும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனே ஆவார். ஓ அரசனே!!! பகவான் ஸ்ரீக்ருஷ்ணரை உள்ளபடி உணர்ந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியவர் ஆவர் (அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியதற்கு இணையான பலனை அவர்கள் அடைகின்றனர்).


இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக