ஞாயிறு, பிப்ரவரி 16, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 129

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:


163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |

169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||


இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


163. ஓம் வேத்யாய நம:

நி:ஶ்ரேயஸார்த்திபிர் மிகச்சிறந்த பலனான (மோக்ஷத்தை) விரும்புவர்களால் 
வேதனார்ஹத்வாத் அறியப்படுபவர் 
வேத்ய: எனவே, பகவான் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார்.எனவே, அவர் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நி:ஶ்ரேயஸ் - உயர்ந்த பலன்; ஆர்த்தி - விழைபவர்கள்; வேதனார் அறியப்படுபவர்



164. ஓம் வைத்யாய நம:

ஸர்வவித்யானாம் அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்
வேதித்ருத்வாத் அறிபவராதலால் 
வைத்ய: பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீக்ருஷ்ண அவதாரத்தில் ஸாந்தீபனி முனிவரிடத்தில் அறுபத்து நான்கே நாட்களுள் ஆயக்கலைகள் அனைத்தையும் பயின்றார் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக